ஹோஸ்டிங் என்றால் என்ன – முழு விளக்கம்

Web hosting meaning in tamil

Web hosting in Tamil : நீங்கள் தயாரித்த பொருட்களை பத்திரமாக வைப்பதற்கு ஒரு இடம் தேவை. அதேபோல்தான் ஆன்லைனில் நீங்கள் டேட்டாக்கள், கோப்புகள், போட்டோக்கள் என என்னவெல்லாம் செய்கிறீர்கள் அதை பத்திரமாக வைப்பதற்கு ஒரு இடம், அதற்குப் பெயர்தான் ஹோஸ்டிங்.

ஹோஸ்டிங் எவ்வாறு வேலை செய்கிறது?

இந்த web hosting இல் online டேட்டாக்களை சேமிக்கப் பயன்படும் ஒரு உயரிய கம்ப்யூட்டர் சாதனம் ஆகும்.

எடுத்துக்காட்டாக யாரேனும் உங்களுடைய வலைத்தளத்தின் பெயரை பிரவுசரில் தேடினால் இந்த வெப் சர்வர் அந்த டேட்டாக்களை யார் தேடுகிறார்களோ அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு உங்களுடைய இணைய பக்கத்தின் நகலை பெறுகிறது இதன் விளைவாக உங்களுடைய வாடிக்கையாளர் கணினியில் உங்களுடைய வலைதளம் திறக்கிறது.

வெப் ஹோஸ்டிங் வகைகள் : web hosting meaning in tamil

Vivo ஹோஸ்டிங் பொதுவாக மூன்று வகைப்படும்.
அவை,
1. shared server- பகிரப்பட்ட சர்வர் ஹோஸ்டிங்
2. virtual private server – விர்ச்சுவல் பிரைவேட் சர்வர்
3. dedicated server- அர்ப்பணிக்கப்பட்ட சர்வர்
இந்த மூன்று வகைப்படும்.

ஒவ்வொரு வலைத்தளத்திற்கும் ஒவ்வொரு தேவை இருக்கிறது. சில வலைதளத்திற்கு அதிகமாக ஸ்டோரேஜ் இருக்க வேண்டும், பார்வையாளர்கள் அதிகமாக இருக்க வேண்டும், சில வலைதளத்திற்கு அதிக டேட்டாக்களை சேவை செய்வதற்கு அதிக இடம் இருக்க வேண்டும், சில வலைதளத்திற்கு சாதாரண தேவையாக இருக்கும் இப்படி பல வலைதளத்தின் தேவைகளைப் பொறுத்து ஹோஸ்டிங் தேர்வு செய்ய வேண்டும்.

இப்போது ஒவ்வொரு ஹோஸ்டிங் என்ன என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

web hosting meaning in tamil

1.Shared server hosting

நாம் இப்பொழுது காலேஜ் ஹாஸ்டலில் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஹாஸ்டலில் உள்ள ரூமில் நம்முடன் பல பேர் தங்கி இருப்பார்கள். நம்முடைய இடத்தை நாம் பகிர வேண்டும் அதுபோலத்தான் இந்த shared hosting என்பது.

இந்த hosting நம்முடைய வலைதளம் மட்டுமல்லாமல் நம்மைப் போல் பல வலைதளங்கள் இந்த shared hosting sever இருக்கும்.

அதனால்தான் இதற்கு பகிரப்பட்ட சர்வர் ஹோஸ்டிங் என்று நாம் சொல்கிறோம். இதில் இருக்கும் சேவையகம் அதாவது மெமரி, cpu, RAM, ஆகியவை நம்முடன் சேர்ந்து பலரும் பயன்படுத்துவார்கள்.

பொதுவாக இந்த வகை ஹோஸ்டிங் விலை சற்று மலிவாக இருக்கும்.

அதேபோல் நாம் இந்த வகையான ஹோஸ்டிங்கில் பெரிய வலை தளம் அமைக்க முடியாது எடுத்துக்காட்டாக ஆன்லைன் ஸ்டோர்கள், வங்கி வலைதளங்கள், அதிக டேட்டாக்களை வைத்திருக்கும் வலைதளங்கள் போல் நாம் பயன் படுத்த முடியாது ஏனென்றால் பலரும் நம்முடன் பகிர்ந்து கொள்வதால் இதனுடைய பாதுகாப்பும் ரொம்ப இருக்காது, மக்கள் அதிகமாக வர வர இதனுடைய வேகம் சற்று குறைவாக காணப்படும்.

இந்த வகை செர்வரில் மாதம் 10,000 பார்வையாளர்கள் நாம் பெறலாம். சாதாரன தொழில் வலைத்தளங்கள் அமைப்பதற்கு இதை பயன்படுத்தலாம்.

2. Virtual private server

image credit: comparethehosts.com

இந்த வகை ஹோஸ்டிங் என்பது உங்களிடம் ஒரு அறை இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த அறையில் நீங்கள் ஒரு முக்கிய (VIP) விஐபி. உங்களுடன் மிக முக்கியமான ஆட்கள் மட்டுமே இருப்பார்கள். இங்கு உங்களுக்கு சம உரிமை உண்டு, பாதுகாப்பு உண்டு.

இந்த வகை சர்வர் virtualization என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
இது என்னவென்றால் ஒரு சர்வர் பல சர்வர்களாக பிரிக்கப்பட்டு அதே சர்வரில் நமக்கென்று ஒரு தனி இடம் தருகிறது. நாம் நமக்கான தனி சர்வரில் அதிகப்படியான டேட்டாக்களை , பைல்களை வைத்துக்கொள்ள முடியும். அதிக Web space இருக்கும்.

இது நமக்கு தனி இடம் தருவது மட்டுமல்லாமல் பாதுகாப்பு போன்ற நன்மைகளையும் வழங்குகிறது.

நீங்கள் ஒரு குறைந்த விலையில் vps hosting பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் இது ஒரு சிறந்த தேர்வாகும்.

3. Dedicated server

இது டெடிகேட் சர்வர் ஆகும். இந்த ஹோஸ்டிங் என்பது நீங்கள் ஒரு பங்களாவில் வாழும் ஒரு வாழ்க்கை போல் உள்ளது, இந்த பங்களாவில் நீங்கள் தான் ராஜா, இந்த பங்களா முழுவதும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். இதில் வரும் பராமரிப்புச் செலவுகள் அனைத்தும் நீங்கள் தாங்கிக் கொள்கிறீர்கள்.

இந்த வகை சர்வரில் உங்களுடன் யாரும் பகிர்ந்து கொள்ள முடியாது. இது உங்களுக்கான இடம் மட்டுமே. இது உங்களுக்கு ஒரு முழுமையான கட்டுப்பாட்டப் கொடுக்கிறது.

இந்த வகை ஹோஸ்டிங் சர்வரில் உங்களுடைய வலைத்தளத்தின் பாதுகாப்பு மிக அதிகமாக இருக்கும், வேறு எந்த அந்நியராலும் நுழைய முடியாது.

இந்தவகை dedicated hosting உயரிய வலைதளங்கள் அதாவது அமேசான், Flipkart, வங்கிகளின் வலைத்தளங்கள், அதிக டேட்டாக்களை பயன்படுத்தும் வலைதளங்கள், மிகவும் பாதுகாப்பாக கொண்டிருக்கும் வலைதளங்கள், அனைத்தும் இந்த வகை ஹோஸ்டிங் தான் பயன்படுத்துகிறது.

இதில் இயக்கப்படும் வலைத்தளங்கள் அனைத்தும் மிக வேகமாக இருக்கும், கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் இதைப் பயன்படுத்தினாலும் இதற்கு ஒன்றுமே ஆகாது, மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

எனவே உங்களுடைய வணிகம் எது என்று கண்டு உங்களுக்கு ஏற்ற சர்வரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்ட் செய்யுங்கள்.

இதையும் படியுங்கள்:

  • WordPress Blog எப்படி ஆரம்பிப்பது? – முழு விளக்கம்
3.6 7 votes
Article Rating
சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
அதிக வாக்குகள் பெற்றவை
புதிய பழைய
Inline Feedbacks
View all comments