தெரிந்து கொள்வோம்

இன்சூரன்ஸ் பாலிசி வகைகள் | ஆயுள் காப்பீட்டின் வகைகள்

insurance policies types

Types of Insurance policies in tamil | ஆயுள் காப்பீட்டின் வகைகள்

insurance policies types :-   இதை பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு முன்னால் ஆயுள் காப்பீடு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1. டேர்ம் இன்ஷூரன்ஸ் ( Term Insurance )

இந்த காப்பீட்டு கொள்கையானது 100 சதவீதம் பாதுகாபிற்காக வழங்க வடிவமைக்கப் பட்டுள்ளது

குறைந்த பிரிமியம் அதிக மதிப்பிற்க்கு காப்பீடு செய்து கொள்ளும் வசதி.

ஒரு குறிப்பிட்ட காலம் வரை காப்பீடு செய்த நபரின் குடும்பத்தினரை பாதுகாக்கிறது இது ஒரு தூய ஆபத்து (Term RisK Cover) கொள்கை.

பாலிசிதாரர் பாலிசி எடுத்த காலத்திற்க்குள் அவரது வாழ்க்கை முடிவுற்றால், ஒரு நிலையான காப்பீடு செய்த தொகையை பயனாளிகள் குடும்பத்திற்க்கு வழங்கப்படும்.

உதாரணமாக ஒரு நபர் 15 ஆண்டுகளுக்கு ஒரு ரூ 10 லட்சம் மதிப்பிற்க்கு காலம் காப்புறுதி காப்பீட்டு செய்திருந்தால், (Term Insurance Policy) அவர் முதல் வருடமே இறந்து விட்டாலும் அல்லது 15 ஆண்டு காலத்திற்குள் இறந்துவிட்டால் மட்டுமே, அவரது குடும்பத்தினர் ரூ 10 லட்சம் தொகை கோர உரிமை உள்ளது. ஒவ்வொரு வருடமும் சரியான நாளில் பிரிமியத்தை செலுத்தியிருக்க வேண்டும் – 15 ஆண்டுகளூக்கு

கால காப்புறுதி காப்பீட்டு கொள்கை (Term Insurance Policy) வைத்திருப்பவர் 15 ஆண்டு காலத்திற்க்கு மேலும் உயிருடன் வாழ்ந்து வந்தால் என்றால் •, செலுத்திய பணம் (premium) கட்டணத்தை திரும்ப பெற முடியாது.

நன்மை, இது தவிர ஒரு தனிப்பட்ட குடும்ப நிதி பாதுகாப்புக்கு செலுத்தப்படும் பிரிமியம் வருமான வரி விலக்கு 80 C deduction கழிவு கிடைக்கின்றது.

• இந்த காப்பீட்டு கொள்கைகள் 100 சதவீதம் ஆபத்து கவர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது

எனவே அவர்கள் அடிப்படை பிரிமியம் ஒன்றை தவிர வேறு எந்த கூடுதல் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

2. எண்டோவ்மென்ட் ( Endowment ) | insurance policies types

இந்த வகையான பாலிசிகள், முதலீட்டு வகையைச் சேர்ந்தவை. இந்த பாலிசிகளில் கட்டும் பிரீமியத்தில் ஒரு பங்கு காப்பீட்டுக்காகவும், மறுபங்கு முதலீட்டுக்காகவும் பிரித்து முதலீடு செய்யப்படும்.

பாலிசிதாரருக்கு ஏதேனும் உயிரிழப்பு நேரிட்டால், காப்பீட்டுத் தொகை அவரது குடும்பத்தாருக்குச் சென்றடையும்.

இதுவே, பாலிசிதாரர் பாலிசி முடியும் வரை உயிரோடு இருந்தால், முதலீடு செய்த பணத்துடன், அதன்மூலம் வரும் லாபத்தையும் சேர்த்து பாலிசி தாரர்களிடம் தரப்படும்.

இந்த பாலிசிகளின் பிரீமியம் தொகை அதிகமாகவே இருக்கும். இது தவிர, ஒவ்வொரு பாலிசியின் தன்மையும் வேறுவேறு மாதிரி இருக்கும்.

3. குழந்தைகள் திட்டங்கள் (Child plan)

திட்டத் தொகையுடன் போனஸ் தொகையினையும் (இருப்பின்) திட்டமிட்ட நேரத்தில் குழந்தைக்கு வழங்கப்படும். இதை முன்மொழிந்தவர் உயிருடன் இருந்தாலோ அல்லது இறந்து விட்டாலோ, இந்த பாலிசிக்கான பணத்தை குழந்தையால் பெற முடியும்.

முன்மொழிபவர் இறந்துபோகும் சூழலில், தொடர்ந்து செலுத்த வேண்டிய பிரீமியங்களை அவரது குடும்பத்தினர் அடுத்த செலுத்தவேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், காப்பீடு செய்தவர் இறந்து போனால், திட்டத் தொகையை குழந்தை பெறுவதும் பெற முடியாமல் போவதும் பாலிசியின் வகையைப் பொறுத்தது.

எவ்வாறாயினும், பாலிசி தொடர்ந்திருப்பதோடு, திட்டத்தொகையுடன் போனஸ் இருப்பின், அவ்விரண்டையும் பாலிசியில் குறிப்பிட்ட காலத்தில், குழந்தையால் பெற முடியும்.

இதுபோன்ற பாலிசிக்காக, பெற்றோர்/பாதுகாவலர்/தாத்தா-பாட்டி; இவர்களில் ஒருவர் முன்மொழிபவராக இருக்கலாம்; பாலிசிக்கான பிரீமியத்தை இவர்கள் செலுத்துவார்கள்.

பாலிசி காலவரை உயிருடன் இருந்தால், திட்டமிட்ட காலத்தில், குழந்தைக்கு பணம் வழங்கப்படும்.
இதுபோன்ற பாலிசிகள், குழந்தையின் உயர் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்கு மிகவும் பொருத்தமானவை.

4. யூனிட்-லிங்க் இன்சூரன்ஸ் பிளான் ( Unit Linked Insurance Plans )

பிரீமியத்தின் ஒரு பகுதி, பங்குச் சந்தையில் அல்லது பரஸ்பர நிதியில் முதலீடு செய்யப்படுகிறது. ஆகவே, அவர்களின் தினசரி கண்காணிப்பில் இருந்து, இதுபோன்ற தெளிவான (யூனிட் லிங்க்ட்) பாலிசி மூலம் வருவாய் ஈட்டப்படுவது புலனாகிறது.

நிறுவனமானது, காப்பீடு மற்றும் நிர்வாகச் செலவுகளுக்காக எஞ்சிய பிரீமியத் தொகையினைப் பயன்படுத்துகின்றன.

காப்பீடு செய்தவருடைய இறப்பின்போது, அவரால் நியமிக்கப்பட்டவர் திட்டத் தொகையுடன் காப்பீட்டு நிறுவனத்தால் சந்தையில் ஈட்டிய வருவாயினையும் பெறுவார்.

பாலிசி காலம் வரை உயிருடன் இருந்தால், காப்பீடு செய்தவரால் திட்டத் தொகையுடன் காப்பீட்டு நிறுவனத்தால் சந்தையில் ஈட்டிய வருவாயினையும் பெறமுடியும்.

5. மணி பேக் பிளான் ( Money Back Plan )

பாலிசியின் காலவரையின்போது, காப்பீடு செய்தவர், திட்டத் தொகையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை (சவீதம்) சீரான கால இடைவெளியில் பெறுவார். பாலிசி காலவரையின்போது பெற்றுக்கொள்ளும் இந்தப் பணத்துக்கு வரி விலக்குண்டு.

பாலிசி காலவரை அல்லது முதிர்வுகாலம் வரை, காப்பீடு செய்தவர் உயிருடன் இருந்தால், எஞ்சியுள்ள திட்டத் தொகையுடன் பாலிசிக்கான போனஸ் தொகையையும் சேர்த்துப் பெறுவார்.

காப்பீடு செய்தவர் இறக்கும்போது, பாலிசி நடைமுறையிலிருந்த ஆண்டுகள் வரை நியமனதாரருக்கு திட்டத் தொகையுடன் போனஸ் தொகையும் வழங்கப்படும். (பாலிசி காலவரையின்போது காப்பீடு செய்தவர் பெற்றுக்கொண்ட தொகை, நியமினதாரருக்கு வழங்கவேண்டிய தொகையிலிருந்து குறைக்கப்படாது.)

மணி பேக் பாலிசிகளின் விலை, லாபமுள்ள எண்டோமென்ட் பாலிசிகளைவிடவும் அதிகமானவை. விடுமுறைக்குச் செல்லுதல், வீட்டுக்குப் புதிய பொருட்கள் வாங்குதல் அல்லது அதே தொகையினை மீண்டும் முதலீடு செய்தல் போன்றவற்றுக்காக, அநேகமானோர் இது போன்ற மணி பேக் பாலிசிகளைப் பயன்படுத்த விரும்புவர்.

6. வாழ்நாள் முழுவதற்குமான திட்டங்கள் ( Whole Life Policy)

வாழ்நாள் முழுவதற்குமான பாலிசிகளும், காப்பீடு செய்தவர் இறக்கும் வரையில், அவருக்கான காப்பீட்டை வழங்குகின்றன.
காப்பீடு செய்தவர் இறக்கும்போது, அவரால் நியமிக்கப்பட்டவர் திட்டத் தொகையுடன் போனஸ் தொகை இருப்பின் அதனையும் சேர்த்துப் பெறுவார்.

பாலிசிக்கான காலம் வரையறுக்கப்படாதவிடத்து, வாழ்நாள் முழுவதற்குமான பாலிசிகளும், ஒரே மாதிரியான நன்மைகளை வழங்குவதில்லை. எவ்வாறாயினும், காப்பீடு செய்தவர், பணத்தை திரும்பப் பெறவோ அல்லது பாலிசியின் பணப் பெறுமதிக்கெதிராக கடன்பெறவோ முடியும்.

பொதுவாக, வாழ்நாள் முழுவதற்குமான பாலிசியின் பணப் பெறுமதி (வட்டி அல்லது பிரீமியத்திலிருந்து சம்பாதித்த போனஸ்), இலாபத்துடன் கூடிய எண்டோமென்ட் பாலிசியை விட மிகவும் அதிகமானது.

மேலும், வாழ்நாள் முழுவதற்குமான பாலிசிக்கான பிரீமியம் கட்டணம், நீண்ட காலத்திற்குச் செலுத்தப்படுகிறது. எவ்வாறாயினும், காப்பீடு செய்தவர் பிரீமியம் செலுத்தும் காலவரையைத் தன் விருப்பத்திற்கேற்ப அவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

7. பென்ஷன் பிளான்கள் (Pension plan)

பென்ஷன் பாலிசிகள், காப்பீடு செய்தவருக்கு அல்லது அவர் நியமித்தவருக்கு நிலையான காலச்சுழற்சியில், பணத்தொகையினை முறையாக வழங்குகின்றன.

காப்பீடு செய்தவர், தனது பென்ஷன் தொகையினை எப்பொழுது மற்றும் எவ்வளவு காலத்திற்கு (காலவரை) பெறவெண்டும் என்பதை விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கலாம்.

காப்பீடு செய்தவர், பாலிசியின் காலவரையில் இறக்கும் சூழலில், நியமனதாரர் பணத்தினை மொத்தமாகப் பெறலாம் அல்லது பாலிசியின் காலவரை உள்ளவரை, பென்சன் தொகையினை தொடர்ந்து பெறலாம்.

உங்கள் எல்லா நோக்கங்களையும் தனியொரு பாலிசியால் நிறைவேற்ற முடியாததால், பல நன்மைகளை வழங்கும் வேறுபட்ட பாலிசிகள் பற்றி அறிந்து வைத்திருக்கும்படி ஆலோசனை வழங்கப்படுகிறது.

Related posts
தெரிந்து கொள்வோம்

404 error என்றால் என்ன?

தெரிந்து கொள்வோம்

ஆயுள் காப்பீடு என்றால் என்ன?

தெரிந்து கொள்வோம்

10 பயனுள்ள சில முக்கிய வலைத்தளங்கள் (Part - 1)

Sign up for our Newsletter and
stay informed

Leave a Reply

avatar
  சப்ஸ்க்ரைப்  
தெரிய படுத்துங்கள்