SEO (Search engine optimization) என்றால் என்ன?

By Santhosh

Updated on:

seo meaning

SEO meaning in tamil

(Search engine optimization)ன்றால் என்ன?

எஸ் இ ஒ. இது என்னது எஸ் இ ஓ என்று குழப்பமாக இருக்கின்றதா? இன்று நாம் இதைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

சரி. நீங்கள் youtube சேனல் வைத்திருக்கின்றீர்களா? அல்லது வெப்சைட் (or) பிளாக் வைத்திருக்கின்றீர்களா? ஆனால் அதில் traffic ( பார்வையாளர்கள்) வரவில்லையா? அப்படியென்றால் நீங்கள் கண்டிப்பாக எஸ் பி ஓ பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால், எஸ் இ ஒ உங்கள் youtube சேனல் மற்றும் website ஆகியவற்றிற்கு பார்வையாளர்களை கொண்டுவருவதற்கு முக்கிய காரணமாகும்.

சரி, அப்படி என்றால் நான் எஸ்சிஓ எப்படி கற்றுக்கொள்வது? இதை என்னால் வீட்டிலிருந்தபடியே கற்றுக்கொள்ள முடியுமா? வாருங்கள் அனைத்து விதமான சந்தேகங்களையும் கிளியர் செய்துவிடலாம்.

SEO meaning in tamil

எஸ் இ ஒ என்றால் (சர்ச் இன்ஜின் ஆப்டிமைசேஷன்) ஆகும்.

எடுத்துக்காட்டாக :- நீங்கள் ஒரு youtube சேனல் ஆரம்பித்து இருக்கின்றீர்கள். அதில் வீடியோ அப்லோட் செய்து விட்டீர்கள். இது மட்டும் போதுமா? உடனே உங்கள் வீடியோவை லட்சம் பேர் பார்த்து விடுவார்களா? இல்லவே இல்லை.

எப்படி உங்கள் வீடியோவை மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள்? உங்கள் வீடியோவை இன்டர்நெட் உலகத்திற்கு எப்படி பரபரப்பு வீர்கள்? உங்கள் வீடியோவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த சிஇஓ தான் மூளையாக செயல்படுகின்றது.

நீங்கள் வேண்டுமென்றால் whatsapp மற்றும் facebook ஆகியவற்றில் உங்களுடைய வீடியோவை அல்லது வலைதளத்தை பகிரலாம்.

ஆனால் அப்படி பகிர்ந்தால் எவ்வளவு பார்வையாளர்கள் வந்து விடுவார்கள். மிஞ்சி மிஞ்சி போனால் 300லிருந்து 500 வரை வருவார்கள்.

இரண்டாவது வழி : நீங்கள் ஃபேஸ்புக்கில் விளம்பரம் உருவாக்கலாம் (ADS Campaign) அல்லது கூகுள் Adwords மூலம் விளம்பரம் செய்து உங்களுடைய வலைதளம் அல்லது வீடியோக்களை பார்க்க வைக்கலாம்.

ஆனால் அதற்கு செலவு ஆகும். புதிதாக வலைத்தளம் அல்லது யூடியூப் சேனல் ஆரம்பித்தவர்களுக்கு இது சற்று கடினமாக இருக்கும்.

மூன்றாவது வழி :- உங்களுடைய வீடியோக்கள் அல்லது வலைதளம் ஆகியவற்றை ஆர்கானிக் சர்ச் (Organic Search) மூலம் பல லட்சம் பேர் பார்க்க வைக்க முடியும்.

எடுத்துக்காட்டாக நீங்கள் இன்டர்நெட்டில் குறிப்பிட்ட ஒரு keyword தேடுகிறீர்கள். அதை நீங்கள் கூகுள்(google), பிங்க் (bing), yahoo, msn போன்ற சர்ச் இன்ஜினில் நீங்கள் தேடுகிறீர்கள்.

GOOGLE SEO

Keyword என்றால் நீங்கள் உங்களுக்கு தேவைப்படுகின்றது தேடுவது’

இப்போது நான் GOOGLE ல் Online food order என்று டைப் செய்கிறேன். அப்படி செய்தால் முதலில் zomato வருகின்றது, இரண்டாவதாக foodpanda வருகின்றது.

SEO IN TAMIL

இப்போது நீங்களே online food order என்று டைப் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் கண்டிப்பாக நீங்கள் முதலில் எந்த வலைதளம் இருக்கின்றதோ அதேதான் நீங்கள் கிளிக் செய்வீர்கள்.

இதேபோன்று பல லட்சம் மக்கள் முதலில் எந்த வலைதளம் வருகின்றதோ அதைதான் கிளிக் செய்வார்கள்.

zomato வெப்சைட் முதலில் வருகின்றதால் பல கோடி அவர்களுக்கு வியாபாரம் நடைபெறும். இரண்டாவதாக வருகின்ற foodpanda விற்கு பல லட்சம் நஷ்டம் ஏற்படும். ஏனென்றால் முதலில் கூகுளில் இடம் பிடித்தது zomato வெப்சைட் தான்.

இதற்கு ORGANIC SEARCH RESULT என்றும் சொல்லுவார்கள்.

ORGANIC மற்றும் INORGANIC SEARCH RESULT என்றால் என்ன?

SERP ல் இரண்டு வகையான SEARCH ரிசல்ட் நமக்கு கிடைக்கும். ஒன்று ORGANIC இன்னொன்று INORGANIC SEARCH RESULT.


ORGANIC RESULT என்பது நாம் கூகுளின் முதல் பக்கத்தில் வருவதற்கு காசு கொடுக்காமல், விளம்பரம் எதுவும் செய்யாமலே நம்முடைய வெப்சைட் முதல் பக்கத்தில் வருவது ஆகும்.

INORGANIC  RESULT என்பது நாம் காசு கொடுத்து விளம்பரம் செய்து கூகுளின் முதல் பக்கத்தில் நம்முடைய வெப்சைட்டை வர வைப்பது ஆகும்.

சரி, கூகுள் வெப்சைட்டுகளை எப்படி வரிசை படுத்துகின்றது. foodpanda, swiggy போன்ற வெப்சைட்களும் நல்ல online உணவுகள் தான். ஆனால் zomato மட்டும் எப்படி முதல் வந்தது. இந்த இடத்தில்தான் எஸ் இ ஒ வேலை செய்யும்.

அதைப்போன்றுதான் நாம் ஒரு வலைதளத்தை ஆரம்பித்தால் எப்படி நம்முடைய வலைதளத்தை optimize செய்து கூகுளில் முதல் பக்கத்தில் முதலிடத்தில் கொண்டுவருவது.

அப்படி கொண்டு வந்து விட்டால் ஒட்டுமொத்த உலகமே ஓர் keyword தேடினால் உங்களுடைய வலைதளம் முதலில் வரும். பல லட்சம் பேர் உங்கள் வலைதளத்தை பார்வையிடுவார்கள்.

உங்களுடைய business கோடிக்கணக்கில் லாபம் அதிகரிக்கும்.

நீங்கள் உங்களுடைய பிளாகில் கூகுள் விளம்பரம் பயன்படுத்தினால் நீங்களே ஒரே நாளில் லட்சத்தில் சம்பாதிக்க முடியும்.

இதுதான் எஸ் இ ஒ.

SERP என்றால் என்ன?

SEARCH ENGINE RESULT PAGE (SERP).
கூகுளில் சர்ச் பாக்ஸில் நாம் ஒன்றை தேடி எந்த PAGE வருகிறதோ அது தான் SERP ஆகும்.


இப்போது நீங்கள் ஒரு வலைதளத்தை ஆரம்பித்து இருக்கின்றீர்கள். கூகுளுக்கு எப்படி நீங்கள் ஒரு வலைதளத்தை ஆரம்பித்து இருக்கிறீர்கள் என்று தெரியும். கண்டிப்பாக தெரியாது. நீங்கள்தான் கூகுள் இடம் தெரிவிக்க வேண்டும்.

அதற்கு Google Webmaster tool ல் சென்று உங்களுடைய வலைதளத்தை கூகிளிடம் சொல்ல வேண்டும். பிறகு google தன்னுடைய அல்காரிதம் (google algorithm) மூலம் நம்முடைய வெப்சைட்டை கூகுளில் வரச்செய்யும்.

சரி, இப்போது உலகத்தில் கோடி மக்கள் இதேபோன்று ஒரே keyword ல் அவர் அவருடைய வலைத்தளத்தை ரேங்க் செய்தால் எப்படி google அதை எடுத்துக் கொள்ளும்? யாருடைய வெப்சைட்டை முதலில் காண்பிக்கும்?

ஏனென்றால், ஒரு நாளில் கோடிக்கணக்கான வலைதளம் உருவாகின்றது. கோடிக்கணக்கான மக்கள் அதை சமர்ப்பிக்கிறார்.

இப்போதுதான் கூகுள் அல்காரிதம் வேலை செய்யும். இந்த அல்காரிதம் மிகவும் ரகசியமானது. என்றைக்கு இது மக்களுக்கு தெரிய வருகின்றதோ கூகுள் தன்னுடைய அல்காரிதத்தை மாற்றிவிடும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வலைத்தளம் முதலில், இரண்டாவது, மூன்றாவது, என்று மாறி மாறி சென்று கொண்டிருக்கும்.

ஏனென்றால் பல லட்சம் பேர் இதற்கு போட்டியும் போடுவார்கள். ஆக, தங்களுடைய வலைதளத்தை இதுபோன்று முதல் பக்கத்தில் வர வைப்பது மிகவும் கடினமானது.

அதற்கு நாம் பல முயற்சிகளை, பல யுக்திகளை கையாண்டால் மட்டுமே இதுபோன்று தம்முடைய வலைதளத்தை முதல் பக்கத்தில் கொண்டு வர வைக்க முடியும்.

இதை படியுங்கள்:

SEO விற்கு பல கம்பெனிகள் வந்துவிட்டது:

இப்போது இந்தியாவில் SEO பிஸ்னெஸ்-ற்கு பல கம்பெனிகள் வந்துவிட்டது. அதாவது அந்த SEO கம்பெனிகள் நம்மிடம் உங்களுடைய தளத்தை நாங்கள் கூகுள் முதல் பக்கத்தில் வரச்செய்கிறோம்.

குறிப்பிட்ட KEYWORD ரேங்க் செய்து தருகிறோம் என்று சொல்லும், அதற்கு நீங்கள் எங்களுக்கு இவ்வளவு தொகை தர வேண்டும் என்று சொல்லும். இந்தியாவில் பல SEO search engine marketing கம்பெனிகள் இதற்கு 25000 முதல் 40000 வரை வசூல் செய்கின்றன.

பல பெரிய முன்னணி நிறுவனங்கள் இதற்காக ஒரு டீமையே வைத்திருக்கிறது. அப்படி வரசெய்தால் அவர்களுக்கு பல கோடி ரூபாய் லாபம் கூட வரும்.

ஆனால் என்னுடைய கேள்வி என்னவென்றால் அனைத்தும் இலவசமாக கிடைக்கிறது. இவையனைத்தும் நாமே வீட்டிலிருந்தபடியே நாமே கற்றுகொள்ளலாம். ஒரு சில யுக்திகள் நமக்கு தெரிந்தால் போதுமானது.

ஆனால் இந்த SEO Optimization அவ்வளவு எளிதானது என்றும் சொல்ல முடியாது. இப்போது நீங்கள் இரண்டு அல்லது மூன்று KEYWORD களை கூகிள்-ல் ரேங்க் செய்து விட்டீர்கள் என்று வைத்துகொள்வோம்.

ஆகா! இவ்வளவுதான் SEO Optimization என்று எனக்கும் அனைத்தும் தெரிந்து விட்டது என்று நீங்கள் சொல்ல முடியாது.

ஏனென்றால் google ஒவ்வொரு நாளும் தன்னுடிய அல்கோரிதம் மாற்றி கொண்டே இருக்கும்.

எனவே உங்கள் வெப்சைட் எல்லா நாலு அதே முதல் இடத்தில இருக்கும் என்று சொல்ல முடியாது.

ஏனென்றால் போட்டி மிக கடுமையானது உங்களை போன்று பல லட்சம் பேருக்கும் அதே முதல் இடத்தல் வர வேண்டும் என்று தான் ஆசை இருக்கும். எனவே அது மாறி கொண்டே இருக்கும்.

அதை நீங்கள் website Optimization, SEO OPTIMIZE செய்து கொண்டே இருக்கவேண்டும். அப்போது தான் சாத்தியம். ஆனால் நீங்கள் தெரிந்து கொண்டால் பின்பு நீங்கள் தான் ராஜா.

SEO விளும் இரண்டு வகை இருக்கின்றது: BLACK HAT மற்றும் WHITE HAT :-

WHITE HAT SEO என்றால் நாம் நேர்மையாக நம்முடைய வலைதளத்தை வைத்து கொள்வது.

கூகுளின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் கட்டுப்பட்டு நம்முடைய வெப்சைட்டை நாம் நேர்மையாக ரேங்க் செய்வது.

BLACK HAT SEO என்றால் நாம் கூகுளை FORCE பண்ணி நம்முடைய வெப்சைட்டை ரேங்க் செய்ய வைப்பது.

என்னுடைய வெப்சைட் தான் வரவேண்டும் என்று கூகுளின் அல்கோரிதமை மாற்றி அமைக்க முயற்சி செய்வது. இது மிகவும் தவறானது.

இப்படி செய்தால் நீங்கள் கொஞ்சம் நாட்கள் வேண்டுமென்றால் உங்கள் வெப்சைட்டை கூகுளில் வர வைக்கலாம். ஆனால் என்றைக்கு கூகுளிற்கு தெரியுதோ அப்போதே உங்களுடைய வெப்சைட்டை பெனால்டி செய்து விடும்.


பின்பு ஜென்மத்துக்கும் உங்களுடைய வெப்சைட் ரேங்க் ஆகாது.

எனவே SEO பற்றி இந்த ஒரு போஸ்டில் அனைத்தையும் சொல்லி விட முடியாது. அதற்கு மேலே நிறைய இருகின்றது.

இது மட்டும் SEO இல்லை. இன்னும் நிறைய டெக்னிக் இருக்கிறது.


இன்னும் ADVANCE SEO என்று ஒன்று இருக்கிறது. அதில் SEO பற்றி கிட்டத்தட்ட முழுமையாக சொல்லி விட முடியும். இது வெறும் ஆரம்பம் தான்.  இன்னும் SEO
பற்றி சில இருக்கிறது.

4.5 21 votes
Article Rating

Santhosh

நான் ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ப்ளாகர் / டிஜிட்டல் மார்கெட்டராக பணியாற்றி வருகிறேன். fitness பைத்தியம், ஊர் சுற்றும் வாலிபன், பாடகர், குழந்தை பிரியர். மேலும் நிறைய இருக்கிறது ஆனால் சொன்னால் நம்ப மாடீங்க:)))

Related Post

NO FOLLOW & DO FOLLOW LINKS என்றால் என்ன?

NO FOLLOW மற்றும் DOFOLLOW LINK என்றால் என்ன? :  SEO என்றால் search engine optimization என்று அர்த்தம், இந்த வார்த்தையை சொல்லும் போதெல்லாம் நாம் சில அடிப்படையான வார்த்தைகளை தெரிந்துவைத்திருப்பது மிகவும் அவசியமானது. அதாவது BOTS, CRAWLING, NOINDEX, DOINDEX, NOFOLLOW, ...

Blogger-ஐ Google Analytics மற்றும் Google Search Console உடன் இணைப்பது எப்படி ?

How to Connect Your blog with Google Analytics and Google Search Console in Tamil | உங்கள் Blogger-ஐ Google Analytics உடன் இணைப்பது எப்படி? உங்கள் Blogger-ஐ Google Analytics உடன் இணைப்பது ...

இலவசமாக பிளாகரில் வலைத்தளத்தை உருவாக்குவது எப்படி?

பிளாகர் வலைத்தளத்தை உருவாக்குவது எப்படி? | How to create free blogger blog in Tamil:- Start free blogger blog in tamil (2020) :- நாம் எல்லாருக்கும் website create செய்யணும் என்று ஆர்வம் ...

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments