15+ பெண்களுக்கான Motivational கவிதைகள், படங்கள்

By Santhosh

Updated on:

motivational quotes in tamil

இந்த கட்டுரையில் நாம் 15+ Motivational Quotes, Whatsapp images in Tamil for Women பற்றி பார்க்கபோகிறோம். இவை உங்களுக்கு நல்ல Inspiration ஆக இருக்கும். வாழ்கையில் முன்னேற துடிக்கும் பல பெண்களுக்கு இந்த கவிதைகள் ஓர் உந்துதலாக இருக்கும்.

இந்த பெண்கள் மோடிவேஷன் கவிதைகள், வாட்சப் படங்கள் அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.

Tamil Motivational Quotes, Images for Women | Women Inspiration quotes in Tamil

  1. அமைதியாக இருப்பது நல்லது தான்

 ஆனால் நீ எந்த இடத்தில் பேச வேண்டுமோ

 அந்த இடத்தில் பேசாமல் விட்டுவிட்டால் 

அது உன் வாழ்நாள் தவறாகிவிடும்


tami motivation

தற்காப்புடன் கூடிய சுதந்திரமே

 ஒவ்வொரு பெண்ணிற்கும் மிக அவசியம்


ஒரு குழந்தைக்கு தாயான பின்பே

 என் தாயின் அசாதரணமான தியாகத்தை 

என்னால் புரிந்து கொள்ள முடிந்தது

motivation in tamil

எந்த நிலையிலும் உன் வாழ்நாள் தேடலை 

கவனமாக பற்றிக்கொள்

 நீ இருப்பது கூண்டுக்குள்ளா கூட்டுக்குள்ளா 

என்பதை நீயே தீர்மானி


இளம் பருவத்தில் கணவரை இழந்து

 மனைவியால் வாழ முடியாது

 என்று கூறும் சமூக அக்கறை தான்

 கடைசி காலத்தில் மனைவியை 

இழந்த இந்த முதியவர் எப்படி வாழ

 போகிறாரோ என்று ஆச்சரியப்படுகிறது


இது போன்ற மேலும் Tamil motivational quotes நீங்கள் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

உன் வாழ்நாளை 

தி. மு (திருமணத்திற்கு முன்)

 தி.பி (திருமணத்திற்கு பின்) 

என பிரிக்க எவரையும் அனுமதியாதே.


எவரையும் சாராமல் தனித்து வாழும் உறுதி 

அவளுக்கு இருந்தபோதிலும் எல்லோரையும் அரவணைத்து, 

விட்டுக்கொடுத்து போகும் உணர்வை

 அனைவர் மனதிலும் விதைப்பவளே தாய்



பள்ளிப் படிப்பிற்கு அப்பாற்பட்ட ஒழுங்குமுறையை

 தன்னிடமிருந்து தான் தன் மகன்

 கற்றுக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து 

ஒவ்வொரு கணவனும் தன் மனைவியை

 மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்துவது அவசியம்


தயக்கத்தை தளர்த்தி

 தைரியத்தை அணிந்து

 தன்னம்பிக்கையை பற்றி

 உன் திறமையை வெளிப்படுத்தும் போது

 உன்னைத் அடுத்தவர்களை திகைப்பில் ஆழ்த்துவது உறுதி


கல்வியோ, காக்கிச் சட்டையோ

 அரசியலோ, ஐநா சபையோ 

விளையாட்டோ, விண்வெளியோ 

பெண்கள் வெறும் பார்வையாளர்களாக

 இருந்த காலம் போய்

 பங்கேற்பாளர்களாய் மாறிவிட்டனர்


சூழ்நிலையால் தள்ளப்பட்டு 

மிகப்பெரும் பொறுப்பை

 தன்னகத்தே எடுக்கும் வரை

 அவளுக்கே தெரியவில்லை 

அவளால் எதுவும் முடியும் என்று


சில நேரங்களில் சொல்லி புரிய வைப்பதை விட 

சொல்லாமல் கஷ்டங்களை மறைத்து 

இயல்பாக இருப்பது போல் காட்டுவது 

அவளுக்கு எளிமையாகவே இருந்தது


வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க

 முடியாத கஷ்டங்களை சந்திக்கும்போது 

நீ எடுக்கப்போகும் முடிவில்தான்

 உன் வரலாறு உருவாகிறது


முடிந்து போனதை எண்ணி

 கவலை கொள்வதைவிட 

அடுத்தது என்ன என்ற 

ஆக்கப்பூர்வமான எண்ணத்தை

 மனதில் விதைத்து கொண்டால் 

அது உன்னை தங்கத்தைப் போல

 சுட்டுச் சுடர வைப்பது உறுதி


உன் விருப்பம், முன்னேற்றம், சுயமரியாதை,

 ஆசைப்பட்ட வாழ்க்கை என உன்னுடைய

 முடிவுகளை நீயே எடுக்கும்பொழுது

 உன் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் உதவாத

 வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும்

 அந்த ‘நாலு பேரு’ என்ன கூறினால் 

எனக்கென்ன என இருந்துகொள் தோழியே 

உன்னை யாரும் பின்னுக்கு இழுக்க முடியாது


உனது விருப்பம் வேறாக இருப்பின் 

சமூக மதிப்பீடுகளுக்கு பயந்து 

உன் திறமையை 

அடுக்கலையில் முடக்கி விடாதே


தங்கத்தால் செய்யப்பட்டாலும்

 கூண்டு கூடாகாது 

அதற்குள் துணிவின்றி தேங்கிவிடாதே


பழமைவாத சிந்தனைகளும்

 கலாச்சார ஆதிக்கங்களும் 

நிரம்பிய குடும்ப நிறுவனத்தை

 கட்டிக் காப்பதில் நின்றுவிடக் கூடாது

 ஒரு பெண்ணின் திறமை


பெண் என்பவள் ஒருவரைச் சார்ந்து இல்லாமல்

 வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் 

கற்றுக் கொண்டு தன் சுய கால்களில்

 நிற்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்


மலடி, விதவை போன்ற சொற்களைக் கொண்டு

 பெண்களை தரம் பிரித்துப் பார்க்கக்கூடிய 

சமூகத்தில் தான் நாம் இன்னும்

 வாழ்ந்து கொண்டிருக்கிறோம் 

3.7 3 votes
Article Rating

Santhosh

நான் ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ப்ளாகர் / டிஜிட்டல் மார்கெட்டராக பணியாற்றி வருகிறேன். fitness பைத்தியம், ஊர் சுற்றும் வாலிபன், பாடகர், குழந்தை பிரியர். மேலும் நிறைய இருக்கிறது ஆனால் சொன்னால் நம்ப மாடீங்க:)))

Related Post

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments