TN Employment இல் Registration செய்வது எப்படி? முழு விளக்கம்

TN Employment இல் Registration செய்வது என்பது மிகவும் கடினமான காரியம் அல்ல. இதை நீங்களே உங்களின் கணினியின் மூலம் செய்ய முடியும். உங்களுக்கு தமிழ்நாடு வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்வதற்கான விவரங்கள் தெரியவில்லையா? அதை பற்றிய கவலையை விடுங்கள்.

நீங்கள் வேலைவாய்ப்பு இணையதளத்தில் எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் மற்றும் அதற்க்கு தேவையான ஆவணங்கள் என்ன போன்ற முழு விவரங்களையும் இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

2013 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை உங்களின் கல்வித்தகுதிகளை பதிவு செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தான் செல்ல வேண்டும். அன்றைய நேரத்தில் அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்ய பல மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

ஆனால் 2013 செப்டம்பர் 15 ஆம் தேதி TN Gov Velai Vaippu Employment Portal யை தொடங்கப்பட்ட பின்பு, படிப்படியாக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்யும் முறை குறைந்தது. மாணவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள நெட் சென்டர்கள் மூலமாகவே Registration செய்து கொண்டனர்.

தற்போது ஒருபடி மேலாக அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்கின்றனர். 

நீங்கள் சில காரணங்களால் பதிவு செய்யாமல் விட்டிருக்கலாம். ஆனால் உங்களுக்கு இன்னும் அந்த வாய்ப்பு இருக்கிறது. நான் சொல்லப்போகும் செயல்முறையை பின்பற்றுவதன் மூலம் நீங்களே ஆன்லைன் மூலம் பதிவு செய்ய முடியும்.  

TN Velaivaippu இல் எவ்வாறு Registration செய்வது என்பதை சொல்வதற்கு முன்பு, அதை பற்றிய சில பொதுவான தகவல்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

TN Velaivaippu இல் எதற்காக பதிவு செய்ய வேண்டும்?

இது அனைவரின் மனதிலும் எழும் ஒரு பொதுவான கேள்வி ஆகும். நமது கல்வித்தகவல்களை எதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வது அவசியம் அல்லவா.

  • வேலை தேடும் நபர்களுக்கு ஒரு ஆன்லைன் தளத்தை வழங்கி அதன் மூலம் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளுதல்
  • வேலை தேடும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து தரவை (Data) சேகரிக்க
  • நீங்கள் ஒரு அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது TN Employment இல் பதிவு செய்த நம்பரை கொடுக்க வேண்டியதிருக்கும்.
  • வேலைவாய்ப்பற்ற தகுதியுள்ள இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

TN வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்வதற்கான தகுதிகள் (Eligibility)

தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு நீங்கள் பின்வரும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

  • விண்ணப்பிக்கும் நபர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • 8th, 10th, 12th, UG, PG போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் பதிவு செய்யலாம்.
  • தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களும் பதிவு செய்யலாம்.
  • Driving Licence, Typewriting, Computer Course, Sports, NSS, NCC போன்ற பிற தகுதிகள் உள்ளவர்களும் தகுதியுடையவர்கள்.

Register செய்ய தேவையான Documents

  • Marksheet 
  • Transfer Certificate (TC)
  • Ration Card
  • Caste Certificate
  • Aadhaar Card
  • Voter ID
  • Sports Certificate
  • NCC, NSS Certificate

மேலே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து Documents களையும் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்களிடம் இருக்கும் Documents களை மட்டும் வைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

TN Velaivaippu இல் Online மூலம் Registration செய்வது எப்படி

மேலே சொல்லப்பட்ட தகவல்களால் உங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கான அவசியம் பற்றிய ஒரு புரிதல் ஏற்பட்டிருக்கும்.

இப்பொழுது Registration செய்வதற்கான செயல்முறை பற்றி காணலாம்.

Step 1: இங்கே கொடுக்கப்பட்டுள்ள Tnvelaivaippu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை கிளிக் செய்யவும்.

Step 2: இப்பொழுது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறைக்கான இணைய பக்கம் திறக்கும். அதில் New User என்பதை கிளிக் செய்யவும்.

Step 3: Terms and Conditions பக்கத்தை முழுமையாக படிக்கவும். படித்துவிட்டு I agree என்பதை அழுத்தவும்.

Candidate Registration Form

Step 4: தற்போது Candidate Registration Form Open ஆகும். அவற்றில் கேட்கப்பட்ட தகவல்களை பின்வருமாறு நிரப்பவும்.

Name, Father Name, Gender, date of Birth, Email ID, Address Proof Type  போன்றவற்றை சரியாக நிரப்பவும்.

Fill Candidate Registration Form - TN Employment

User ID என்ற இடத்தில் ஒரு புதிய User ID யை Type செய்யவும். எடுத்துக்காட்டாக, murali6854, MUrali63, MURALI9595

ஒருவேளை நீங்கள் Type செய்யும் User ID யை வேறு யாராவது ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருந்தால், அதை மீண்டும் உங்களால் பயன்படுத்த முடியாது. அவ்வாறு இருப்பின் நீங்கள் வேறொரு User ID யை Type செய்ய வேண்டும்.

பிறகு Password யை Enter செய்யவும். இந்த User ID மற்றும் Password ஆனது உங்களின் கணக்கை Login செய்ய உதவும்.

Aadhaar Card Number, Image Code, Mobile Number போன்றவற்றை நிரப்பி Save என்பதை கிளிக் செய்யவும்.

Personal Details

Step 5: இதில் உங்களின் Personal Details யை Enter செய்யவும். சில தகவல்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டிருக்கலாம். இருப்பினும், இதில் நிரப்பாமல் இருக்கும் விவரங்களை Enter செய்யவும்.

Enter Your Personal Details and Click Next

நீங்கள் MBC அல்லது BC பிரிவில் இருந்தால், Do The Candidate belong to OBC category? என்பதை டிக் செய்துகொள்ளவும்.

கிராமப்புறத்தை சேர்ந்தவர் என்றால் Rural என்றும், நகர்ப்புறத்தை சேர்ந்தவர் Urban என்பதையும் தேர்வு செய்க.

பிறகு  Next என்பதை அழுத்தவும்.

Contact Details

Step 6: உங்களின் Contact Details யை Enter செய்து Next என்பதை கிளிக் செய்க.

Type Your Contact Details for TN Velaivaippu

Qualification Details

Step 7: Please Select Qualification என்ற இடத்தில் உங்களின் கல்வித்தகுதியை தேர்வு செய்யவும். 

Select Education Qualification

தற்போது Board, Total Marks, Year of Passing, Medium, Certificate Number போன்றவற்றை Enter செய்யவும்.

அரசாங்க பள்ளிகளில் படித்த மாணவர்களாக இருந்தால், State Board என்பதை தேர்வு செய்யவும்.

Enter Your Full Education Details - TN Employment Registartion

இப்பொழுது Add என்பதை கிளிக் செய்க.

Step 8: தற்போது நீங்கள் Add செய்த கல்வித்தகுதி சேமிக்கப்பட்டுவிடும். நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்வித்தகுதிகளை சேர்க்க விரும்பினால், இதே போன்று ஒன்றன் பின் ஒன்றாக Add செய்துகொள்ளலாம்.

Select Qualification and Click Next

நீங்கள் Add செய்த கல்வித்தகுதியை தேர்வு செய்து Next என்பதை அழுத்துக.

Technical/ Diploma/ Certificate Course 

Step 9: Technical/ Diploma/ Certificate Course இதுபோன்ற Qualification ஏதேனும் இருந்தால் அதையும் Add செய்யலாம். ஆனால்  இது கட்டாயம் இல்லை. உங்களிடம் ஏதும் இல்லையென்றால் Next என்பதை கிளிக் செய்க.

Provide Your Technical Courses - TN Velaivaippu

Skills Details

Step 10: உங்களிடம் Typewriting, Computer Course, License, Sports, NCC, NSS போன்ற Skill Details இருந்தால், அவற்றை பற்றிய விவரங்களையும் வழங்கவும். 

Select Your Skill Details

பிறகு கடைசியாக Save என்பதை கிளிக் செய்யவும். 

View Profile

Step 11: இப்பொழுது View Profile என்ற பக்கம் திறக்கும். இதில் நீங்கள் முதலில் இருந்து Enter செய்த அனைத்து தகவல்களும் ஒரே பக்கத்தில் தெரியும். நீங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்பு Continue என்பதை கிளிக் செய்யவும்.

Now Show Your Full Profile Details

Step 12: தற்போது வேலைவாய்ப்பு இணையதளத்தில் வெற்றிகரமாக பதிவு செய்துவிட்டீர்கள். மேலும் Registration Number உம் உருவாகியிருக்கும். இப்போது தோன்றும் Pop up திரையில் OK என்பதை அழுத்தவும்.

Now Successfully Complete Your Registration in Tn Employment

Step 13: உங்களின் Employment Registration Identity Card யை Print செய்வதற்கான பக்கம் திறக்கும். அதில் Print என்பதை கிளிக் Print எடுத்துக்கொள்ளலாம் அல்லது Save செய்துகொள்ளலாம்.

Take Print Your TN Employment Registration Card

இதையும் படியுங்கள் :- Aadhaar Card யை Online மூலம் Apply செய்வது எப்படி?

பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி? | முழு விளக்கம்

TN Gov Velaivaippu யை எவ்வாறு Login செய்வது 

நீங்கள் வெற்றிகரமாக பதிவு செய்த பிறகு எப்பொழுது வேண்டுமானாலும் அதை Login செய்து பார்க்க முடியும். அதற்கான செயல்முறை பின்வருமாறு:

Step 1: TN Velaivaippu என்ற இணையதளத்தை அணுகவும்.

Step 2: உங்களின் User ID மற்றும் Password யை உள்ளிட்டு Login செய்யவும்.

Step 3: Login செய்தவுடன் உங்களின் Profile details தெரிவதை காணலாம். இதில் தேவைப்பட்டால் Contact Details யை Change செய்தல், Qualification Add செய்தல், Registration Card யை Print செய்தல் போன்றவற்றை செய்யலாம்.

TN Gov Velaivaippu எவ்வாறு Renewal செய்வது

நீங்கள் ஒருசில Steps களின் மூலம் வேலைவாய்ப்பு எண்ணை Renewal செய்ய முடியும்.

Step 1: User ID மற்றும் Password உள்ளிட்டு Login செய்யவும்.

Step 2: Update Profile > Renewal > Candidate Renewal என்பதை கிளிக் செய்யவும்.

TN Velaivaippu Renewal

Step 3: இதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை Enter செய்து Renew என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது உங்களின் Registration Number வெற்றிகரமாக Renewal ஆகிவிடும்.

நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியவை:-

  • நீங்கள் பதிவு செய்யும் போது தவறான தகவல்கள் எதையும் உள்ளிட வேண்டாம்.
  • Register செய்த பிறகு எந்த நேரத்திலும் கல்வி, வேலை அனுபவம் போன்ற தகவல்களை புதுப்பித்துக்கொள்ள முடியும்.
  • முதுகலை பட்டதாரிகள் சம்பந்தப்பட்ட பிராந்திய அலுவலகம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • பதிவு செய்த விவரங்களில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், தொடர்புடைய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை  நேரில் அணுக வேண்டும். 
  • வேட்பாளர்கள் பதிவு நம்பரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தவறாமல் Renewal செய்ய வேண்டும்.

இந்த கட்டுரையில் வேலைவாய்ப்பு இணையதளத்தில் எவ்வாறு Registration மற்றும் Renewal செய்வது போன்ற தகவல்களை தெரிந்து கொண்டீர்கள். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களுக்கு இதை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே பதிவிடவும். 

ஆன்லைனில் PF பணம் எப்படி எடுப்பது? – முழு விளக்கம்

PPF கணக்கு என்றால் என்ன? முழு விளக்கம் தமிழில்

0 0 votes
Article Rating
சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
அதிக வாக்குகள் பெற்றவை
புதிய பழைய
Inline Feedbacks
View all comments