WordPress Blog எப்படி ஆரம்பிப்பது? – முழு விளக்கம்

By Santhosh

Updated on:

wordpress

How to create wordpress blog in Tamil

How to create wordpress blog in Tamil : மகிழ்ச்சி ரொம்ப அற்புதமான முடிவெடுத்து இருக்கீங்க இனி நீங்களும் blog ஸ்டார்ட் பண்ணலாம். இனி நீங்களும் successful people கூட இணையுங்கள்.

இப்போ wordpress blog எப்படி ஸ்டார்ட் பண்ணுவது என்பதை பார்ப்போம்.

WordPress என்றால் என்ன?

wordpress என்பது ஒரு விதமான சர்வீஸ் ஆகும். இதில் தான் உங்கள் blog நீங்கள் எழுத, படங்கள் இட, எடிட் செய்ய, பின்பு பப்ளிஷ் செய்ய முடியும்.

அதற்கு முன்னால் இந்த wordpress இயக்குவதற்கு உங்களுக்கு ஹோஸ்டிங் என்ற ஒன்று அவசியமானது.

How to start wordpress blog in Tamil:

wordpress

WordPress க்கு ஏற்ற hosting bluehost தான். அதற்கு முன்னாடி நீங்கள் ஒரு டொமைன் வாங்க வேண்டும்.

ஏனென்றால் ஒரு ப்ளாக் தொடங்குவதற்கு அந்த domain தான் மிகவும் அவசியமானது.

டொமைன் என்றால் என்ன என்பதைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ளேன் அதைப் படித்துப் பாருங்கள்.

பொதுவாக டொமைன் நேம் வருடத்திற்கு இந்திய ரூபாயின் படி 600 ரூபாய் வரை வரலாம். சில நிறுவனங்கள் அதற்கு மேலேயும் நம்மிடம் வசூலிக்கின்றன.

ஹோஸ்டிங்:

இன்டர்நெட்டில் நிறைய cheap and பெஸ்ட் ஹோஸ்டிங் இருக்கு.

முதலில் ஹோஸ்டிங் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு ப்ளாகிற்கு டொமைன் பெயர்கள் மற்றும் ஹோஸ்டிங் மிகவும் முக்கியமானது. இவை இரண்டும் இல்லாமல் நீங்கள் பிளாக் ஸ்டார்ட் பண்ண முடியாது.

இன்டர்நெட்டில் பல வெப் ஹோஸ்டிங் கம்பெனிகள் இருக்கின்றன. மாதம் பத்து டாலர் வரை ஆகக்கூடும்.

நான் உங்களுக்கு bluehost recommended பண்ணுவேன்.

ஏனென்றால் இந்த bluehost கம்பெனி மிகவும் பிரபலமான நல்ல தரம் கொண்ட ஒரு நிறுவனமாகும். இது மாதம் 3.95$க்கு உங்களுக்கு சிறந்த சேவையை வழங்கும். இது மற்ற கம்பனியை காட்டிலும் மிகவும் மலிவான விலையாகும், எனவே இது மிகச் சிறந்த தேர்வாகும்.

 

உலகத்தில் 2 மில்லியன் க்கும் அதிகமானோர் பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

முதலில் நீங்கள் ஹோஸ்டிங் வாங்கும் பொழுது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டாம் ஏனென்றால் நீங்கள் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்கு basic plan சிறந்த தேர்வாகும். பின்பு அதில் நீங்கள் அனுபவம் ஆகி விட்டால் அதற்கு அடுத்ததாக நீங்கள் அடுத்த பிளானை தேர்வு செய்யலாம்.

நான் தற்போது bluehost கம்பெனியுடன் பார்ட்னராக உள்ளதால் அவர்களிடம் என்னுடைய வலை தளத்திற்கு வந்து வாசிக்கும் பார்வையாளர்களுக்கு ஏதேனும் அவர்கள் வழங்க முடியுமா என்பதை கேட்டேன்.

அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். மாதம் 3.95$க்கு நீங்கள் இந்த பிளான் வாங்கி கொள்ளலாம் . அது மட்டுமல்லாமல் bluehost ல் உங்களுக்கு டொமைன் இலவசமாக ஒரு வருடத்திற்கு வழங்கப்படும். உடனடியாக வாங்குவதற்கு கீழே படத்தை கிளிக் செய்யுங்கள்

 

பிளாகிங் தளம்: WordPress blog in Tamil

உங்களால் பிளாகிங் software இல்லாமல் பிளாக் ஸ்டார்ட் பண்ண முடியாது. நான் என்னுடைய பிளாக் அனைத்தும் wordpress ல் இயக்கி கொண்டிருக்கிறேன். ஏனென்றால் இது மிகவும் எளிதானது.

உங்களுக்கு ஒரு அட்வைஸ் சொல்ல விரும்புகிறேன். உங்களுக்கு இலவசமாக பல பிளாகிங் சர்வீஸ்கள் வழங்க நிறைய நிறுவனங்கள் தயாராக உள்ளன. ஆனால் இலவசத்தை புறக்கணியுங்கள் ஏனென்றால் அதில் நிறைய பிரச்சினைகள் உள்ளன.

  • உங்களால் உங்களுக்கு ஏற்றவாறு உங்கள் வலைத்தளத்தை அமைக்க முடியாது.
  • உங்கள் வலைதளம் எப்போது வேண்டுமானாலும் காரணமில்லாமல் நின்றுவிடக் கூடும்.
  • அவர்கள் வழங்கும் இலவச சேவையில் அவர்களுடைய நிறுவனத்தின் பெயர் இருக்கும், இது ஞாபகத்தில் வைத்துக் கொள்ள சற்று கடினமாக இருக்கும்.
  • அவர்கள் உங்கள் வலைதளத்தில் வைத்துக் கொள்ள அனுமதிக்க விட மாட்டார்கள். ஏனென்றால் விளம்பரத்தை வைத்து தான் நீங்கள் காசு சம்பாதிக்க முடியும்.

எனவே இலவச பிளாக்கிங் சேவையை தவிர்த்துவிடுங்கள்.

முதலில் wordpress.com vs wordpress.org என்ன என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

WordPress.com என்பது உங்களுக்கு இலவசமாக சேவை வழங்கும் இதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன.

WordPress.org என்பது self hosted ஆகும். இது உங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும், உங்களுக்கு ஏற்றார்போல் எப்படி வேண்டுமானாலும் உங்கள் வலைதளத்தை மாற்றிக் கொள்ளலாம்.

எனவே நீங்கள் wordpress.org தேர்வு செய்யுங்கள்.

நீங்கள் இப்போது bluehost மற்றும் wordpress இணைந்து பிளாக் ஆரம்பிக்க போகின்றீர்கள். Bluehost ல் உங்களுக்கு இலவசமாக டொமைன் வழங்கப்படும் , அன்லிமிட்டட் storage, அன்லிமிடெட் bandwidth, 24 மணி நேரமும் கஸ்டமர் சர்வீஸ் இதுதான் bluehost உடைய சக்சஸ்.

அதுமட்டுமல்லாமல் ப்ளூ ஹோஸ்ட் நீங்கள் ஒரே ஒரு கிளிக்கில் wordpress சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

WordPress blog in Tamil:

step:1

முதலில் bluehostல் சென்று அக்கவுண்ட் ஆரம்பியுங்கள்.

step:2

பின்பு உங்களுக்கு பிடித்தமான பிளானை தேர்வு செய்யுங்கள்.

நீங்கள் இப்போது தான் ஆரம்பித்து கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் முதலில் அதாவது basic போதுமானது.

step:3

உங்களுக்கான இலவச டொமைன் பெயர் தேர்வு செய்யுங்கள்.
டொமைன் பெயர் என்றால் என்ன என்பதைப் பற்றி நான் ஏற்கனவே கூறியுள்ளேன். நீங்கள் படித்துக் கொள்ளலாம்.

உங்களுக்குப் பிடித்தமான .com, .in, .org,etc,.. என்று எது வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

step:4

Bluehost ரெஜிஸ்ட்ரேஷன் கம்ப்ளீட் செய்யுங்கள்.

இப்போது பேசிக் பிளானில் 12,24,36 மாதம் என்று இருக்கும். நீங்கள் அதில் 12 மாதம் தேர்வு செய்யுங்கள்.
அத்துடன் domain பிரைவசி, site backup என்று பல default option அதில் இருக்கும். நீங்கள் அதை அப்போதைக்கு disable செய்து கொள்ளுங்கள் இல்லை என்றால் நிறைய செலவாகும்.

step:5

எல்லாம் முடிந்ததும் இறுதியாக payment option வரும். நீங்கள் கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், paypal மூலம் ஆன்லைனில் பணம் கட்டலாம்.

இவை அனைத்தும் முடிந்ததும் உங்களுக்கு bluehost cpanel open ஆகும். அதில் சென்று நீங்கள் வேர்டுபிரஸ் தேர்வு செய்து அதில் கிளிக் பண்ணுங்கள். தானாகவே ஒரே கிளிக்கில் வேர்ட்பிரஸ் இன்ஸ்டால் ஆகிவிடும்.

பின்பு ஒரு டைரி எடுத்துக்கொண்டு அதில் இருக்கும் wordpress மற்றும் bluehost ஆகியவற்றின் பாஸ்வேர்டுகளை எழுதி வைத்துக்கொள்ளுங்கள் அப்போதுதான் மறக்காமல் இருக்கும்.

இப்போது உங்கள் domain பெயருடன்/wp-admin என்று பிரவுசரில் சர்ச் பண்ணுங்கள்
eg:- www.yourdomainname.com/wp-admin.

இதுபோன்று நீங்கள் டைப் செய்தால் உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை நீங்கள் டைப் செய்து என்டர் கொடுத்தவுடன் wordpress டாஷ்போர்டு ஓபன் ஆகும்.

Start wordpress blog in tamil : இப்போது அதன் இடப்பக்கத்தில் new page, new post, plugin, themes என அனைத்தும் இருக்கும். இப்படி ஒவ்வொன்றாக நாம் பார்ப்போம்.

Post – நீங்கள் எழுத போகின்ற செய்திகள் அனைத்தும் இதில் தான் எழுத வேண்டும். எழுதி பப்ளிஷ் செய்ய வேண்டும்.

Media– images உங்களுடைய,PDF files, Video அனைத்தும் இதில் அப்லோடு செய்து கொள்ளலாம்.

Links – இதில் link add பண்ணலாம். நிறைய பிளாக்கர்கள் இது தற்போது கைவிட்டுவிடுவார்கள் நீங்களும் விட்டுவிடலாம்.

Page– உங்களுக்கு புதிய page நீங்கள் உருவாக்கலாம். உருவாக்கி எடிட் செய்து பப்ளிஸ் செய்து கொள்ளலாம்.

Comment – உங்களுக்கு வருகின்ற கமெண்ட்டுக்கு ரிப்ளை பண்ணலாம்.

Appearance – இதில் உங்களுடைய பிளாக் எப்படி காட்சி அளிக்க வேண்டும் என்பதை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம், மாற்றி அமைக்கலாம்.

Plugin – இதில் நிறைய plugin இருக்கும். உங்கள் பிளாக்கிற்கு தேவையான வகையில் அனைத்தும் plugin நீங்கள் download செய்து கொள்ளலாம்.

Tools – போஸ்ட் பப்ளிஷ் செய்வதற்கு நிறைய tools இருக்கின்றன, பயன்படுத்திக் கொள்ளலாம்.

Setting – உங்கள் பிளாக்கை நீங்கள் எடிட் செய்யலாம்.

இதுதான் ஒரு பிளாக் தொடங்குவதற்கு basic ஒன்றாகும். இதற்குப் பிறகு எப்படி போஸ்ட் செய்வது, எப்படி page உருவாக்குவது, அடுத்து என்ன என்ன செய்வது என்பதை பற்றியெல்லாம் உங்களுக்கு சொல்லித் தருவேன்.

இதுவரை உங்களுக்கு WordPress blog in Tamil புரிந்து இருந்தால் கமெண்ட் செய்யுங்கள், ஏதேனும் சந்தேகம் இருந்தால் தாராளமாக கேட்கலாம்.

4.1 34 votes
Article Rating

Santhosh

நான் ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ப்ளாகர் / டிஜிட்டல் மார்கெட்டராக பணியாற்றி வருகிறேன். fitness பைத்தியம், ஊர் சுற்றும் வாலிபன், பாடகர், குழந்தை பிரியர். மேலும் நிறைய இருக்கிறது ஆனால் சொன்னால் நம்ப மாடீங்க:)))

Related Post

NO FOLLOW & DO FOLLOW LINKS என்றால் என்ன?

NO FOLLOW மற்றும் DOFOLLOW LINK என்றால் என்ன? :  SEO என்றால் search engine optimization என்று அர்த்தம், இந்த வார்த்தையை சொல்லும் போதெல்லாம் நாம் சில அடிப்படையான வார்த்தைகளை தெரிந்துவைத்திருப்பது மிகவும் அவசியமானது. அதாவது BOTS, CRAWLING, NOINDEX, DOINDEX, NOFOLLOW, ...

Blogger-ஐ Google Analytics மற்றும் Google Search Console உடன் இணைப்பது எப்படி ?

How to Connect Your blog with Google Analytics and Google Search Console in Tamil | உங்கள் Blogger-ஐ Google Analytics உடன் இணைப்பது எப்படி? உங்கள் Blogger-ஐ Google Analytics உடன் இணைப்பது ...

இலவசமாக பிளாகரில் வலைத்தளத்தை உருவாக்குவது எப்படி?

பிளாகர் வலைத்தளத்தை உருவாக்குவது எப்படி? | How to create free blogger blog in Tamil:- Start free blogger blog in tamil (2020) :- நாம் எல்லாருக்கும் website create செய்யணும் என்று ஆர்வம் ...

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments