Keto diet என்றால் என்ன? | நன்மைகள் | செய்யும் முறைகள்

By Santhosh

Updated on:

keto diet in tamil

கீடோ டயட் தமிழில் | Keto Diet in Tamil:

மனிதன் இனம் தொடங்கிய காலத்தில் இருந்தே இன்றுவரை தன்னுடைய அடிப்படை தேவைகளில் பல மாற்றத்தை உள்நிறுத்தி பரிணமித்துக்கொண்டே வருகிறது. இதில் உணவு முறைகள் மிகுந்த பங்குவகிக்கிறது.

நாகரிக வளர்ச்சி தொடர்ந்து நகர்ந்துக்கொண்டிருக்கும் இந்தகாலத்தில் மனிதர்களுடைய உணவு முறை பெரிதும் மாற்றத்தை கண்டுக்கொண்டது. இதன் விளைவாக மனிதர்களுக்கு உடல்பருமன்(Obesity) ஏற்படுகிறது.

இந்த உடல் பருமனை குறைக்க (Weight loss) பலவிதமான உடற்பயிற்சிகளையும், விரத முறைகளையும் செய்கிறார்கள். இது போன்ற உடல் எடை குறைக்கும் முறைகளில் (Weight loss technique) மிகவும் பிரபலமாக அறியப்படும் முறைகளில் ஒன்றுதான் keto diet. (keto diet in tamil)

Keto diet என்றால் என்ன? | What is Keto diet in Tamil?

Keto diet என்று சொல்லும் பொழுது, இது ஒரு low carb diet என்று சொல்லுகிறார்கள். அதாவது பொதுவாக நம் உடலானது இயங்குவதற்கு முக்கியமான இரண்டு வகையான எரிபொருள்கள் தேவைப்படுகிறது. ஒன்று கார்போஹைட்ரேட்(Carbohydrate), கொழுப்பு (fat) மற்றொன்று புரதம் (protein).

இவைகளில் இருந்துதான் உங்கள் உடம்பிற்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது. எனவே, நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் Carbohydrate அளவு குறைவாக இருந்து கொழுப்பின் அளவு அதிகமாக இருந்தால் அது Keto Diet அல்லது Ketogenic Diet அல்லது Low carb diet.

Keto Diet உங்கள் உடல் எடையை மிக வேகமாக குறைக்கும் முறை என்று பல அறிவியலாளர்களால் நிருபிக்கப்பட்டுள்ளது. எப்படி என்றால்? கீட்டோ Diet நீங்கள் செய்யும்போது நம் உடல் ஒரு கொழுப்பை குறைக்கும் இயந்திரமாக (Fat Burning Machine) செயல்படுகிறது. இதனை புரிந்துக்கொள்ள உடலுக்கு எப்படி ஆற்றல் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.

அதாவது, மனித இனம் ஆரம்ப காலத்தில் தனது உணவு தேவைக்காக பல மிருகங்களை வேட்டையாடி மாமிச (Meat) உணவுகளை உண்டு வந்தது. இந்த மாமிச உணவில் fat மற்றும் protein மூலம் நம் உடளுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களும் கிடைத்துகொண்டிருந்தது.

இதனால் நம் உடலில் கொழுப்பின் அளவு அதிகமாக தேங்கி இருக்காமல், ஆற்றலின் தேவைக்காக உடலில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்து போனது.

ஆனால் இன்றைய நாகரீக வளர்ச்சியில் விவசாயத்தை தொடர்ந்து வந்த நாம் உணவு முறைகளில் அரிசி, கிழங்கு போன்ற carbohydrate அதிகம் உள்ள உணவுகளையே உண்டு பழக்கப்பட்டுவிட்டோம். இந்த carbohydrate உணவின் வழியாக நம் உடலுக்குள் சென்றவுடன் முதலில் glucose ஆக மாற்றபடுகிறது. இந்த glucose மூலமாகதான் நம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது.

உடல் எடை எப்படி அதிகரிக்கிறது?

நாம் அதிகம் எடுத்துக்கொள்ளும் Carbohydrate மூலம் Glucose அளவு அதிகரிக்கிறது. இதனால் கூடுதலாக இருக்கும் Glucose, Glycogenesis என்னும் செயல்முறையின் மூலம் Glycogen ஆகா பரிணமிமிக்கும். இந்த glycogen அளவும் அதிகரிக்க அதிகரிக்க fat உருவாகி, உடலிலேயே தேங்கிவிடுகிறது.

எனவே ஆற்றலில் தேவைக்காக கொழுப்பில் இருந்து எடுக்கப்படுவது நிருத்தப்பட்டுவிடும். காரணம், நம் உடல் ஆற்றலுக்காக கார்போஹைட்ரேடை முதலில் குறிவைத்து. இதனால் நம் உடலில் உள்ள fat கரைக்கப்படுவது நின்றுபோய், அதன் விளைவாக fat அளவு அதிகரித்து உடல் எடையும் அதிகரித்தது.

இன்றைய உணவு முறைகளில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் அனைத்திலுமே carbohydrate அதிக அளவு இருக்கிறது. இந்த Carbohydrate அதிகம் உள்ள உணவுகளை குறைத்துவிட்டு, போதுமான அளவு Protein அதிக அளவு fat உள்ள உணவுகளை நம் உணவு முறைகளில் எடுத்துகொண்டால், நம் உடல் கொழுப்பில் இருந்து தேவையான ஆற்றலை எடுத்துக்கொண்டு, கொழுப்பை கரைத்து, உடல் எடையும் குறைந்துவிடலாம்.

இது எப்படி நடக்கிறது என்றால், உங்கள் உடலுக்கு glucose மூலம் கிடைத்துகொண்டிருந்த ஆற்றல் நின்றுபோனதால், ஆற்றலின் தேவைக்காக உங்கள் உடலில் தேங்கி இருக்கும் கூடுதலான கொழுப்பை கரைந்து Ketogenesis என்னும் செயல்முறையின் மூலம் Ketone என்னும் மூலக்கூறு உருவாகிறது. இந்த ketone நம் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது.

Keto Diet நன்மைகள் | Keto diet Benefits in Tamil

  • keto diet, நீங்கள் ஆரோகியமாக வாழ ஒரு அருமையான உணவுமுறையை கொடுக்கிறது.
  • சர்க்கரை நோய் இருப்பவர்கள் இந்த keto diet எடுத்துக்கொள்வதன் மூலம் அவர்களின் insulin அளவு குறைய வாய்பிருக்கிறது. இதனால் சர்க்கரை நோயில் இருந்து விடுபடுவார்கள்.
  • keto diet cancer நோயை குணபடுத்தும் என்றும் நிருபிக்கபடுகிறது, அதாவது உடல் வளர்சிக்கு முக்கியமான தேவைகளில் ஒன்றான insulin அளவு குறைவதால், cancer செல்களும் வளர்ந்து பெருகுவது குறைக்கிறது.
  • keto diet மிக முக்கியமாக எல்லோரும் தேர்ந்தெடுப்பதன் காரணம் weight loss, நம் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  • நம் மூளை வேகமாக செயல்படவும் என்றும் சுருருப்பக இருக்கவும் keto diet உதவுகிறது.
  • keto diet தொடர்ந்து செய்பவர்களுக்கு வயிற்று தொப்பை என்பதே வராது.
    நாம் என்றும் இளமையாக இருப்பதற்கும் keto diet உதவுகிறது.

கீட்டோ உணவு முறைகள் | Keto diet Foods in Tamil

keto diet என்று வரும் போது நாம் உட்கொள்ளும் உணவு தான் இங்கு மிக முக்கியமானது. எனவே, எந்த உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.

Egg:

keto diet என்றால் என்ன

keto diet செய்பவர்களுக்கு முட்டை ஒரு சரியான உணவு. காரணம், இதில் ஒரு முழு முட்டையில் 6 கிராம் Protein, Carbohydrate குறைந்த அளவு, Fat அதிகமான அளவு உள்ளது. முட்டை எப்பொழுதும் புரதசத்திற்க்கு பேர்போன ஒரு உணவு, அதனால் இது keto diet தேவையான சத்துக்களை கொண்டிருக்கிறது.

Chicken:

keto diet என்றால் என்ன

100 கிராம் கோழி இறைச்சியில் 25 கிராம் புரதச் சத்து இருக்கிறது. இதில் அதிகப்படியான Cholesterol இருப்பதனால், போதுமான அளவு சரிவர எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்த அளவு பகோழியின் கால் பகுதியை உண்ணுங்கள், ஏனென்றால் அந்த பகுதியில் போதுமான அளவு Fat, குறைந்த அளவு கர்போஹைட்ரேட் இருக்கும்.

Vegetables:

keto diet in tamil

காய்கறிகள் என்றால் எல்லா வகையான காய்கறிகளையும் எடுத்துக்கொள்ளகூடாது, நார்சத்து, வைட்டமின்ஸ், அதிகம் உள்ள புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கும் உணவையும் உண்ண வேண்டும். இப்படி சாப்பிடுவதன் மூலம் உடலில் fat சேராது, வேகமாக குறைந்து போகும்.

Fish:

keto diet in tamil

keto diet யில் தவிர்க்க முடியாத ஒரு உணவு மீன், மீனில் அதிக அளவு குழுப்பு சத்து இருக்கிறது. போதுமான அளவு வைட்டமின், Protein இதில் இருக்கிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் Insulin அளவு குறைகிறது. மற்றொரு முக்கியமான ஒன்று இதில் கர்போஹைட்ரேட் என்பதே கிடையாது. இதனால் கொழுப்பை கரைக்க மீன் உணவு உதவி செய்யும்.

Olive Oil:

keto diet என்றால் என்ன

ஆலிவ் எண்ணையில் Cholesterol அளவு அதிகம் இல்லை. இதில் சீக்கிரம் கரைய கூடிய Fat இருக்கிறது. இந்த எண்ணையை வேதுவான சூட்டில் வைத்து சமைத்து சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் அதில் இருக்கும் கொழுப்பின் கரையாமல், உங்களுக்கு தேவையான கொழுப்புசத்து கிடைக்கும்.

Keto Diet நல்லதா? (Keto Diet Myths):

இந்த Diet முறை உடலுக்கு நல்லது இல்லை என்றும், Carbohydrate உடலுக்கு கிடைக்கவில்லை என்றால் உடல் செயல்படாது என்றும் Keto Diet பற்றி பேசும் பலர், கூறுவார்கள்.

இது முற்றிலும் ஒரு பொய்யான தகவல், Carbohydrate உணவுகளை தவிர்த்துவிட்டு வேறொரு உணவு முறையை தொடர விருப்பம் இல்லாதவர்கள் கூறும் ஒரு பிதற்றல்.

நம் உடல் செயல் பட Carbohydrate முக்கிய தேவை என்றெல்லாம் இல்லை, Fat மற்றும் Protein இருந்து கிடைக்கும் ஆற்றல் கூட நமக்கு போதுமானது. நம் வாழ்வை ஆரோக்கியமாக வாழ உதவும்.

Keto Diet செய்யும் முறைகள்:

Carbohydrate 5% மேல் எடுத்துகொள்ளவே கூடாது. Carbohydrate மூலம் உருவாகும் சர்க்கரை (Glucose), தன்மயில் ஒரு போதை பொருள் போன்றது. அதாவது இது வேகமாக செரிமானம் ஆக கூடிய ஒன்று, அதனால் நம் பசியை திரும்ப திரும்ப தூண்டி கொண்டே இருக்கும். நாம் அதிகம் glucose உட்கொள்ளும் போது fat உடலில் தேங்கிவிடும்.

protein எடுத்துகொல்வதிலும் மிகுந்த கவனம் கொடுக்கவேண்டும். ஏனென்றால் நம் உடலில் fat கரையுபோது உடலின் தசைகள் வளர்வதற்கான சத்தை கொடுத்தாக வேண்டும். இதற்காக தான் protein தேவைப்படுகிறது.

Fat கரைந்து ஒல்லியாக தெரியும் உங்கள் உடலில் தசைகள் வளர்வதால் உடலில் பலம் கூடும். இதிலும் ஒரு முக்கியமான ஒன்று உங்களில் maintenance calories அளவை தெரிந்துகொண்டு அதன்படி, protein எடுத்துக்கொள்ளுங்கள்.

இரண்டாம் பட்சமாக நாம் செய்ய வேண்டிய ஒன்று விரதம் இருத்தல். keto diet செய்யும் ஒருவர் வாரம் 1 அல்லது 2 முறை விரதம் இருக்கும்போது உங்களின் Fat கரைவது இன்னும் வேகமாக நடக்கும்.

விரதம் இருப்பது எல்லாருக்கும் அவசியம் இல்லை. மருத்துவ பிரச்சனையை இருப்பவர்கள் இதை முற்றிலும் தவிர்த்துவிடலாம், மேல் உள்ள இரண்டு விதிகளை மட்டும் பின்பற்றலாம்.

இதையும் படியுங்கள்:- முகத்தில் உள்ள Blackheads நீக்க 10 சிறந்த வழிகள் என்ன? எப்படி நீக்குவது?

4 2 votes
Article Rating

Santhosh

நான் ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ப்ளாகர் / டிஜிட்டல் மார்கெட்டராக பணியாற்றி வருகிறேன். fitness பைத்தியம், ஊர் சுற்றும் வாலிபன், பாடகர், குழந்தை பிரியர். மேலும் நிறைய இருக்கிறது ஆனால் சொன்னால் நம்ப மாடீங்க:)))

Related Post

Mustard Oil Benefits in Tamil | கடுகு எண்ணெயின் பயன்கள்

பொதுவாகவே நாம் பல்வேறு வகையான எண்ணெய் வகைகளை பயன்படுத்திய போதிலும்  ஒருசில எண்ணெய் வகைகளை  அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்த மறந்து விடுகிறோம். (kadugu ennai benefits in tamil) அவ்வாறான எண்ணெய் வகைகளில் கடுகு என்று சொல்லப்படக்கூடிய ...

Fenugreek Seed Benefits in Tamil | வெந்தயத்தின் நன்மைகள்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் வெந்தயம் (Fenugreek seed benefits in Tamil) இன்றியமையாத பொருளாக எமது வாழ்வில் காணப்படுகிறது. அதாவது நாம் உணவு சமைக்கும்போது  பெரும்பாலும்  வெந்தயத்தை பயன்படுத்துவது காணக்கூடியதாக இருக்கிறது.அவ்வகையில் இந்த பதிவில் வெந்தயத்தின் ...

Asparagus Benefits in Tamil / தண்ணீர்விட்டான் கிழங்கின் பயன்கள்

Asparagus benefits in Tamil :- பொதுவாகவே கிழங்கு வகைகளும் கீரை வகைகளும் மனிதனுக்கு அளவில்லாத பயன்களை தருகின்ற இயற்கையில் அமைந்த அருட்கொடையாகும. அவ்வகையில்  தண்ணீர்விட்டான் கிழங்கு ( Thanneervittaan kilangu benefits in Tamil) அவ்வாறு நன்மைகளை ...

Fennel Seeds Benefits in Tamil / பெருஞ்சீரகத்தின் பயன்கள்

Fennel seeds benefits in Tamil / சோம்பு பயன்கள் :- இன்று நாம் எமக்குத் தேவையான உணவுகளை சமைக்கும் பொழுது உணவில் பல்வேறு வகையான பொருட்களை சேர்த்து சமைக்கின்றோம். அவற்றில் பெருஞ்சீரகம் (Sombu benefits in Tamil) ...

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments