NO FOLLOW மற்றும் DOFOLLOW LINK என்றால் என்ன? :
SEO என்றால் search engine optimization என்று அர்த்தம், இந்த வார்த்தையை சொல்லும் போதெல்லாம் நாம் சில அடிப்படையான வார்த்தைகளை தெரிந்துவைத்திருப்பது மிகவும் அவசியமானது.
அதாவது BOTS, CRAWLING, NOINDEX, DOINDEX, NOFOLLOW, DOFOLLOW ஆகியவை. இவை அனைத்தும் SEO விற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது.
நாம் இப்போது NO FOLLOW AND DOFOLLOW பற்றி பார்ப்போம், புதிதாக பிளாக் தொடங்கியவர்கள், SEO என்றால் என்ன என்று தெரியாமல் இருப்பவர்கள், NO FOLLOW மற்றும் DO FOLLOW என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு இந்த போஸ்ட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சரி, NO FOLLOW மற்றும் DOFOLLOW LINK பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால், நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு blogger, இப்போதுதான் புதிய ப்ளாக் ஒன்றை ஆரம்பித்து இருக்கிறீர்கள். இப்போது GOOGLE, BING ஆகிய சர்ச் என்ஜின் க்கு எப்படி தெரியும் நீங்கள் வலைத்தளம் ஆரம்பித்து இருக்கிறீர்கள் என்று.
அதற்காகத்தான் நீங்கள் உங்கள் பிளாக் உடைய SITEMAP கூகுளில் சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் வலைதளத்தின் உடைய SITEMAP சமர்ப்பித்த பிறகு கூகிள் போட்ஸ் (GOOGLE BOTS) (கூகிள் போட்ஸ் என்றால் ஒரு சிலந்தி என்று நீங்கள் வைத்துக்கொள்ளலாம், அதாவது சிலந்தி உங்களுடைய வலைத்தளத்திற்கு வந்து உங்களுடைய டேட்டாக்களை ஸ்கேன் செய்யும்).
இதற்கு தான் CRAWL என்று சொல்லுவார்கள். இப்படி CRAWL செய்யும் பொழுது உங்களுடைய பிளாக் INDEX ஆகிவிடும், அப்போது பார்வையாளர்கள் உங்களுடைய வலைதளத்தை கூகுளில் SEARCH ENGINE ல் தேடினால் உடனே வந்து நிற்கும்.
சரி, இப்போது இது உங்களுடைய விருப்பம், அதாவது நீங்கள் உங்களுடைய வலைத்தளத்தில் உள்ள எந்தப் பக்கத்தை SEARCH ENGINE ல் INDEX செய்யப்போகிறீர்கள் என்று. இதில் நீங்கள் INDEX மற்றும் NO INDEX மூலம் செய்ய முடியும்.
இப்போது நாம் NOFOLLOW மற்றும் DOFOLLOW பற்றி பார்ப்போம்.
NOFOLLOW மற்றும் DOFOLLOW என்றால் என்ன? இதில் என்ன வேறுபாடுகள் இருக்கின்றது?
நாம் இதை பார்ப்பதற்கு முன்னால் நீங்கள் ஒரு சில விஷயத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
LINK JUICE : நாம் எழுதும் ஆர்ட்டிக்களில் வேறு ஏதேனும் வலைதளம் அல்லது பிளாக் உடைய பக்கத்தை ஹைப்பர் லிங்க் செய்தால் GOOGLE BOTS அந்த லிங்கையும் பின் தொடரும், அதையும் ஸ்கேன் செய்யும். அப்படி அந்த லிங்கை FOLLOW பண்ணி லிங்க் ஜூஸ் (LINK JUICE) பாஸ் பண்ணும்.
அந்த லிங்க் ஜூஸ் நாம் எழுதிய போஸ்டினுடைய தரத்தை உயர்த்தி, DOMAIN அத்தாரிட்டி அதிகரிக்கச் செய்யும்.
இதை படியுங்கள்:
NOFOLLOW LINK : சர்ச் இஞ்சின் போட்ஸ் (SEARCH ENGINE BOTS) NOFOLLOW LINK ஐ FOLLOW பண்ணுவதற்கு அனுமதிப்பதில்லை. மனிதர்கள் மட்டுமே NOFOLLOW LINK ஐ FOLLOW பண்ண முடியும்.
NOFOLLOW link உடைய எடுத்துக்காட்டு:
<a href=”https://www.suzeela.com” rel=”nofollow”>லிங்க் ஜூஸ் என்றால் என்ன ? எப்படி வேலை செய்கிறது</a>
DOFOLLOW LINK : DOFOLLOW LINK நமக்கு LINK JUICE மற்றும் ஒரு BACKLINKS தந்து google மற்றும் மற்ற சர்ச் இன்ஜின் உடைய லிங்கை FOLLOW பண்ணுவதற்கு அனுமதிக்கும்.
இதனால் நமக்கு SEO நன்மைகள் உண்டாகும்.
நீங்கள் வேறு வலைத்தளம் அல்லது வலைத்தளத்தின் உடைய பக்கத்தை link செய்யும் பொழுது TARGETED KEYWORDS ஐ ANCHOR TEXT ஆக பயன்படுத்துங்கள்.
DOFOLLOW LINK உடைய எடுத்துக்காட்டு:
<a href=”https://www.suzeela.com”>லிங்க் ஜூஸ் என்றால் என்ன ? எப்படி வேலை செய்கிறது</a>
By default ஆக, அனைத்து ஹைப்பர்லிங்களும் DOFOLLOW LINK ஆக தான் இருக்கும். நீங்கள் எந்த ஒரு லிங்க் ஆனாலும் சரி அதை DOFOLLOW LINK ஆக மாற்ற எதுவும் செய்யத் தேவையில்லை. ஆனால் NOFOLLOW LINK ஆக மாற்ற rel=”nofollow” ஆக மாற்ற வேண்டும்.
NOFOLLOW மற்றும் DOFOLLOW LINK எங்கு பயன்படுத்த வேண்டும்:
DOFOLLOW LINK:
- நீங்கள் ஒரு HIGH QUALITY வலைத்தளத்தை ஹைப்பர் லிங்க் செய்யும்பொழுது.
- நீங்கள் அடுத்தவருடைய ஒரிஜினல் WORK அல்லது செய்திகள் அல்லது போஸ்ட் ஐ காப்பி செய்து அதை REFERENCE ஆக பயன்படுத்தும்பொழுது.
NOFOLLOW LINK:
- LOW QUALITY SITES அதாவது, சூதாட்டம், போதை வலைத்தளம், அல்லது PORN வலைத்தளத்தை பயன்படுத்தும்பொழுது நீங்கள் NOFOLLOW LINK ஐ பயன்படுத்த வேண்டும்.
- சம்பந்தமில்லாத CONTENT. அதாவது உங்களுடைய வலைத்தளம் டெக்னாலஜி பற்றி இருக்கிறது, ஆனால் அதில் சமையல் வலைத்தளத்தின் LINK ஐ பயன்படுத்தும்பொழுது.
- Affiliate links
- கமெண்ட் பாக்ஸில். ஏனென்றால் நம்மளுடைய comment பாக்ஸில் அதிகப்படியான SPAMMING வாய்ப்புகள் இருக்கும்.
ஒரு லிங்க் DOFOLLOW LINK ஆ? அல்லது NOFOLLOW LINK ஆ? எப்படி சரி பார்ப்பது?
உங்களுடைய பிரௌசரில் எந்த லிங்கை நீங்கள் செக் செய்யப் போகின்றீர்களோ அதில் RIGHT CLICK செய்து”Inspect Element” தேர்வு செய்யுங்கள். அடுத்ததாக ஒரு Window திறக்கும், அதனுடைய HTML Code உடன் நீங்கள் அந்த லிங்க் DOFOLLOW LINK ஆ? அல்லது NOFOLLOW LINK ஆ? என்று பார்க்க முடியும்.
கவனிக்கவும்:
இந்த NOFOLLOW LINK நம்முடைய வலைதளத்தின் கடைசிப் பக்கத்தில் பயன்படுத்தும்பொழுது அது வேறு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவே முதல் அல்லது நடுப்பக்கத்தில் பயன்படுத்தும்பொழுது வேறொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
NOFOLLOW LINK வகைகள்:
Robots Meta Tag: <meta name=”robots” content=”nofollow”>
இது bots/crawler/spiders இடம் சென்று, முழு பக்கத்தையும் பின் தொடர வேண்டாம் என்று தெரிவிக்கும்.
Link Attribute: <a href=”http://www.google.com” rel=”nofollow”>
இவ்வளவுதான். இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம், அட்வைஸ் இருந்தால் நீங்கள் தெரிவிக்கலாம். இதைப்பற்றி மேலும் கூறுவேன்.
இது உங்களுக்கு பிடித்திருந்தது என்றால் பகிருங்கள்.
பகிருங்கள்