வோர்ட்பிரஸ் டிப்ஸ்

வேர்ட்பிரஸில் SEO விற்கு ஏற்ற தரமான போஸ்ட்களை எழுதுவது எப்படி?

SEO friendly blog Post in Tamil

SEO friendly blog Post in Tamil

SEO friendly blog Post in Tamil : நீங்கள் எழுதிய blog post SEO விற்கு ஏற்றதாக அமைந்திருந்தால் உங்களுடைய அந்த போஸ்ட் கூகுள் சர்ச் இன்ஜினில் முதன்மையாக இருக்கும்.

ஆனால் SEO விற்கு ஏற்ற போஸ்ட்களை எழுதுவது அவ்வளவு சுலபமானது இல்லை, இதற்காக நீங்கள் அதிகம் ஆராய வேண்டும், கவனமாக இருக்க வேண்டும், மெனக்கெட வேண்டும்.

SEO விற்கு ஏற்ற posts எழுதுவதற்கு சில குறிப்புகள் இருக்கின்றன. நீங்கள் வேர்ட்பிரஸில் ஒவ்வொரு post பப்ளிஷ் செய்யும்பொழுது சில முக்கியமான குறிப்புகளை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அவை என்ன என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

How to Write SEO friendly blog Post in Tamil:

தரமான content:

நீங்கள் எந்த post பப்ளிஷ் செய்தாலும் ஒன்றுக்கு இரண்டு தடவை நீங்கள் நன்றாக படித்துப் பார்க்க வேண்டும், உங்களுடைய போஸ்ட்களை நீங்களே முதலில் படித்துப் பார்க்க வேண்டும், புரியும்படியான எழுத்துக்களில் எழுதுகின்றோமா? பார்வையாளர்களுக்கு ஏற்ற மொழிகளில் எழுதி இருக்கின்றோமா? அவர்களுக்கு புரியுமா? நான் பப்ளிஷ் செய்த இந்த போஸ்டினால் அவர்களுக்கு என்ன நன்மை இருக்கும்? என்பதை முதலில் நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும்.

அதன் பிறகே PUBLISH பட்டனை அழுத்த வேண்டும்.

போஸ்ட் டைட்டில் மற்றும் டாக்(TAG):

போஸ்ட் உடைய தலைப்பு பார்வையாளர்களை மிகவும் கவரும்படியாக இருக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் தலைப்பு நீங்கள் எழுதிய போஸ்டிற்கு ஒத்துப் போகின்றதா என்று பார்க்க வேண்டும்.

உங்களுடைய Post title, மீட்டா Title(META TITLE), மற்றும் பெருமாலிங்க் (PERMALINK) வேறு வேறாக இருக்க வேண்டும். ஏனென்றால், அப்போதுதான் உங்களுக்கு நிறைய KEYWORDS கிடைக்கும்.

மீட்டா description:

Meta description என்பது உங்களுடைய டைட்டிலுக்கு கீழே சின்னதாக சர்ச் இஞ்சினால் விளக்கி கூறப்படும் ஒரு விளக்கமாகும். எனவே நீங்கள் உங்களுடைய Description ல் குறைந்தது 150 எழுத்துக்கு மிகாமல் எழுத வேண்டும், இதில் டார்கெட் கீ வேர்ட்(TARGET KEYWORD) இருக்க வேண்டியது அவசியமாகும்.

படம்:

உங்களுடைய ப்ளாக் போஸ்டில் குறைந்தது உள்ளே ஒரு படமாவது இருக்க வேண்டும், ஏனென்றால் அப்போதுதான் உங்கள் பிளாக்கிற்கு வரும் பார்வையாளர்கள் கவரப்படுவார்கள்.
இதில் முக்கியமான ஒன்று படங்கள் கூகுள் இமேஜில் சென்று டவுன்லோட் செய்து அப்படியே போட்டு விடக்கூடாது, இல்லையேல் உங்கள் தளத்திற்கு காப்பிரைட் பிரச்சனைகள் வரக்கூடும். இதனால் உங்கள் ப்ளாக் ஒரு போதும் RANK ஆகவே ஆகாது.

எனவே Copyrighted free படங்கள் நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

பின்பு உங்களுடைய அந்த படத்தில் Alternative text ல் உங்களுடைய டார்கெட் keyword இருக்க வேண்டும். இது கூகுள் இமேஜில் வருவதற்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.

இன்டெர்னல் லிங்க்:

நீங்கள் எழுதும் ஒவ்வொரு போஸ்டிலும் அதற்கு ஒத்துப்போகின்ற ஏதேனும் சில போஸ்ட்கள் நீங்கள் interlink செய்ய வேண்டும். இதனால் உங்களுடைய SEO SCORE உயரும், உங்களுடைய எல்லா போஸ்டும் CRAWL ஆகும்.

இதையும் படியுங்கள்:

பெர்மாலிங்க்(PERMALINK):

பெர்மாலிங்கில் உங்களுடைய Post டைட்டில் மற்றும் மீட்டா டைட்டிலில் இருந்து வெவ்வேறு KEYWORDS பயன்படுத்த வேண்டும். இதனால் உங்களுடைய போஸ்ட்க்கு நிறைய KEYWORDS உருவாகும், கூகிள் சர்ச்சில் முதன்மையாக வருவதற்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும்.

H1,H2,H3 தலைப்புகள்:

உங்களுடைய போஸ்டில் H1, H2, H3 தலைப்புகள் குறைந்தது ஒன்றாவது பயன்படுத்த வேண்டும்.

H1- தலைப்பு 1

H2- தலைப்பு 2

H3- தலைப்பு 3 ….. இதேபோன்று உங்களுக்கு ஏற்றவாறு நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

LSI KEYWORD:

SEO விற்கு LSI (Latent Semantic Indexing) Keyword மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது நீங்கள் கூகுள் தளத்தில் ஏதாவது தேடும் போது கடைசியாக Search Related என்று இருக்கும். இந்த keywords மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இதனால் உங்களுடைய Post சர்ச் இன்ஜினில் முதன்மையாக வருவதற்கு வாய்ப்பு மிக அதிகமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:

இப்போது நீங்கள் உங்களுடைய SEO விற்கு ஏற்ற Post பப்ளிஷ் பண்ணலாம். சமூக வலை தளங்களிலும் இதைப் பகிருங்கள்.

இந்த போஸ்ட் உங்களுக்கு பிடித்திருந்தால் பகிருங்கள், உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்ட்டில் தெரிவியுங்கள்.

பகிருங்கள்
Related posts
வோர்ட்பிரஸ் டிப்ஸ்

Wordpress Blog எப்படி ஆரம்பிப்பது? - முழு விளக்கம் (2019)

Sign up for our Newsletter and
stay informed

Leave a Reply

avatar
  சப்ஸ்க்ரைப்  
தெரிய படுத்துங்கள்