ப்ளாகிங் டிப்ஸ்

Backlinks என்றால் என்ன? தரமான Backlinks எப்படி உருவாக்குவது?

Backlinks in tamil

Backlinks என்றால் என்ன? உயர்தரமான backlinks எப்படி உருவாக்குவது?

Backlinks in tamil : நாம் ஒரு புதிய ப்ளாக் தொடங்கி விட்டோம் என்றால் அதில் பலவிதமான டிப்ஸ் மற்றும் நுணுக்கங்கள் நம் கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

அதுமட்டுமல்லாமல் நம்முடைய புதிய பிளாக் கூகுள் சர்ச் இஞ்சினில் முதன்மையாக வருவதற்கு நாம் பலவிதமான முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருக்க வேண்டும், அப்போதுதான் நம்முடைய பிளாக் தரம் (Rank) உயரும்.

இன்று நாம் மிகவும் பயனுள்ள டாபிக் பற்றி பார்க்கப்போகின்றோம், உலகத்தில் உள்ள பல பிளாக்கர்கள் இந்த backlinks உருவாக்குவதில் மெனக்கெடுவார்கள். ஏனென்றால், இது உங்கள் ப்ளாக் சர்ச் இன்ஜினில் வருவதற்கு உதவிகரமாக இருக்கும்.

சரி நேரத்தை வீணடிக்காமல் backlinks என்றால் என்ன அதைப் பற்றி பார்ப்போம்.

Backlinks என்றால் என்ன? – Backlinks in tamil:

நான் மேலே கூறியது போல உலகத்தில் உள்ள பல பிளாக்கர்கள் இந்த Backlinks பயன்படுத்துவார்கள். பொதுவாக நீங்கள் நிறைய பிளாக்கிற்கு சென்று பார்த்திருப்பீர்கள் அதில் வேறு பிளாக் அல்லது வெப்சைட் உடைய links கொடுத்திருப்பார்கள், இதைத்தான் backlinks என்று கூறுகிறோம்.


நம்முடைய பிளாக் போஸ்டில் அடுத்தவருடைய பிளாக் லிங்கை ஹைப்பர் லிங்க் செய்வதும் ஒருவகையான Backlinks தான். இதற்கு Outbound links என்ற இன்னொரு பெயரும் உண்டு.

Backlinks எப்படி உருவாக்குவது? எங்கு உருவாக்குவது?

கெஸ்ட் போஸ்ட் (GUEST POST):

உங்களுடைய பிளாக்கைப் பற்றி அடுத்தவர்களுடைய blog ல் சென்று எழுதுவதற்கு பெயர்தான் கெஸ்ட் போஸ்ட் என கூறுகிறோம்.

நீங்கள் உங்கள் பிளாக் சம்பந்தமாக எழுதும்போது அதனுடன் சேர்த்து உங்களுடைய பிளாக் லிங்கை அந்த கெஸ்ட் போஸ்ட் இல் கொடுக்க வேண்டும்.
அப்படிக் கொடுக்கும்போது அந்த பிளாக்கிற்கு சென்று படிப்பவர்கள் நீங்கள் எழுதிய உங்களுடைய ப்ளாக் பற்றியும் படிப்பார்கள்.

அத்துடன் அந்த லிங்கை கிளிக் செய்து உங்களுடைய பிளாகிற்க்கு வருவார்கள்.
இதனால் உங்களுக்கு Backlinks கிடைக்கும்.

ஒரு விஷயத்தை நன்றாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் எழுதிய கெஸ்ட் போஸ்ட் அந்த பிளாக்கிற்கு வரும் பார்வையாளர்களை கவர வேண்டும், ஆக, மிக நன்றாக எழுதுங்கள், அப்போதுதான் உங்களுடைய பிளாக் இருக்கு அதிக பார்வையாளர்களை ஈர்க்க முடியும்.

Forum ல் இணையுங்கள்:

Yahoo answers அல்லது கோரா (QUORA) போன்ற வலைதளத்திற்கு சென்று உங்களுடைய blog post பற்றிய அங்கு எழுதுங்கள். ஏனென்றால் அங்கு மக்கள் பலவகையான கேள்விகளை எழுப்புவார்கள், அதை நிறைய பேர் படிப்பார்கள். அப்போது நீங்கள் சொல்லும் கருத்தை அவர்கள் பார்ப்பார்கள், படிப்பார்கள் பின்பு அப்படியே உங்கள் வலைதளத்திற்கு வருவார்கள்.

சமூகவலைதளங்களில் உங்களுடைய பிளாக் லிங்கை பகிருங்கள்:

நம் அனைவருக்கும் தெரியும் சமூக வலைத்தளம் ஒரு மிகப்பெரிய கடல் போன்றது. அங்கு லட்சக்கணக்கான மக்கள்கள் வந்து கொண்டும், போய்கொண்டும், படித்துக் கொண்டும் இருப்பார்கள்.

Backlinks உருவாக்குவதற்கு இதைவிட தரமான நல்ல இடம் கிடைக்காது. எனவே நீங்கள் எழுதிய பிளாக் post சமூக வலைத்தளங்களில் பரப்புங்கள், இதனால் பார்வையாளர்களையும் உங்கள் வலைதளத்திற்கு வர வைக்க முடியும்.

அடுத்தவர்களுடைய பிளாகில் கமெண்ட் எழுதுங்கள்:

நீங்கள் எப்போதெல்லாம் அடுத்தவர்களுடைய பிளாக்கிற்கு சென்று உங்களுக்கு தேவையான கருத்துக்கள் பற்றி படிக்கிறீர்களோ, படித்ததோடு நின்றுவிடாமல் அவர்களுடைய கமெண்ட் பாக்ஸில் உங்களுடைய கருத்துக்களை தெரிவியுங்கள்.

அதோடு உங்களுடைய வலைதளத்தின் உடைய பெயரையும் அதில் குறிப்பிடுங்கள். நிறைய பார்வையாளர்கள் அந்த கமெண்ட்டை படிக்கும் போது உங்களுடைய கமெண்ட்டையும் படிப்பார்கள், அப்போது நீங்கள் கொடுத்த உங்களுடைய பிளாக் லிங்கை கிளிக் செய்து உங்களுடைய வலைத்தளத்திற்கும் வருவார்கள்.
இதுவும் backlink தான்.

இந்த post உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகின்றேன். பிடித்திருந்தால் ஷேர் செய்யுங்கள், உங்களுடைய கருத்துக்களையும், சந்தேகங்களையும் கமெண்ட்டில் தெரிவியுங்கள்.

Related posts
ப்ளாகிங் டிப்ஸ்

Blogger VS wordpress | எது சிறந்தது

ப்ளாகிங் டிப்ஸ்

நான் Blogging பண்ணலாமா? வேண்டாமா? - 6 சிறிய விளக்கம்

ப்ளாகிங் டிப்ஸ்

3 வழிகளில் Godaddy & Bigrock ல் domain பெயர் எப்படி வாங்குவது

ப்ளாகிங் டிப்ஸ்

SEO (Search engine optimization) என்றால் என்ன?

Sign up for our Newsletter and
stay informed

1
Leave a Reply

avatar
1 கமெண்ட் த்ரெட்
0 த்ரெட் பதில்கள்
0 பின்தொடருவோர்
 
அதிக ரியாக்ஷன் கமெண்டுகள்
சூடான கமெண்ட்
1 கமெண்ட் ஓனர்
Rajadhurai Recent comment authors
  சப்ஸ்க்ரைப்  
புதிய பழைய அதிக வாக்குகள் பெற்றவை
தெரிய படுத்துங்கள்
Rajadhurai
விருந்தாளி

இந்த பதிவு எனக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தியுள்ளது. நான் தமிழில் எழுதும் http://www.tamilbold.com தளத்திலும் இதையே
பின்பற்றுகிறேன். நன்றி