முகத்தில் உள்ள Blackheads நீக்க 10 சிறந்த வழிகள் என்ன? எப்படி நீக்குவது?

By Santhosh

Published on:

Blackheads removal Remedies

Best Home Remedies To Remove Blackheads Fast in Tamil:- முகத்தில் உள்ள Blackheads நீக்க 10 சிறந்த வழிகள்

Blackheads removal Remedies Tips in Tamil :- சருமத்தில் இயற்கையாகவே சிறிய சிறிய துளைகள் உள்ளன. அவை நம் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை மற்றும் அழுக்குகள் காரணமாக அடைக்கப்படுகின்றன. அப்படி அடைபடும் போது ஆக்சிஜனேற்றம் காரணமாக அவை blackheads ஆக மாறுகின்றன.
அப்படி ஏற்படும் blackheads சரி செய்வதை பற்றி இங்கு நாம் காணவிருக்கிறோம்.

Blackheads சரிசெய்யும் சில இயற்கை வழிமுறைகள். Blackheads removal tips in tamil

1. முகத்தை கழுவுதல் மற்றும் ஆவி பிடித்தல் ( face wash and steaming) | Remove blackheads in tamil

  • ஆவிபிடித்தல் முறையின் மூலம் நமது சருமத்தில் உள்ள அடைபட்ட துளைகள் திறக்கப்படுகின்றன இதனால் அதில் உள்ள அழுக்குகளை எளிதாக வெளியேற்ற முடியும். 
  • இதற்கு ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதனை நன்றாக கொதிக்க விடவேண்டும், பின்பு 5 முதல் 10 நிமிடங்கள் வரை அந்த நீராவியை பிடிக்க வேண்டும் பின்பு அதை உலர விட வேண்டும். 
  • இப்படி செய்வதால் நம் முகத்தின் துளைகளில் உள்ள அழுக்குகள் எளிதாக வெளியேறுகின்றன. 
  • வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இதை செய்ய வேண்டும் செய்து முடித்த பின்பு ஒரு scrub பயன்படுத்த வேண்டும்.

2. பேக்கிங் சோடா மூலம் exfoliate செய்தல் | remove blackheads

     Exfoliate செய்வதல் முகத்தில் உள்ள பிளாக் ஹெட்ஸ் நீக்குவதற்கு மிகவும் முக்கியமான ஒன்று, ஏனெனில், இது நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது. இந்த இறந்த செல்கள் நமது முகத்தில் உள்ள துளைகளை அடைக்கிறது. அதனாலேயே blackheads உருவாகுகின்றன. அதனால் இந்த இறந்த செல்களை அகற்ற exfoliate மிகவும் முக்கியமான ஒரு செயலாகும்.

தேவையான பொருட்கள் 

  • பேக்கிங் சோடா 
  • மினரல் வாட்டர் அல்லது 
  • ஆப்பிள் சீடர் வினிகர்

பயன்படுத்தும் முறை 

  • ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்துக்கொள்ள வேண்டும், அதனுடன் சிறிதளவு மினரல் வாட்டர் கலந்து அதை பேஸ்ட்டாக மாற்றிக்கொள்ளவேண்டும்.
  • மினரல் வாட்டருக்கு பதிலாக ஆப்பிள் சீடர் வினிகரையும் பயன்படுத்தலாம்.
  • ஆப்பிள் சீடர் வினிகரில் பாக்டீரியா எதிர்ப்புத் திறன் அதிகமாக உள்ளது அதனால் இதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • இந்த பேஸ்ட்டைத் மூக்கின் மேல் பகுதியில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். 
  • பின்பு ஐந்து நிமிடங்கள் உலர விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவேண்டும்.
  • வாரத்திற்கு இரண்டு முறை இதை பயன்படுத்தலாம்.

3. ஓட்ஸ் scrub 

            ஓட்ஸ் நமது சருமத்தின் இறந்த செல்களை நீக்க பயன்படுகிறது. இதைக் கொண்டு மசாஜ் செய்வதால் நமது சருமம் மிருதுவாக மற்றும் பொலிவாக மாறுகிறது.  

தேவையான பொருட்கள் 

  • 2 டீஸ்பூன் ஓட்ஸ் 
  • 1 டீஸ்பூன் தயிர்  
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு. அல்லது
  • 2 டீஸ்பூன் ஓட்ஸ்
  • 1 டீஸ்பூன் தேன் 
  • 1 டீஸ்பூன் தக்காளி சாறு

பயன்படுத்தும் முறை

  • தயிர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாக கலந்து paste ஆக மாற்றி கொள்ள வேண்டும், இதனை blackheads உள்ள இடத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து உலர விடவேண்டும். பின்பு இதை வெதுவெதுப்பான நீரினால் கழுவ வேண்டும் இதனால் இறந்த செல்கள் நீங்கி விடுகின்றன.
  • இதேபோல் ஓட்ஸ், தக்காளிச் சாறு மற்றும் தேன் முதலியவற்றை கலந்தும் பயன்படுத்தலாம். இதை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வருவதால் blackheads எளிதாக நீங்குகிறது.

4. Sugar scrub

            Sugar scrub நமது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க உதவுகிறது, மேலும் நம்முடைய சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை வெளியேற்றவும் இது பயன்படுகிறது.

தேவையானபொருட்கள்

  • 3 டீஸ்பூன் சர்க்கரை பாகு 
  • 2 டீஸ்பூன் Sweet almond ஆயில் அல்லது
  • 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் 

பயன்படுத்தும் முறை 

      3 டீஸ்பூன் சர்க்கரை பாகு எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் அல்லது ஸ்வீட் ஆல்மண்ட் ஆயில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இதை பிளாக் ஹெட்ஸ் உள்ள இடத்தில் தடவி 2 முதல் 3 நிமிடங்கள் மசாஜ் செய்து பின் வெதுவெதுப்பான நீரினால் கழுவி விடவேண்டும். இதை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பயன்படுத்துவதால் நல்ல பலன் பெறலாம்.

5. Clay mask பயன்படுத்துதல்

     Bentonite clay பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைக்கிறது. இது ஆன்லைன் மற்றும் மருந்து கடைகளிலும் விற்கப்படுகிறது. இதில் அதிகப்படியான மினரல்ஸ் உள்ளன இதனால் நம்முடைய blackheads சுலபமாக சரியாகிறது.

தேவையான பொருட்கள் 

  • 1 டீஸ்பூன் bentonite clay
  • 1 டீஸ்பூன் தண்ணீர் அல்லது
  • 1 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர்

பயன்படுத்தும் முறை

            இந்த bentonite clay ஐ தண்ணீர் அல்லது ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து பேஸ்டாக மாற்றி கொள்ள வேண்டும். 10 முதல் 20 நிமிடம் பிளாக் ஹெட்ஸ் உள்ள இடத்தில் தடவி உலர விடவேண்டும். பின்பு இதனை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இதை கழுவிய பின்பு கட்டாயமாக ஒரு மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். வாரத்தில் ஒருமுறை இதை பயன்படுத்தலாம்.

6. முட்டையின் வெள்ளை பகுதியை பயன்படுத்துதல்

          முட்டையின் வெள்ளைக் கருவில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இந்த முட்டையின் வெள்ளைக்கரு முக்கிய பங்கு வகிக்கிறது

தேவையான பொருட்கள்

  • முட்டையின் வெள்ளைப் பகுதி

 பயன்படுத்தும் முறை

  • முதலில் முகத்தை நன்றாக கழுவ வேண்டும் பின்பு முட்டையின் வெள்ளைப் பகுதி blackheads உள்ள இடத்தில் தடவி உலர விட வேண்டும். 
  • சிறிது காய்ந்த பின்பு இரண்டாவது அடுக்காக முட்டையின் வெள்ளைக்கருவை தடவ வேண்டும், அதுவும் காய்ந்த பின்பு மூன்றாவது அடுக்காக முட்டையின் வெள்ளைக்கருவை பயன்படுத்த வேண்டும். 
  • மூன்று அடுக்கு பின் 15 நிமிடம் உலர விட வேண்டும். இதனால் 15 நிமிடத்தில் நமது தோல் இறுக்கமாக பிடிப்பது போல் ஒரு உணர்வு ஏற்படும்.
  • காரணம், நம்முடைய சருமத்தில் உள்ள பிளாக் ஹெட்ஸ் முட்டையின் வெள்ளைக்கரு பிடித்து வைத்திருக்கும் இந்த வேளையில் ஒரு துணியில் தண்ணீரை நனைத்து வெதுவெதுப்பான நீரை நனைத்து pack ஐ நீக்க வேண்டும் வாரத்தில் ஒரு முறை பயன்படுத்தலாம்.

7. Pore strip பயன்படுத்தல்

         Strip பயன்படுத்துவதால் இது நம்முடைய பிளாக் ஹெட்ஸை இழுத்து வைத்து பின்பு வெளியேற்றுகிறது. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் இது பிளாக் ஹெட்ஸ் வராமல் தடுக்காது. இது நம்மிடம் உள்ள பிளாக் ஹெட்ஸ் நீக்க மட்டுமே பயன்படுகிறது.

தேவையான பொருட்கள்

  • 1 டீஸ்பூன் ஸ்பூன் பால் 
  • 1 டீஸ்பூன் தேன் 

 பயன்படுத்தும் முறை 

 ஒரு டீஸ்பூன் பால் மற்றும் 1 டீஸ்பூன் தேனை ஒரு பாத்திரத்தில் எடுத்து மிதமான சூட்டில் கலக்க வேண்டும். இரண்டும் நன்றாக பேஸ்ட் பதத்தில் வந்ததும் இறக்கி விட வேண்டும் நம்மால் எந்த அளவு சூடு தாங்க முடியுமோ அந்த அளவு சூடு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு சுத்தமான காட்டன் துணியை எடுத்து அதில் இதை நனைத்து நம்முடைய blackheads உள்ள பகுதியில் வைக்க வேண்டும்.

 குறைந்தது 20 நிமிடங்கள் உலர விடவேண்டும் பின்பு மெதுவாக அந்த துணியையும் நீக்க வேண்டும் இதனால் blackheads துணியில் ஒட்டிக்கொண்டு பின்பு வெளியேறுகிறது இதை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.

8. இயற்கையான toner பயன்படுத்துதல்

             Toner நம்முடைய முகத்தில் உள்ள பிளாக் ஹெட்ஸ் நீக்கவும் மற்றும் முகம் சிவத்தல் அலர்ஜி முதலியவற்றை சரி செய்யவும் பயன்படுகிறது. அதனால் நாம் நம் வீட்டிலேயே உள்ள குளிர்ச்சியூட்டும் புதினாவை வைத்து toner செய்து அதை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள் 

  • 3 டீஸ்பூன் புதினா இலைச்சாறு 
  • 3 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர்
  • ஒரு கப் தண்ணீர்

பயன்படுத்தும் முறை 

           புதினா இலைச் சாறு ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கப் தண்ணீரில் நன்றாக கலக்க வேண்டும், பின்பு அதனை ஒரு spray பாட்டிலில் சேமித்து வைக்கலாம் இதை குறைந்தது ஒரு வாரம் வரை நாம் குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.

 இரவு படுக்கச் செல்லும் முன் முகத்தை நன்றாக சுத்தம் செய்து பின்பு இந்த toner ஐ நம் முகத்தில் தேய்க்கவேண்டும் இதனால் எளிதான முறையில் blackheads நீங்குகிறது.

9.சாலிசிலிக் அமிலம் மற்றும் கிளைகோலிக் அமிலம் உள்ள cleanser பயன்படுத்துதல்

  • சாலிசிலிக் அமிலம் மற்றும் கிளைகோலிக் அமிலம் இவை இரண்டும் உள்ள cleanser பயன்படுத்துவதனால் நம்முடைய சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்கள் வெளியேறுகின்றன.
  •  மேலும் சருமத்தில் உள்ள துளைகள் அடைபடவும் இது உதவுகிறது. அதனால் cleanser தேர்ந்தெடுக்கும்போது சாலிசிலிக் அமிலம் மற்றும் கிளைக்கோலிக் அமிலம் உள்ள cleanser தேர்வு செய்ய வேண்டும்.
  •  சாலிசிலிக் அமிலம் கிளைக்கோலிக் அமிலத்தோடு இணையும் போது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுகிறது.
  •  Proactiv, Benzac, PanOxyl போன்ற முகப்பருவை நீக்கும் பொருட்களில் இந்த சாலிசிலிக் அமிலம் மற்றும் கிளைக்கோலிக் அமிலம் அடங்கியுள்ளன

10. Tips to remove blackheads in tamil

  •  சரியான cleanser பயன்படுத்தி முகத்திலுள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெயை வெளியேற்ற வேண்டும்
  •  வாரத்திற்கு ஒரு முறை தலையணை உறைகளை கட்டாயமாக சுத்தம் செய்ய வேண்டும்.
  •  தலைமுடி முகத்தில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • பிளாக் ஹெட்ஸை கைகளை கொண்டு நீக்கக்கூடாது அடிக்கடி அதனை தொடவும் கூடாது.
3 1 vote
Article Rating

Santhosh

நான் ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ப்ளாகர் / டிஜிட்டல் மார்கெட்டராக பணியாற்றி வருகிறேன். fitness பைத்தியம், ஊர் சுற்றும் வாலிபன், பாடகர், குழந்தை பிரியர். மேலும் நிறைய இருக்கிறது ஆனால் சொன்னால் நம்ப மாடீங்க:)))

Related Post

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments