Smartphone Buying Guide in Tamil – What is Processor, Memory, Camera, Display in Tamil
நாம் அனைவர்க்கும் இந்த கால கட்டத்தில் ஸ்மார்ட்போன் மிகவும் அவசிய தேவையாகி விட்டது. நாம் அனைவரும் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்த பண்டிகையின் போது மொபைல் போன்கள் வாங்க காத்திருப்போம். எந்த அதிரடி offers இருக்கின்றது என்று நாம் தேடுவோம்.
இன்று நாம் SMARTPHONE வாங்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றி பாப்போம். Display, RAM, Memory, Camera என சிலவற்றை பாப்போம்.
ஸ்மார்ட் போன் வாங்கும்போது Processor, Camera, Memory, Display பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மொபைல் போனின் பேட்டரி திறன் மற்றும் சார்ஜர் Fast சார்ஜிங் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். மொபைலின் RAM and ROM பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
மொபைல் போனின் Camera Quality பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானது. மொபைல் போனின் Android OS பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். இந்த கட்டுரையில் smartphone buying guide tamil பற்றி எல்லாமே details காண்போம்.
PROCESSOR என்றால் என்ன? | Processor Meaning in Tamil
PROCESSOR உண்மையில் உங்கள் தொலைபேசியின் இதயம் மற்றும் ஆன்மா ஆகும். வெவ்வேறு PROCESSORகள் பொதுவாக வேகத்தால் வகைப்படுத்தப்படுகின்றன.
இது Gigahertz அல்லது GHZ வெளிப்படுத்தப்படுகிறது. எளிமையாகச் சொன்னால் உங்கள் Processor எவ்வளவு வேகமாக இருக்கிறதோ அவ்வளவு வேகமாக அது நன்றாக இயங்கும் என்று அர்த்தம்.
பொதுவாக உங்கள் தொலைபேசி வேகமாக இருக்க வேண்டும், அப்போது தன் நீங்கள் பெரிய அளவிலான Games, Apps பயன்படுத்தும்போது உங்களுடைய போன் Hang ஆகாமல் வேகமாக இருக்கும். Processor தொடர்பான சொற்களின் இன்னும் சில குறிப்பிட்ட விளக்கங்கள் இங்க.
SNAPDRAGON PROCESSOR – ஸ்னாப்டிராகன் பிராசஸர்
கூகுள் ஆண்ட்ராய்டு இயக்க முறையில் இயங்கும் பெரும்பாலான சாதனங்கள் (குவால்காம் ஸ்னாப்ட்ராகன் ) சிப்செட்டுகளை கொண்டே இயங்குகின்றன. மேலும் Qualcomm அதன் தயாரிப்புகளான 200, 400, 600 மற்றும் 800 என நான்கு வகுப்புகள் ஆக பிரித்துள்ளனர்.
அதிக திறன் கொண்ட SNAPDRAGON PROCESSSOR இங்கே இருக்கின்றது, இது Mediatek Processor விட சக்தி வாய்ந்தது ஆகும். இது தான் இப்போது மார்கெட்டில் ராஜாவாக திகழ்கிறது.
SNAPDRAGON PROCESSOR TOP 3
snapdragon 888 processor
snapdragon 865 processor
snapdragon 845 processor
DISPLAY என்றால் என்ன? Types Of Smartphone Display in Tamil
SMARTPHONE வாங்குவதற்கு முன் CAMERA, PROCESSOR ,MEMORY போன்றவற்றில் கவனம் செலுத்துகிறோம். இதை விட முக்கியமான ஒன்று DISPLAY ஆகும். DISPLAYயில் பல வகைகள் உண்டு.
- TFT – (THIN FLIM TRANSISTOR TECHNOLOGY)
- IPS – ( IN PLACE SWITCHING)
- OLED – ( ORGANIC LIGHT EMITTING DIODE)
- LCD – ( LIQUID CRYSTAL DISPLAY)
- AMOLED – ( ACTIVE MATRIX ORGANIC LIGHT EMITTING DIODE)
- SUPER AMOLED DISPLAY
TFT DISPLAY என்றால் என்ன?
TFT – ( THIN FILM TRANSISTOR) என LCD பிளாட் பேனல் DISPLAYளே திரை. ஒவ்வொரு pixel டிரான்சிஸ்டர்களால் கட்டுப்படுத்தப்படுவதால். இது அவ்வாறு அழைக்கப்படுகிறது. TFT தொழில்நுட்பம் அனைத்து பிளேட் பேனல் தொழில்நுட்பங்களின் சிறந்த தெளிவு திறனை வழங்குகிறது.
ஆனால் இது மிக விலை உயர்ந்தது TFT காட்சிகள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட தெளிவு திறனில் இயங்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
IPS DISPLAY என்றால் என்ன?
IPS – ( IN PLACE SWITCHING) என்பது திரவ படிக காட்சிகளுக்கான LCD ஒரு திரை தொழில்நுட்பமாகும்.1980களின் பிற்பகுதியில் நடைமுறையில் இருந்த நொறுக்கப்பட்ட nematic field effects ( TN) மேட்ரிக்ஸ் எல்சிடி களின் முக்கிய வரம்புகளை தீர்க்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
OLED DISPLAY என்றால் என்ன?
OLED – ( ORGANIC LIGHT EMITTING DIODE) ஒரு தட்டையான ஒளிவு மீண்டும் தொழில்நுட்பமாகும். இது இரண்டு நடத்துனர் களுக்கு இடையில் தொடர்ச்சியாக கரிம மெல்லிய படங்களை வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.
OLEDகளுக்கு பின்னொளி தேவை இல்லை. மேலும் அவை LCD DISPLAYகளை விட மெல்லியதாகவும் திறமையாகவும் இயங்கும். அவை வெள்ளை பின்னொளி ( white backlight) தேவை.
LCD DISPLAY என்றால் என்ன?
LCD – ( LIQUID CRYSTAL DISPLAY) என்பது உரை (Text), படங்கள் (Static Image) மற்றும் அசையும் படங்கள் (Dynamic Image) போன்ற தகவல்களை, எலெக்ட்ரோ ஆப்டிக் மாடுலேட்டர் Electro Optic Modulator (EOM) எனும் எலக்ட்ரானிக் கருவியை கொண்டு, ஒளிக்கற்றையை செறிவூட்டம் செய்து காட்சிகளை உருவாக்க பயன்படுத்தப்படும் ஒரு மெல்லிய தட்டையான பேனலாகும்(Panel).
இது துருவமுனை புகழுடன் இணைந்து திரவ படிவங்கள் நேரடியாக ஒளியை வெளிப்படுத்துவதில்லை அதற்கு பதிலாக backlight அல்லது reflector பயன்படுத்தி வண்ணம் அல்லது ஒரே வண்ணம் உடைய படங்களை உருவாக்குகின்றன.
AMOLED DISPLAY என்றால் என்ன?
AMOLED – ( ACTIVE MATRIX ORGANIC LIGHT EMITTING DIODE) என்பது ஒரு காட்சி தொழில்நுட்பம் மற்றும் ஆக்டிவ் மேட்ரிக்ஸ் organic light EMITTING diodes குறிக்கிறது. SUPER AMOLED என்பது ஒருங்கிணைந்த தொடு செயல்பாட்டை கொண்ட ஒரு AMOLED திரையில் மேற்புறத்தில் தொடுதலை அங்கீகரிக்கும் ஒரு அடுக்கு இருப்பதற்கு பதிலாக அடுக்கு திரையில் தானே ஒருங்கிணைக்கப்படுகிறது.
மொபைல் டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றது LED வகை டிஸ்ப்ளேக்கள்தான். சந்தையில் இதைப் பயன்படுத்தும் மொபைல்கள் குறைவாகவே இருக்கின்றன. இதில் பரவலாகப் பயன்படுத்தப்படும் வகை OLED ( Organic Light-Emitting Diode)
SUPER AMOLED DISPLAY என்றால் என்ன?
SUPER AMOLED DISPLAY என்பது ஒருங்கிணைந்த Touch(தொடு) செயல்பாட்டை கொண்ட AMOLED DISPLAY ஆகும். திரையில் மேற்புறத்தில் தொழில்களை அங்கீகரிக்கும் ஒரு அடுக்கு இருப்பதற்கு பதிலாக அடுக்கு திரையில் தானே ஒருங்கிணைக்கப்படுகிறது. SUPER AMOLED உங்களுக்கு விதிவிலக்கான பார்வை அனுபவத்தை வழங்குகிறது.
MEMORY என்றால் என்ன?
SMARTPHONE ஸ்பேக்ஸ் சீட்டில் உள்ள நினைவகம் இரண்டு வழியாக வெளிப்படுகிறது மேலும் அவரை சாதனத்தின் வெவ்வேறு அம்சங்களை விளக்குகிறது. அவை RAM – ( RANDOM ACCESS MEMORY) or ROM – ( READ ONLY MEMORY)
RAM என்றால் என்ன ?
மொபைல் இயங்கும் போது அதற்கு தேவைப்படுகின்ற டேட்டாக்களை RAM மெமரியில் தற்காலிகமாக சேமித்து வைத்துக்கொள்ளும். இந்த மெமரி எளிமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
உதாரணத்திற்கு நீங்கள் photoshop அப்ளிகேஷன் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். மொபைலை உடனடியாக தேவையான பைல்கள் அனைத்தையும் RAM க்கு கொண்டுவரும்.
ஒருவேளை உங்களது RAM அளவு குறைவானதாக இருப்பின் போட்டோ அப்ளிகேஷன் சரியாக இயங்காது இதனைத்தான் நாம் Slow அல்லது Hang என்போம்.
இதில் Memory ல் சேமித்து வைக்கப்படும் மொபைல் OFF செய்தாலும் அழிவதில்லை உதாரணமாக நீங்கள் சேமித்து வைத்திருக்கும் வீடியோ அல்லது புகைப்படம் அல்லது பாடல் போன்றவை இந்த மெமரியில் தான் இருக்கும்.
RAM இரண்டு வகை உண்டு.
- DYNAMIC RAM (DRAM)
- STATIC RAM (SRAM)
ROM என்றால் என்ன ?
ROM என்பது READ ONLY MEMORY.அதாவது இதில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் டேட்டாக்களை மாற்றமுடியாது. மொபைலை ஆப் செய்தாலும் இதில் இருக்கும் டேட்டாக்கள் அழியாமல் இருக்கும். நாம் முந்தைய பதிவில் பார்த்த RAM சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தளர்வுகள் அழித்துவிடும்.
- ROM – NON – VOLATILE
- RAM – VOLATILE
CAMERA என்றால் என்ன ?
கேமரா எத்தனை மெகா பிக்ஸல் கொண்டது என்று பார்ப்பதைவிட அதில் Aperture , ISO, ஆட்டோஃபோகஸ் ஆகியவை பற்றி அறிவது அவசியம். மெகா பிக்ஸல் அளவு அதிகரிக்கும்போது புகைப்படத்தின் அளவும் அதிகரிக்கும்.
Aperture பொறுத்தவரை. குறைந்த வெளிச்சத்திலும் துல்லியமான படங்களுக்கு f/2.0 அல்லது குறைவான Aperture தேவை. மெகா பிக்சல் 12 முதல் 16 வரை இருக்கலாம். 8 முதல் 12 மெகா பிக்சல் f/ 2.0 முதல் f/2.2 கொண்ட மொபைலிலும் நல்ல படங்களை எடுக்கலாம்.
BATTERY என்றால் என்ன ?
நீடித்து நிற்கும் பேட்டரி கண்டிப்பாக கவனிக்க வேண்டிய அம்சம் இதனை கவனிக்காமல் ஸ்மார்ட்போனை வாங்கினால் அடிக்கடி பிளாக் போர்டை தேடிக்கொண்டிருக்க நேரிடும்.
குறைந்தபட்சம் 4000mAh பேட்டரி இருந்தால் சராசரி பயன்பாட்டில் ஒரு நாள் முழுக்க தாங்கும். அதிக நேரம் கேம் விளையாடுவதை தவிர்த்தால் பேட்டரி life Increase ஆகும்.