நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் வெந்தயம் (Fenugreek seed benefits in Tamil) இன்றியமையாத பொருளாக எமது வாழ்வில் காணப்படுகிறது.
அதாவது நாம் உணவு சமைக்கும்போது பெரும்பாலும் வெந்தயத்தை பயன்படுத்துவது காணக்கூடியதாக இருக்கிறது.
அவ்வகையில் இந்த பதிவில் வெந்தயத்தின் முழுமையான பயன்பாடுகள் பற்றி முழுமையாக பார்ப்போம்.
வெந்தயத்தின் நன்மைகள் | Fenugreek seed benefits in Tamil
முடி தொடர்பான அனைத்து வகையான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு:-
இன்று எம்மில் பல பேருக்கு முடி தொடர்பான பிரச்சினைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
இதில் இருந்து விடுபடுவதற்கும் அதன் தாக்கத்தைக் குறைத்துக் கொள்வதற்கும் வெந்தயத்தை பல்வேறு முறைகளில் பயன்படுத்தும் மூலம் அவற்றின் தீர்வினை பெற்றுக் கொள்ளலாம்.
வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் வைத்து சூடாக்கி கற்றாழை சேர்த்து தலைக்கு போடுவதற்கான எண்ணெய் போல் தயார் செய்து தலைக்கு வைத்து வாரங்களில் மூன்று நாள் செய்து வர முடி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ளலாம்.
உடல் பலமடைய உதவிபுரிதல்:-
வெந்தயத்தில் காணப்படுகின்ற அதீத சக்திகள் அதாவது போலிக் அமிலம் ,கொப்பர் ,பொட்டாசியம் இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் ஏனைய விட்டமின்கள் காரணமாக உடல் பலம் அடைவதற்கு ஏதுவாக அமைகிறது.
கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு:-
வெந்தயம் பொதுவாக கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை நன்கு கட்டுப்படுத்தி அதிக அளவில் உதவிபுரிகிறது.
இவற்றில் காணப்படும் ஒரு வகையான தன்மை காரணமாக கொழுப்பை கரைக்க கூடிய ஆற்றலைப் பெறுகின்றது. இது உடம்பில் உள்ள கொழுப்புக்களை கரைத்து ரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் உருவாவதை தடுப்பதற்கு உதவுகிறது.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்:-
செரிமான பிரச்சினைகளில் பாரிய தாக்கம் செலுத்தும் வெந்தயங்கள் (vendhayam seed benefits in Tamil) அவற்றின் மூலம் நீரிழிவு நோய் உருவாவதை தடுப்பதற்கு பாரிய அளவில் உதவி புரிகின்றன.
அதாவது அவற்றில் காணப்படும் குளுகோசை கட்டுப்படுத்தும் தன்மை உடம்பில் அதிக அளவு சர்க்கரை சேருவதை தடுத்து நீரிழிவு நோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பளிக்கிறது.
செரிமான பிரச்சனைகளுக்கு உதவுதல்:-
உடம்பில் அதிக அளவில் பிரச்சினைகள் எழுவது செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஆகும்.
இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் பொழுது அவற்றுக்கு தீர்வாக வெந்தயத்தை எடுத்துக் கொள்வது மிகுந்த பயனளிக்கும் மேலும் வெந்தயத்தை சாப்பிடுவதன் மூலம் பசியின்மை ரீதியான பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு:-
வெந்தயங்களில் காணப்படுகின்ற அதிகமான நார்ச்சத்துக்கள் பொதுவாக மலச்சிக்கல் பிரச்சினைகளில் இருந்து விடுவதற்கு உதவுகின்றன.
அதாவது வெந்தயத்தை ஊற வைத்த நீரை காலை வேளைகளில் குடிப்ப தன் மூலம் மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் பெறலாம்.
இரத்தத்தில் கழிவுகள், நச்சுக்கள் சேறுவதை தடுத்தல்:-
வெந்தயங்கள் (Fenugreek benefits in Tamil) பொதுவாக உடம்பில் காணப்படுகின்ற நச்சுக்களை முழுமையாக அகற்றும் தன்மைகளைக் கொண்டு காணப்படுகின்றது.
அவற்றில் காணப்படுகின்ற நச்சுகளை விரைவாக கட்டுப்படுத்தும் தன்மை இரத்தம் தொடர்பான நோய்கள், ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றில் இருந்து விடுபட வெந்தயத்தை உட் கொண்டு வருவது ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி அந்த நோயிலிருந்து விடுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.
Fennel Seeds Benefits in Tamil / பெருஞ்சீரகத்தின் பயன்கள்
தாய்மார்களின் பால் சுரப்பு வீதத்தினை அதிகரித்தல்
குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்கள் பால் ரீதியான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வாக வெந்தயங்களை பயன்படுத்த முடியும்.
அதாவது வெந்தயங்களில் பால் சுரப்புக்கு தேவையான அதிக சத்துகள் காணப்படுவதால் பால் சுரக்கும் வீதத்திணை தூண்டச் செய்து பால் சுரக்கும் விதத்தை அதிகப்படுத்துகிறது.