உங்களுக்கு தெரியுமா Facebook விளம்பரம் என்றால் என்ன? அதில் எப்படி விளம்பரம் செய்வது? இன்று நாம் அதை பற்றி முழுவதுமாக தமிழில் பாப்போம்.
நீங்கள் முகநூல் பயன்படுத்தி கொண்டிருக்கும் பொழுது அதன் நடுவே பட விளம்பரங்கள் மற்றும் வீடியோ விளம்பரகள் பார்த்திருப்பீர்கள். இந்த விளம்பரம் மூலம் Facebook பணம் சம்பாதிக்கிறது.
Facebook பல மில்லியன் பயனர்களைக் கொண்ட மிகப் பெரிய சமூக வலைப்பின்னல் தளம் ஆகும்.
ஒரு கணக்கெடுப்பின்படி, 2020 முதல் காலாண்டில் பேஸ்புக்கில் மாதாந்திர பயனர்களின் எண்ணிக்கை சுமார் 2.6 பில்லியனாக இருந்தது. இது தவிர, இன்ஸ்டாகிராமில் 1 பில்லியனில் பயனர்கள் பயன்படுத்துகிறார்கள்.
How to run Facebook Ads in Tamil? | முகநூலில் எப்படி விளம்பரம் செய்வது?
ஃபேஸ்புக் அட்வர்டைசிங் (முகநூல் விளம்பரம்) உங்களது வாடிக்கையாளர்களிடம் உங்களது பிஸ்னசை கனெக்ட் செய்வதற்கு ஒரு சிறந்த வழியாகும்.
இப்பதிவில் ஃபேஸ்புக் அட்வர்டைசிங் பற்றிய முழு விவரமும் பார்ப்போம்.
#1. ஃபேஸ்புக் adsன் வகைகள் | Facebook ad types in Tamil
இமேஜ் விளம்பரம் (image ads) :
ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்ய தொடங்குவதற்கு இமேஜ் ads சிறந்த ஆரம்பமாக இருக்கும். நீங்கள் ஏதேனும் ஒரு போஸ்ட் ஐ boost செய்து விளம்பரப் படுத்திக் கொள்ளலாம்.
வீடியோ ads:-
உங்களது Newsfeed மற்றும் stories இல் வீடியோ ads ஐ ரன் செய்துகொள்ளலாம். அல்லது நீளமான பேஸ்புக் வீடியோவாக கூட உங்களது விளம்பரத்தை ஒளிபரப்பலாம். ஒரு பத்து வினாடி சின்ன வீடியோ உங்கள் பிஸ்னசை பல மடங்கு முன்னேற்றதிருக்கு எடுத்து செல்லும்.
வீடியோ கருத்துக்கணிப்பு விளம்பரம் (video poll ads):-
இது புதிய விதமான பேஸ்புக் paid advertising ஆகும். இது மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் சிறந்ததாகும்.
கரௌசெல் விளம்பரம்(carousel ads):-
இவ்வகையான விளம்பரத்தில் 10 இமேஜ் அல்லது வீடியோக்கள் வரை சேர்த்துக்கொண்டு நமது பொருட்களை அல்லது சர்வீஸை showcase செய்யலாம்.
Slideshow ads:-
இதில் உங்களது போட்டோக்களை வைத்து எளிதாக short video ad உருவாக்கலாம். உங்களிடம் போட்டோ இல்லை என்றால் அதற்கும் ads managerல் இருந்து நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். வீடியோக்கள் போன்றே slideshow ad உங்களது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும்.
Collection ads:-
இவ்வகையான விளம்பரங்கள் மொபைலில் மட்டுமே விளம்பரப்படுத்த முடியும். இதில் ஐந்து பொருட்களை உங்களது வாடிக்கையாளர்களுக்கு showcase செய்து கொள்ளலாம், மேலும் அதை அவர்கள் click செய்தால் அப்பொருளை வாங்கிக் கொள்வது போன்று இவ்வகையான விளம்பரம் தயார் செய்யப்பட்டுள்ளன.
Lead ads:-
இவ்வகையான விளம்பரமும் மொபைலில் மட்டுமே விளம்பர படுத்த முடியும். இது நியூஸ்லேட்டர், subscription அல்லது உங்களது வாடிக்கையாளர்களின் ஈமெயில், மொபைல் எண்கள் போன்ற விவரங்களை கேட்பதற்கு இது சிறந்ததாகும்.
இதை வைத்து உங்களது வாடிக்கையாளர்களை நீங்கள் target அவர்களை வாங்க வைக்க முடியும்.
Dynamic ads:-
டைனமிக் ads ஒருபொருளை குறிப்பிட்ட மக்களிடம் அதாவது interest உள்ள மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஒரு சிறந்த விளம்பர வழியாகும்.
Messenger ads:-
Newsfeed இல் click to messenger ad ரன் செய்யலாம். இதில் call to action போன்ற அம்சங்கள் உள்ளன. அதனை கிளிக் செய்தவுடன் உங்களது தனிப்பட்ட உரையாடலை அவர்களிடம் தொடங்கலாம்.
Stories ads:-
அமெரிக்கா ஆராய்ச்சியில் 75% மக்கள் தங்களது மொபைல் போனில் widescreen videos பார்ப்பதற்கு rotate செய்ய மாட்டார்கள் என்று கூறியுள்ளனர். இந்த வகை விளம்பரம் அந்த size விளம்பரங்கள் பார்ப்பதற்கு பயன்படுகிறது.
Payable ads:-
இது இன்னொரு புதிய format விளம்பரம் ஆகும். இதில் உங்களது content ஐ பார்க்கும் மக்கள் உங்களை தொடர்பு கொள்வதற்கான வசதி இவ்விளம்பரத்தில் உள்ளன.
#2. பேஸ்புக்கில் எப்படி விளம்பரம் செய்வது? | How to run facebook ads in tamil
பேஸ்புக்கில் விளம்பரம் செய்ய முதலில் ஒரு பேஸ்புக் பக்கம் தேவை. அடுத்தது பேஸ்புக் ads மேனேஜர் அல்லது பிசினஸ் மேனேஜரில் சென்று ஃபேஸ்புக் கேம்பைன் (campaign) கிரியேட் செய்து கொள்ள வேண்டும்.
இப்பதிவில் நாம் ads manager ஐ பின்பற்றுவோம்.
Step 1: உங்களது நோக்கத்தை தேர்வு செய்யவும்
ஃபேஸ்புக் ads மேனேஜர் இல் லாகின் செய்தபின் campaign tab செலக்ட் செய்யவும். அடுத்தது create to get started with new Facebook ad campaign ஐ கிளிக் செய்யவும்.
மேலும் ஃபேஸ்புக் உங்களுக்கு 11 மார்க்கெட்டிங் அப்ஜெக்டிவ்களை வழங்குகிறது.
- Brand Awareness (பிராண்ட் அவர்னஸ்) :- புதிய பார்வையாளர்களுக்கு உங்கள் பிராண்டை அறிமுகப்படுத்துங்கள்
- Reach :- உங்கள் விளம்பரத்தை உங்கள் பார்வையாளர்களுக்கு முடிந்தவரை காண்பிப்பதற்கு.
- ட்ராபிக் (Traffic) :- ஒரு குறிப்பிட்ட வலைப்பக்கம், ஆண்ட்ராய்டு ஆப் அல்லது பேஸ்புக் மெசஞ்சர் உரையாடலுக்கு போக்குவரத்தை (traffic) வர வைக்கலாம்.
- மக்களின் ஈடுபாடு(engagement) :- Posts அல்லது Page Likes எண்ணிக்கையை அதிகரிக்க, உங்கள் Eventல் வருகையை அதிகரிக்க அல்லது சிறப்பு சலுகையை கோர மக்களை ஊக்குவிக்க இதை பயன்படுத்தலாம்.
- App Install (ஆப் இன்ஸ்டால்) :- உங்களது ஆண்ட்ராய்டு ஆப்களை இன்ஸ்டால் செய்ய பயன்படுகிறது.
- Video Views (வீடியோ வியூஸ்) :- உங்கள் வீடியோக்களைப் பார்க்க அதிகமான பார்வையாளர்களை பெறுங்கள்.
- லீடு ஜெனரேஷன்(lead generation) :- உங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட சில விவரங்களை பெறுவதற்கு பயன்படும்.
- Messages (மெசேஜ்) :- பேஸ்புக் மெசஞ்சரைப் பயன்படுத்தி உங்கள் வணிகத்தைத் தொடர்பு கொள்ள மக்களை ஊக்குவிக்கலாம்.
- உரையாடல்கள்(conversation) :- உங்கள் பயன்பாட்டில் அல்லது பேஸ்புக் மெசஞ்சரில் அல்லது உங்கள் வலைத்தளத்தில் ஒரு குறிப்பிட்ட நடவடிக்கை எடுக்க நபர்களைப் பயன்படுத்தலாம்.
- Catalog sales (கேட்டலாக் சேல்ஸ்) :- மக்கள் வாங்க விரும்பும் தயாரிப்புகளுக்கான விளம்பரங்களைக் காண்பிக்க உங்கள் தயாரிப்பு பட்டியலுடன் (Catalog) இணைக்கலாம்.
- Store Traffic (ஸ்டோர் டிராபிக்) :- அருகிலுள்ள வாடிக்கையாளர்களை அருகில் உள்ள உங்கள் கடைகளுக்கு வர செய்ய இதை பயன்படுத்தலாம்.
உங்களது இலக்குக்கு ஏற்ப campaign தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Step 2: தேர்வு செய்த campaign க்கு பெயர் வைத்துக் கொள்ளுங்கள்.
Step 3: Ad அக்கவுன்டை செட் செய்துகொள்ளுங்கள்.
நீங்கள் ஏற்கனவே செட் செய்தால் next step என்ற ஆப்ஷன் உங்களுக்கு காண்பிக்கும், அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் புதிய நபராக இருந்தால் புதிய அக்கவுண்ட் கிரியேட் செய்ய வேண்டியதிருக்கும். அதற்கு Set Up Ad Account கிளிக் செய்ய வேண்டும்.
Step 4: வாடிக்கையாளர்களை டார்கெட் செய்யுங்கள்.
மொழி, வயது, லொகேஷன், etc., போன்ற தகவல்களை செலக்ட் செய்து ஆடியன்ஸை டார்கெட் செய்து கொள்ளுங்கள்.
அதற்கு கீழே, உங்களுடைய விளம்பரம் எத்தனை பேருக்கு காண்பிக்கப்படும் என்பதன் விபரம் உங்களுக்கு காண்பிக்கப்படும்.
Step 5: ஃபேஸ்புக் ad placements ஐ தேர்வு செய்யுங்கள்.
நீங்கள் பேஸ்புக் அட்வர்டைசிங் புதிது என்றால் ஆட்டோமேட்டிக் பிளேஸ்மெண்ட்ஸ் செலக்ட் செய்து கொள்ளுங்கள். அல்லது உங்களது வசதிக்கேற்ப மற்றும் உங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப செட் செய்து கொள்ளுங்கள்.
Step 6: பட்ஜெட் மற்றும் schedule லை செட் செய்யுங்கள்.
உங்கள் விளம்பரத்திற்கு ஒரு நாளைக்கு எவ்வளவு ரூபாய் spent செய்ய போகிறீர்கள் என்று செட் செய்யுங்கள்.
இதையும் படியுங்கள்:-
ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான 7 வழிகள்
Step 7: கடைசியாக உங்களது விளம்பரத்தை உருவாக்கவும்.
Ad format, text, media, போன்றவற்றைக் கொண்டு உங்களது விளம்பரத்தை உருவாக்குங்கள்.
இவ்விளம்பரத்தை வெளியிடுவதற்கு முன்பு நீங்கள் preview பட்டனை கிளிக் செய்து preview பார்த்துக்கொள்ளலாம். அடுத்தது பச்சைகலர் confirm பட்டனை கிளிக் செய்து சப்மிட் செய்துகொள்ளுங்கள்.
இறுதியாக உங்களது விளம்பரம் approved என்ற இமெயில் உங்களுக்கு வந்து சேரும்.
#3. பேஸ்புக் விளம்பரங்களின் விவரக்குறிப்புகள்:-
இமேஜ் விளம்பரம்(image ads)
Headline:25 எழுத்துக்கள்
Link description:30 எழுத்துக்கள்
Body text:125 எழுத்துக்கள்
Campaign objective: அனைத்தும்(video views தவிர)
வீடியோ விளம்பரங்கள்
Headline:25 எழுத்துக்கள்
Link description:30 எழுத்துக்கள்
Body text:125 எழுத்துக்கள்
Campaign objective: அனைத்தும்(catalog sales தவிர)
ஃபேஸ்புக் Stories ads
Text: எழுத்துக்களின் எண்ணிக்கை செட் செய்யவில்லை
Campaign objective: எங்கேஜ்மென்ட், மெஸேஜஸ், கேட்டலாக் சேல்ஸ், ஸ்டோர் டிராபிக்
Carousel ads
Headline:25 எழுத்துக்கள்
Link description:20 எழுத்துக்கள்
Body text:125 எழுத்துக்கள்
Campaign objective: அனைத்தும்( எங்கேஜிமெண்ட் மற்றும் வீடியோ வியூஸ் தவிர)
Slideshow ads
Headline:25 எழுத்துக்கள்
Link description:30 எழுத்துக்கள்
Body text:125 எழுத்துக்கள்
Campaign objective: அனைத்தும்
Collection ads
Headline:25 எழுத்துக்கள்
Link description: n/a
Body text: 90 எழுத்துக்கள்
Campaign objective: ட்ராஃபிக், உரையாடல், கேட்டலாக் சேல்ஸ், ஸ்டோர் டிராஃபிக்
Messenger inbox ads
Headline: n/a
Link description: n/a
Body text:125 எழுத்துக்கள்
Campaign objective: டிராஃபிக், ஆப் இன்ஸ்டால், உரையாடல், கேட்டலாக் சேல்ஸ், மெஸேஜஸ்
#4. Facebook ads ரன் செய்வதற்கு 5 டிப்ஸ்கள்:
* பார்வையாளர்களை டார்கெட் செய்து பரிசோதனை (analyze) செய்யுங்கள்
* ஃபேஸ்புக் பிக்சல்(Facebook pixel) பயன்படுத்துங்கள்
* Top-notch போட்டோஸ் மற்றும் வீடியோஸ் பயன்படுத்துங்கள்
* எல்லாவற்றையும் test செய்யவும்
* அவ்வப்போது பெர்பாமன்ஸை track மற்றும் optimize செய்ய வேண்டும்.