LPG Gas Booking: Indane Gas Cylinder யை Booking செய்வது எப்படி? | How to Book LPG Gas Cylinder in Tamil
LPG Gas Cylinder ஆனது இந்தியாவில் உணவு சமைப்பதற்கான முக்கிய ஆதாரமாகும். இந்த எரிவாயு சிலிண்டர்களில் Gas தீர்ந்தவுடன் அதற்க்கு முன்பதிவு செய்யலாம். Indane Gas இல் IVR, Whatsapp, Mobile App மற்றும் Online போன்ற பல்வேறு வழிகளில் Booking செய்ய முடியும். அதை பற்றிய முழு விவரங்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.
இந்தியாவில் பல்வேறு LPG Gas வழங்குநர்கள் இருக்கின்றனர். அவர்களுள் Indane Gas இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indane Gas) ஒன்றாகும்.
பொதுவாக வீடுகளுக்கு வழங்கப்படும் கேஸ் சிலிண்டர்களில் 14.2 KG எடை கொண்ட எரிவாயு இருக்கும். வணிக சிலிண்டர்களில், வீடுகளுக்கு வழங்கப்படும் எரிவாயுவை விட அதிக எடை கொண்டதாக இருக்கும்
சிலிண்டர்களில் உள்ள எரிவாயு தீர்ந்த பிறகு புதிய எரிவாயு சிலிண்டரை பெறுவதற்கு முன்பதிவு (Gas Booking) செய்ய வேண்டும். அப்படி முன்பதிவு செய்தால் மட்டுமே எரிவாயு நிரப்பட்ட சிலிண்டர்களை பெற முடியும்.
Indane Gas ஆனது Gas Cylinder களை Booking செய்வதற்கு பல்வேறு வழிகளை வழங்கியுள்ளது. அவற்றில் ஏதேனும் ஒரு வழிமுறையை பின்பற்றி எரிவாயு சிலிண்டருக்கு Booking செய்யலாம்.
அவை என்னனென்ன வழிமுறைகள் என்பதை காணலாம்.
Indane Gas Booking Number (IVRS) மூலம் முன்பதிவு செய்வது எப்படி
சமீபத்தில் Indane Gas Booking செய்ய நாடு முழுவதும் ஒரே நம்பர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் Gas முன்பதிவு செய்வதற்கு அனைவரும் அந்த பொதுவான எண்ணை பயன்படுத்தலாம். இந்த சேவை வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேரமும் மற்றும் வாரத்தின் ஏழு நாட்களிலும் கிடைக்கிறது.
எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான பொதுவான நம்பர் 7718955555 ஆகும்.
இப்பொழுது இந்த IVRS நம்பர் மூலம் எப்படி முன்பதிவு செய்வது என்று காணலாம்.
Step 1: உங்களின் Indane Gas இல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 7718955555 என்ற எண்ணிற்கு கால் செய்யவும்.
Step 2: இப்பொழுது முதலில் மொழியை தேர்வு செய்யும் Option வரும். அதில் தமிழ் என்பதை தேர்வு செய்யவும்.
Step 3: தற்போது உங்களின் 17 இலக்க LPG ID இல் கடைசி 4 இலக்க நம்பர் மற்றும் உங்களின் Gas ஏஜென்சி பெயர் போன்ற தகவல்கள் சொல்லப்படும். அவற்றை உறுதி செய்வதற்கு 1 என்ற எண்ணை அழுத்த வேண்டியதிருக்கும்.
Step 4: கடைசியாக முன்பதிவு செய்யும் தேர்வு வரும். இதில் 1 என்ற நம்பரை அழுத்தினால் வெற்றிகரமாக Gas Booking செய்யப்படும். மேலும் இது குறித்த SMS யையும் பெறுவீர்கள்.
WhatsApp மூலம் Indane Gas Cylinder யை Booking செய்வது எப்படி
தற்போது WhatsApp என்ற செயலியை அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் WhatsApp மூலம் எரிவாயு முன்பதிவு செய்யும் வசதியையும் வழங்கியுள்ளது.
இந்த வசதியின் மூலம் நீங்கள் எரிவாயு கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலமாகவும் அல்லது பதிவு செய்யப்படாத மொபைல் எண் மூலமாகவும் Refill Booking செய்ய முடியும்.
Register செய்த Mobile Number இல் இருந்து WhatsApp மூலம் முன்பதிவு செய்தல்
Step 1: உங்களின் மொபைல் போனில் 75888 88824 என்ற நம்பரை Save செய்துகொள்ளவும்.
Step 2: WhatsApp Chat பக்கத்தை திறக்கவும்.
Step 3: இப்பொழுது REFILL என்று Type செய்து Send என்பதை அழுத்த வேண்டும்.
Step 4: நீங்கள் அனுப்பியவுடன் அது தொடர்பான தகவல்களை WhatsApp மூலமாகவே பெற்றுவிடுவீர்கள்.
Register செய்யாத Mobile Number இல் இருந்து WhatsApp மூலம் முன்பதிவு செய்தல்
Step 1: 75888 88824 என்ற எண்ணை உங்களின் போனில் சேமிக்கவும்.
Step 2: WhatsApp Chat இல் REFILL#< உங்களின் 17 இலக்க LPG ID > என்று Type செய்து அனுப்ப வேண்டும்.
Step 3: பிறகு Booking செய்ததற்கான Message யை பெறுவீர்கள்.
Indian Oil ONE Mobile App மூலம் முன்பதிவு செய்தல்
உங்களின் ஸ்மார்ட் போனில் மொபைல் செயலியை இன்ஸ்டால் செய்து அதன் மூலமாகவும் எரிவாயு முன்பதிவு செய்யலாம்.
Step 1: PlayStore அல்லது Apple Store இல் இருந்து Indian Oil ONE என்ற செயலியை Install செய்யவும்.
Step 2: பிறகு அந்த செயலியில் Register செய்யவும்.
Step 3: Indian Oil ONE செயலியை Open செய்தவுடன் அதன் Dashboard திறக்கும்.
அதில் இப்பொழுது Order Cylinder என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: இதில் Delivery Options, Order Details மற்றும் Consumer Details போன்ற தகவல்கள் இருக்கும்.
Delivery Option இல் Normal Delivery என்று தேர்வாகி இருக்கும். இது பொதுவாக அனைவரும் பயன்படுத்தும் Delivery தேர்வு ஆகும்.
Preferred Delivery என்பதை தேர்வு செய்தால் உங்களின் REFILL Cylinder வாரத்தின் எந்த நாளில் Gas Cylinder யை கொண்டு வர வேண்டும் என்பதை தேர்வு செய்ய முடியும்.
இதில் உங்களுக்கு வேண்டிய Deliver Option யை தேர்வு செய்யவும்.
Order Details இல் நீங்கள் எவ்வளவு பணத்தை செலுத்த வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
Step 5: கடைசியாக Order Now என்பதை கிளிக் செய்தால், உங்களின் எரிவாயு சிலிண்டர் வெற்றிகரமாக Booking செய்யப்பட்டுவிடும்.
இதையும் படியுங்கள்:- TNEB Bill யை Online மூலம் எவ்வாறு Pay செய்வது?
TNEB Bill யை Online மூலம் எவ்வாறு Pay செய்வது?
TN Employment இல் Registration செய்வது எப்படி? முழு விளக்கம்
Aadhaar Card யை Online மூலம் Apply செய்வது எப்படி
Online மூலம் Gas Cylinder யை Booking செய்வது எப்படி
Indian Oil இன் இணையதளத்திற்கு சென்றும் நீங்கள் Gas Booking செய்யலாம். அதற்கான செயல்முறைகள் என்ன என்பதை காண்போம்.
Step 1: நீங்கள் முதலில் cx.indianoil.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
Step 2: நீங்கள் இந்த இணையதளத்திற்கு புதியவர் என்றால், முதலில் Register என்பதை கிளிக் செய்து Registration செய்யவும்.
ஏற்கனவே Register செய்திருந்தால் Login என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: உங்களின் பதிவு செய்த Email ID அல்லது Mobile Number யை Enter செய்து Continue என்பதை அழுத்தவும்.
Step 4: Password யை உள்ளிட்டு Submit செய்யவும்.
Step 5: LPG என்பதை கிளிக் செய்க.
Step 6: Book Your Cylinder என்பதை தேர்வு செய்யவும்.
Step 7: முதலாவதாக உள்ள Online என்ற Option யை கிளிக் செய்க.
Step 8: LPG Refill – 14.2 KG என்பதை தேர்வு செய்க. பிறகு Book Now என்பதை அழுத்தினால், உங்களின் Refill Cylinder வெற்றிகரமாக முன்பதிவு செய்யப்பட்டுவிடும்.
தேவைப்பட்டால் இதற்கான பணத்தை நீங்கள் Online மூலமாக செலுத்த முடியும்.
இன்று நீங்கள் Indane Gas Cylinder யை பல்வேறு வழிகளில் எவ்வாறு Booking செய்வது என்பதை பற்றி தெரிந்துகொண்டீர்கள். இவற்றுள் ஏதாவது ஒரு முறையின் மூலம் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.
இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே Comment பிரிவில் பதிவிடவும்.
மேலும் இது போன்ற அரசாங்க வேலைகள் பற்றி தெரிந்து கொள்ள தங்க உண்டியல் வலைதளத்தை பின்பற்றலாம்.