SBI Bank Account இல் Online மூலம் Money Transfer செய்வது எப்படி – How to Transfer Money Online from SBI Bank Account | Tamil
SBI வங்கியானது தங்களின் வாடிக்கையாளர்களுக்கு Online மூலம் Money Transfer செய்யும் வசதியை வழங்குகிறது. இதன் மூலம் உங்களின் Bank Account இல் இருந்து பண பரிவர்த்தனைகளை, நீங்கள் இருந்த இடத்திலிருந்தே மேற்கொள்ள முடியும்.
உங்களுக்கு SBI வங்கிக்கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் பணத்தை Transfer செய்ய தெரியவில்லையா?
கவலையை விடுங்கள். அதற்கான செயல்முறையை பற்றி நான் உங்களுக்கு சொல்ல போகிறேன்.
இந்த கட்டுரையை நீங்கள் முழுமையாக படித்த பிறகு, SBI வங்கிக்கணக்கில் இருந்து எவ்வாறு Money Transfer செய்வது என்பதை பற்றி நீங்கள் விரிவாக தெரிந்து கொண்டிருப்பீர்கள்.
சரி வாருங்கள் ஆரம்பிக்கலாம்.
ஆன்லைன் Money Transfer
நீங்கள் SBI Bank Account இல் இருந்து Money Transfer செய்வதை கற்றுக்கொள்வதற்கு முன்பு, அதை பற்றிய அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்வது முக்கியமாகும்.
State Bank of India வங்கியானது இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். மேலும் இணைய வங்கி சேவைகளை வழங்குவதிலும் முன்னணி வங்கியாக உள்ளது.
நீங்கள் வங்கிக்கிளைக்கு சென்று வரிசையில் நின்று பணத்தை Deposit செய்வது மற்றும் வேறொரு வங்கிக்கணக்கிற்கு பணத்தை Transfer செய்வது போன்ற காலங்கள் எல்லாம் முடிந்துவிட்டன.
தற்போது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளன. இன்றைய காலத்தில் பணத்தை ஒரு ATM Machine மூலம் டெபாசிட் செய்ய முடியும். அதேபோல் ஒரு ஸ்மார்ட் போன் அல்லது கணினி மூலம், நீங்கள் மற்றொரு நபரின் வங்கிக்கணக்கிற்கு பணத்தை அனுப்ப முடியும்.
ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்புவது என்பது அனைவராலும் செய்யக்கூடிய எளிதான விஷயமாகும். வங்கிக்கணக்கை வைத்திருக்கும் அனைவராலும் ஆன்லைன் மூலம் Money Transfer செய்ய முடியும். அதற்க்கு நீங்கள் SBI வங்கியில் Internet Banking அல்லது Mobile Banking யை Register செய்ய வேண்டும்.
அப்படி Register செய்தால் மட்டுமே SBI இன் எண்ணற்ற Online வசதிகளை உங்களால் பயன்படுத்த முடியும்.
எனவே நீங்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாக வங்கிக்கிளைக்கு சென்றோ SBI இன் இன்டர்நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் சேவையை Open செய்ய வேண்டும்.
ஆன்லைன் நிதி பரிமாற்றத்தின் நன்மைகள்
ஆன்லைன் பண பரிமாற்றம் ஆனது அனுப்புநருக்கும் பெருநருக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. அவற்றின் சிறந்த நன்மைகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்.
- ஆன்லைன் மூலம் Transfer செய்யும்போது காத்திருப்பு நேரங்கள் இல்லை. நீங்கள் பணத்தை அனுப்ப விரும்பும் பயனாளிக்கு உடனடியாக பரிமாற்றம் செய்யலாம்.
- இது மிகவும் பாதுகாப்பான வழிமுறையாகும். ஒரு பரிவர்த்தனை முடிந்த பிறகு, SMS அல்லது மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்துதலை பெறுவீர்கள்.
- ஆன்லைன் நிதி பரிமாற்ற சேவையானது ஒரு நாளின் 24 மணி நேரமும் மற்றும் வாரத்தின் ஏழு நாட்களிலும் கிடைக்கும் (24*7)
- கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
SBI Account இருந்து Online மூலம் எவ்வாறு Money Transfer செய்வது?
நீங்கள் ஆன்லைன் மூலம் பல்வேறு வழிமுறைகளில் பண பரிமாற்றத்தை செய்ய முடியும். இதில் SBI Internet Banking மூலம் நீங்கள் எவ்வாறு பரிமாற்றம் செய்வது என்பதை பற்றி காணலாம்.
SBI Internet Banking யை Login செய்தல்
Step 1: நீங்கள் Onlinesbi என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
Step 2: உங்களின் Username மற்றும் Password யை Enter செய்து Login செய்யவும்.
Step 3: தற்போது SBI Internet Banking இன் Dashboard திறக்கும்.
SBI Account Balance யை Check செய்தல்
Step 4: நீங்கள் உங்களின் கணக்கு இருப்பை தெரிந்துகொள்ள Click here for balance என்பதை கிளிக் செய்யவும்.
Step 5: தற்போது உங்களின் SBI Account Balance தெரிவதை காண்பீர்கள்.
பல்வேறு முறைகளில் பணத்தை Transfer செய்தல்
Step 6: நீங்கள் பணத்தை Transfer செய்யும் பிரிவிற்கு செல்ல Payments / Transfers என்பதை கிளிக் செய்யவும்.
Step 7: தற்போது பணத்தை Transfer செய்யும் பல்வேறு Option கள் தெரிவதை காண்பீர்கள்.
Method 1: Without Adding Beneficiary (Quick Transfer)
Quick Transfer என்பது Beneficiary யை சேர்க்காமல் பணத்தை Transfer செய்யும் வழியாகும்.
இதன் மூலம் Account Number, IFSC Code போன்ற தகவல்களை கொண்டு பயனாளிக்கு உடனடியாக பணத்தை அனுப்பலாம்.
Step 1: Quick Transfer (Without Adding Beneficiary) என்ற Option யை கிளிக் செய்யவும்.
Step 2: இந்த பக்கத்தில் பயனாளியின் Name, Account Number யை Enter செய்யவும்.
Payment Option என்ற இடத்தில் நீங்கள் பணத்தை அனுப்பக்கூடிய வங்கிக்கணக்கு SBI Account ஆக இருந்தால் Within SBI என்பதை தேர்வு செய்யவும்.
Indian Bank, HDFC போன்ற மற்ற வங்கிகளாக இருந்தால் Other Bank Transfer என்பதை தேர்வு செய்யவும்.
பிறகு நீங்கள் Transfer செய்ய விரும்பும் பணம், காரணம் (Purpose) போன்றவற்றை உள்ளிட்டு Submit செய்க.
Step 3: இப்போது நீங்கள் உள்ளிட்ட தகவல்கள் சரியாக உள்ளதா என்பதை Check செய்துவிட்டு Confirm என்பதை அழுத்தவும்.
Step 4: உங்களின் வங்கிக்கணக்கில் பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு OTP Number வரும். அதை Enter செய்து Confirm என்பதை கிளிக் செய்தால், உங்களின் பணமானது பயனாளரின் வங்கிக்கணக்கிற்கு சென்றுவிடும்.
Method 2: With Adding Beneficiary
நீங்கள் ஒரு பயனாளரின் வங்கிக்கணக்கிற்கு Quick Transfer முறையில் பணத்தை அனுப்பும் போது, ஒவ்வொரு முறையும் பயனாளரின் Name, Bank Account Number, IFSC Code போன்ற தகவல்களை Type செய்ய வேண்டும்.
ஆனால், அந்த தகவல்களை ஒருமுறை Beneficiary பட்டியலில் சேர்த்துவிட்டால், பிறகு ஒவ்வொரு முறை Transfer செய்யும்போதும் அந்த பயனாளரின் வங்கித்தகவல்களை Type செய்ய தேவை இல்லை.
நிதி பரிமாற்றம் செய்யும்போது ஏற்கனவே Beneficiary பட்டியலில் சேர்த்த பயனாளரை தேர்வு செய்து Money Transfer செய்யலாம்.
சரி நாம் ஒரு Beneficiary யை எவ்வாறு Add செய்வது என்பதை பற்றி காணலாம்.
Step 1: Add & Managing Beneficiary என்பதை கிளிக் செய்யவும்.
Step 2: உங்களின் Profile Password யை Enter செய்து Submit என்பதை அழுத்தவும்.
Step 3: நீங்கள் ஒரு SBI வங்கிக்கணக்கை Add செய்ய வேண்டுமென்றால், SBI Beneficiary என்பதை தேர்வு செய்யுங்கள். மற்ற வங்கிகள் என்றால் Other Bank Beneficiary என்பதை தேர்வு செய்யவும்.
இங்கு நான் Indian Bank Account யை Add செய்ய விரும்புவதால் Other Bank Beneficiary என்பதை தேர்வு செய்துள்ளேன்.
Step 4: இப்பொழுது பயனாளியின் (Beneficiary) Name, Account Number, Address, Transfer Limit மற்றும் IFSC Code போன்ற தகவல்களை Enter செய்க.
இங்கு Address என்பது கட்டாயம் இல்லை.
Transfer Limit என்பது நீங்கள் Add செய்யும் Beneficiary க்கு அதிகபட்சமாக எவ்வளவு Transfer செய்யலாம் என்பதை நிர்ணயிப்பதாகும்.
Step 5: பிறகு Submit என்பதை அழுத்தவும்.
Step 6: உங்களின் தகவல்களை சரிபார்த்து Confirm செய்யவும்.
Step 7: இப்பொழுது Beneficiary யை வெற்றிகரமாக Add செய்துவிட்டீர்கள். இருப்பினும் அதை Approve செய்வதற்கு Approve Now என்பதை கிளிக் செய்யவும்.
Step 8: Approve Beneficiary என்பதை Select செய்க.
Step 9: Approve Through OTP என்பதை தேர்வு செய்யவும்.
Step 10: இப்பொழுது OTP Number யை Enter செய்து Approve என்பதை அழுத்தவும். பிறகு 24 மணி நேரத்திற்குள் Beneficiary பட்டியலில் சேர்க்கப்படும்.
இப்பொழுது நீங்கள் பயனாளரை சேர்த்துவிட்டீர்கள். அடுத்தது எப்படி Transfer செய்வது என்று பார்க்கலாம்.
Step 1: நீங்கள் மற்றொரு SBI கணக்கிற்கு Transfer செய்ய விரும்பினால், Within SBI > Account of Other என்பதை கிளிக் செய்க.
அல்லது மற்ற வங்கிகளின் கணக்கு என்றால் Outside SBI > Other Bank Transfer என்பதை தேர்வு செய்யவும்.
Step 2: Transaction Type என்ற இடத்தில் IMPS என்பதை தேர்வு செய்து Proceed என்பதை அழுத்தவும்.
Step 3: Person To Account என்பதை தேர்வு செய்து Proceed என்பதை கிளிக் செய்க.
Step 4: தற்போது நீங்கள் ஏற்கனவே Add செய்த Beneficiary பட்டியல் வரும். நீங்கள் அனுப்ப வேண்டிய பணத்தை Enter செய்து பிறகு நீங்கள் அனுப்ப விரும்பும் கணக்கை தேர்வு செய்யவும்.
Step 5: பிறகு Submit என்பதை கிளிக் செய்யவும்.
Step 6: இப்பொழுது நீங்கள் Enter செய்த தகவல்களை சரிபார்த்து Confirm என்ற பட்டனை அழுத்தவும்.
Step 7: உங்களின் mobile எண்ணிற்கு வரும் OTP Number யை Enter செய்து Confirm என்பதை கிளிக் செய்தால், உங்களின் பணம் Transfer ஆகிவிடும்.
இந்த கட்டுரையில் SBI Internet Banking மூலம் பணத்தை எப்படி Transfer செய்வது என்பதை பற்றி தெரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதை பற்றிய சந்தேகம் இருந்தால் Comment பிரிவில் பதிவிடவும்.