Karun Jeeragam Benefits in Tamil / கருஞ்சீரகத்தின் பயன்கள்

Karunjeeragam Benefits in Tamil :- இந்த பதிவில் கருஞ்சீரகத்தின் முழுமையான பயன்களை பற்றிப் பார்ப்போம். (karun jeeragam benefits in Tamil) அதாவது உலகிலுள்ள தாவர வகைகளில்  அதிக பயன் உள்ள தாவர வகைகளில் இதுவும் ஒன்றாகும்.

இது ஆசியாவை தாயகமாகக் கொண்ட ஒரு தாவரமாகும்.

முஸ்லிம் சமய தூதுவரான முகமது நபி அவர்கள் இத்தாவரத்தின் பற்றி கூறும் பொழுது  உலகில்  மரணத்தை தவிர அனைத்து வகையான நோய்களுக்கும் நிவாரணம் இந்த கருஞ்சீரகம் அளிக்கும் என்று கூறினார்கள்.

 இதன் மூலம் விளங்குவது யாதெனில் உலகில்  ஏற்படுகின்ற நோய்களுக்கு ஏதோ ஒரு வகையில் இந்த கருஞ்சீரகம் பயன் அளிக்கிறது என்பதாகும். அவ்வாறான பயன்களை இனி விரிவாகப் பார்ப்போம்.

கருஞ்சீரகத்தின் முழுமையான பயன்கள் (Karunjeeragam benefits in Tamil)

 1. உடல் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தல்

 கருஞ்சீரக விதையானது அதிக நோய் எதிர்ப்பு சக்தியும் உடல் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்தும் தன்மை கொண்ட ஒரு விதையாகும் இந்த விதைகளில் காணப்படும் வித்தியாசமான வேதிப்பொருள் ஒன்றும் காணப்படுகிறது.

அதாவது  தைமோ குயினன் எனப்படும் வேதிப் பொருள் காணபடுகிறது. இது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை வெளிப்படுத்தும் தன்மை மிகவும் அதிக அளவில் கொண்டது.

 இதன் காரணமாக கருஞ்சீரகத்தையும் உட்கொள்வதினால் இந்த நோய் எதிர்ப்பு சக்தியினை மிக விறைவாக நாம் பெற்றுக் கொள்ளலாம்.

 2. தேவையற்ற கொழுப்புகளை குறைத்தல்

கருஞ்சீரகம் விதையில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்களும் காணப்படுகின்றன.

இதற்கு மேலதிகமாக கெட்ட  கொழுப்புக்களை கரைக்கக்கூடிய கணிப்புகளும் இவற்றில் காணப்படுகின்றன.

இவற்றின் காரணமாக   உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மிக விரைவாக அகற்றப்படுகின்றன.

 3. உடம்பில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க உதவுதல்

 உடலில் ஏற்படும் அசாதாரண வீக்கங்களை இந்த விதைகளை உட்கொள்வதன் மூலம் இலகுவாக கட்டுப்படுத்த முடியும் அதாவது அழற்சி  காரணமாக ஏற்படக்கூடிய வீக்கம் மற்றும் சில  நுண்ணங்கி காரணமாக ஏற்படக்கூடிய அழற்சி  முறைகள் ஆகியவற்றை இவற்றின் மூலமாக குணப்படுத்த முடியும்.

 4. ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பதரல்

 கருஞ்சீரக விதைகளினால் தயாரிக்கப்படுகின்ற எண்ணெய் வகைகள் ஆஸ்துமா போன்ற சுவாச நோய் பிரச்சினைகளுக்கும் மிக  விரைவில் பயன் அளிக்கின்றன.

5. இதய  நோயிலிருந்து விடுபட வழி வகுத்தல்

விதையில் காணப்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றும் தன்மையானது எமது உடலில் சேரும் பொழுது இதயத்தில் காணப்படுகின்ற இரத்த நாளங்களை   தூய்மைப்படுத்துகிறது.

இதன் காரணமாக அதிக அளவில் ஏற்படக்கூடிய மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் குறைவாகவே ஏற்பட வழி செய்கின்றது.

 6.புற்றுநோய் காரணிகலில் இருந்து  விடுபடல் 

 ஒருவர் தினந்தோறும் சிறிய அளவிலான கருஞ்சீரக விதைகளை காலை வேளைகளில் உட்கொண்டு வருவதன் மூலம் அவருடைய உடம்பில் புற்றுநோய்க்கு எதிராக உருவாகக் கூடிய கலங்கள்அதிகளவில் உருவாவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதேபோல அதிக அளவில் கருஞ்சீரக விதிகளை உட்கொண்டவர்களுக்கு புற்று நோய் தாக்கமும் குறைந்த அளவிலேயே இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

 7. சளி ,இருமல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அளித்தல்

 சிறு குழந்தைகளுக்கு அதிக அளவில் ஏற்படும் சளி மற்றும் இருமல் பிரச்சினைகளுக்கு கருஞ்சீரக எண்ணெய் மிகச் சிறந்த பயனளிக்கிறது. கருஞ்சீரக எண்ணையை தலையில் தடவி அதன் மூலம் சளி மற்றும் இருமல் பிரச்சினைகளை  இலகுவாக   தவிர்த்து கொள்ளலாம்.

 8. முடி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு அளித்தல்

 முடி உதிர்வு பிரச்சினைகளால் அவதிப்படுவர்கள் பொடுகு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் மற்றும் உடம்பு சூட்டினால் தலை முடியினை  இழந்தவர்கள் தினமும் இதனை பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் எதிர்பார்க்கின்ற பயன்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

 9. தோல் நோய்க்கு நிரந்தர தீர்வு அளித்தல்

 சொரியாசிஸ், மற்றும் தோல் தொடர்பான வியாதிகள் உள்ளவர்கள்  கருஞ்சீரகம் விதைகளை அரைத்து தோல்களில் தடவுவதன் மூலம் அந்த நோயிலிருந்து முழுமையாக விடுதலை பெறலாம்.

 10. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு துணை புரிதல்

 பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் சிறுநீர் பகுதிகளில் சிறிய வலி மற்றும்  வயிற்று வலி போன்ற சில அசௌகரியங்கள் ஏற்படலாம்.

அவ்வாறான சந் தர்பங்களில்ங்களில்  கருஞ்சீரகத்தை சப்பிடுவதான் மூலம் அந்த பிரச்னைகளைக்  குண படுத்திக் கொள்ளலாம்.

 11. உடல் சூட்டை தணிக்க

 சில நபர்களுக்கு அடிக்கடி உடம்பு சூடாவது உண்டு  இவ்வாறு இணம் காண்பவர்கள் வாரத்தில் ஒருமுறையேனும்  கருஞ்சீரக எண்ணெய் வைத்து குளித்து வருவது மிகுந்த பயனளிக்கும்.

மேலும் ஆங்கிலத்தில் முழுமையாக தெரிந்து கொள்ள

4 1 vote
Article Rating
சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
அதிக வாக்குகள் பெற்றவை
புதிய பழைய
Inline Feedbacks
View all comments