TNEB Bill யை Online மூலம் Pay செய்வது எப்படி – முழு விளக்கம் | How to pay tneb bill online in Tamil
நீங்கள் உங்களின் TNEB Bill யை எவ்வாறு Pay செய்கிறீர்கள்? Online மூலமாகவே அல்லது இன்னும் மின்சார அலுவலகத்திற்கு சென்று தான் கட்டணத்தை செலுத்துகிறீர்களா? உங்களின் பதில் மின்சார அலுவலகம் என்றால், நீங்கள் இன்னும் பின்தங்கி உள்ளீர்கள்.
தற்போது உங்களின் கரண்ட் பில்லை நீங்களே Online மூலமாக செலுத்த முடியும்.
அது எப்படி என்று கேட்கிறீர்களா?
அதற்கான விரிவான விளக்கத்தை தான் இந்த கட்டுரையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
சரி வாருங்கள் ஆரம்பிக்கலாம்.
Tamilnadu Electricity Bill
நம்முடைய வீட்டில் இருக்கும் அனைத்து மின் சாதனங்களும் மின்சாரத்தால் இயங்குபவை ஆகும். எடுத்துக்காட்டாக, தொலைக்காட்சி, மின்விசிறி, பல்ப், வாட்டர் ஹீட்டர், குளிர்சாதன பெட்டி இதுபோல் இன்னும் பல சாதனங்கள் உள்ளன.
நமக்கு தேவையான மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தால் வழங்கப்பட்டு வருகிறது. நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ஏற்ப அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இதற்கான கட்டணத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் நேரடியாக அந்தந்த பகுதிகளில் உள்ள மின்சார அலுவலகத்திற்கு சென்று தான் கட்ட வேண்டும்.
ஆனால் தற்போது எல்லாமே மாறிவிட்டது. உங்களின் ஸ்மார்ட்போன் அல்லது கணினி மூலமாக, நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் ஒரு சில நிமிடங்களில் உங்களால் கட்டணத்தை செலுத்த முடியும்.
ஆன்லைனில் கரண்ட் Bill யை கட்டுவதால் ஏற்படும் நன்மைகள்
நீங்கள் மின்சார கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் போது பின்வரும் நன்மைகளை பெறுவீர்கள்.
- ஆன்லைன் மூலம் நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே கரண்ட் பில்லை Pay செய்ய முடியும். இதனால் உங்களின் நேரத்தை சேமிக்கலாம். மேலும் தேவையில்லாத அலைச்சலையும் தவிர்க்கலாம்.
- ஒருவேளை நீங்கள் வெளியூர்களில் இருந்தால் கூட உங்களுக்கான கட்டணத்தை, நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே கட்ட முடியும்.
- உங்களின் கடந்த கால கட்டண வரலாற்றை ஆன்லைனில் பார்க்க முடியும். தேவைப்பட்டால் அதை Print எடுத்துக்கொள்ளலாம்.
- உங்களால் மற்றவர்களின் கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் கட்ட முடியும்.
- Online இல் முன்கூட்டியே Advance பணத்தை செலுத்தும் வசதியும் உள்ளது.
- ஸ்மார்ட் போன் அல்லது கணினி
- இன்டர்நெட் இணைப்பு
- இன்டர்நெட் பேங்கிங் அல்லது ATM Card உடன் கூடிய வங்கிக்கணக்கு
TNEB Bill யை Online மூலம் Pay செய்வது எப்படி – முழு விளக்கம் | How to pay tneb bill online in Tamil
உங்களின் TNEB Bill யை Online மூலம் Pay செய்ய விரும்பினால் நீங்கள் பின்வரும் படிகளை பின்பற்ற வேண்டும்.
TANGEDCO – New User Registration
Step 1: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதளமான tnebnet.org என்ற இணையதளத்தை அணுகவும்.
Step 2: தற்போது Login பக்கம் திறக்கும். அதில் New User – Register Here என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: இப்பொழுது New User Registration பக்கம் Open ஆகும். அதில் Existing Service Connection Number என்பதை தேர்வு செய்து Enter என்பதை அழுத்தவும்.
Step 4: Region என்பதன் பக்கத்தில் உள்ள Select என்பதை கிளிக் செய்யவும்.
Step 5: இப்பொழுது உங்களின் Region யை தேர்வு செய்க. கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உங்களின் Region Code யை தேர்வு செய்ய உதவும்.
01 – Chennai North
Thiruvotriyur, Manali, Madhavaram, Tondiyarpet, Royapuram, Thiru-Vi-Ka Nagar, Teynampet, Ambattur Zones and part of Tiruvallur Dist
09 – Chennai South
Ambattur, Anna Nagar, Kodambakkam, Valasaravakkam, Alandur, Adyar, Perungudi, Sholinganallur Zones, Chengalpattu Dist , Part of Kanchipuram and Tiruvallur Dist
03 – Coimbatore
Coimbatore, Tiruppur, Nilgiris
04 – Erode
Erode, Namakkal, Salem
05 – Madurai
Madurai, Dindigul, Ramanathapuram, Sivagangai, Theni
06 – Trichy
Ariyalur, Karur, Mayiladuthurai, Nagapattinam, Perambalur, Pudukottai, Thanjavur, Thiruvarur, Tiruchirapalli
07 – Tirunelveli
Kanniyaumari, Thoothukudi, Tirunelveli, Tenkasi, Virudhunagar
08 – Vellore
Dharmapuri, Krishnagiri, Tirupathur, Ranipet, Vellore, Kanchipuram and part of Tiruvallur Dist
02 – Villupuram
Cuddalore, Kallakurichi, Tiruvannalamai, Villupuram
Step 6: உங்களின் Consumer No யை Enter செய்து Check Detail என்பதை கிளிக் செய்யவும்.
Consumer Number என்பது உங்களின் EB Bill அட்டை அல்லது ரசீதில் இருக்கும்.
நீங்கள் கிளிக் செய்தவுடன் Consumer Name, Address மற்றும் Services Status போன்ற தகவல்கள் தெரியும். அவற்றை சரிபார்த்துவிட்டு Confirm என்ற பட்டனை அழுத்தவும்.
Step 7: தற்போது Password, Name, Address, Pin, State, Country, Email Id, Mobile Number போன்ற தகவல்களை Enter செய்து Submit செய்யவும்.
Step 8: Activate Mail ஆனது நீங்கள் Enter செய்த Email ID க்கு அனுப்பப்பட்டிருக்கும். அந்த Email ID இல் உள்ள லிங்க்கை கிளிக் செய்து நீங்கள் Activate செய்ய வேண்டும்.
Login செய்தல்
Step 9: இப்பொழுது Login பக்கத்தில் உங்களின் User Id மற்றும் Password யை Enter செய்து Login பட்டனை அழுத்தவும்.
இதில் User Id என்ற இடத்தில் உங்களின் முழு Consumer நம்பரை Type செய்ய வேண்டும். Password என்ற இடத்தில் நீங்கள் ஏற்கனவே Register செய்யும்போது கொடுத்த Password யை Type செய்ய வேண்டும்.
EB Bill யை Pay செய்தல்
Step 10: Login செய்தவுடன் Payment Details காட்டும். இதில் Consumer Number, Name, Address, Bill Amount, Due Date போன்ற தகவல்கள் தெரியும்.
அதில் Pay Bill என்ற பட்டனை அழுத்தவும்.
Step 11: நீங்கள் பணத்தை செலுத்த விரும்பும் Payment Option யை தேர்வு செய்யவும்.
நீங்கள் UPI, Net Banking மற்றும் Debit Card ஆகியவற்றில் ஏதேனும் ஒரு முறையை தேர்வு செய்து Pay செய்யலாம்.
இதில் மிகவும் எளிதான முறை எதுவென்றால் UPI முறையாகும். எனவே நீங்கள் Axis Bank (UPI/ QR/ Rupay) Option யை தேர்வு செய்யவும்.
Step 12: Check Box யை டிக் செய்து Confirm Pay என்பதை அழுத்தவும்.
Step 13 : இப்பொழுது உங்களின் UPI அல்லது Debit Card யை பயன்படுத்தி உங்களின் கரண்ட் பில்லை Pay செய்யலாம்.
இதையும் படியுங்கள் :- TN Employment இல் Registration செய்வது எப்படி? முழு விளக்கம்
Aadhaar Card யை Online மூலம் Apply செய்வது எப்படி?
ஆன்லைனில் EB Bill Reading யை பார்ப்பது எப்படி
உங்களால் கடந்த சில மாதங்களின் Reading Details, Bill Amount, Bill Amount செலுத்தப்பட்ட தேதி போன்ற விவரங்களை பார்க்க முடியும். அதற்கான செயல்முறையை பற்றி காண்போம்.
Step 1: Account Summary என்ற Option யை கிளிக் செய்யவும்.
Step 2: Consumer Number யை தேர்வு செய்க.
Step 3: தற்போது உங்களின் கடந்த மாதங்களின் EB Bill Reading விவரங்களை காண்பீர்கள்.
இந்த கட்டுரையின் மூலம் நீங்கள் ஆன்லைன் மூலம் கரண்ட் பில்லை எவ்வாறு செலுத்துவது என்பதை தெரிந்து கொண்டீர்கள். இனிமேல் நீங்களும் உங்களின் மின்சார கட்டணத்தை ஆன்லைன் மூலம் Pay செய்யலாம். இதை பற்றிய ஏதேனும் கருத்து இருந்தால் கீழே பதிவிடவும்.
PPF கணக்கு என்றால் என்ன? முழு விளக்கம் தமிழில்
KYC என்றால் என்ன? பயன்கள் என்ன | தெரிந்து கொள்வோம்