நவராத்திரி வரலாறு :- 50 சிறு குறிப்புகள், கதைகள், வாழ்த்துக்கள்

50 points on Navarathri in tamil (2020) :- நவராத்திரி பற்றிய 50 சிறு குறிப்புகள் வருமாறு:-

1.சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
2. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.
3. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.
4. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
5. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.
6. ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.
7. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா
சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.
8. பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி,
போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.
9. பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி
நவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.
10. அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.
11. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலு வைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.
12. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.
13. ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள்.
14. நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.
15. விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.
16. நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.
17. நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.
18. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.
19. நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.
20. ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.
21. தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.
22. தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.
23. தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.
24. கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.
25. நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.
26. சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.
27. நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.
28.ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.
29. நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.
30. அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.
31. நவராத்திரி விரதம் இருப் பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.
32. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.
33. நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.
34. நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.
35. நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.
36. கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.
37. நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது.
38. முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.
39. நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.
40. நவராத்திரி 5-ம் நாளான வரும் திங்கட்கிழமை லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.
41. நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
42. நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையாப கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.
43. நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.
44. நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவி யரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.
45. சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.
46. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.
47. கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.
48. தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
49. ஸ்ரீராமர், விஷ்ணு, விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, வனவாசத்தில் பாண்டவர்கள் ஆகியோர் நவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.
50. வசதி, வாய்ப்பு உள்ளவர்கள் நவராத்திரி பூஜையை தினமும் முறைப்படி ஸங்கல்பம், கணபதி பூஜை, ப்ரதான பூஜை,  கண்டா பூஜை ப்ராணப் பிரதிஷ்டை, அங்கபூஜை, அஷ்டோத்திர நமாவளி, நவதுர்கா பூஜை, ஜோதி பூஜை என்று விஸ்தாரமாகச் செய்யலாம்.🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*நவராத்திரி ஸ்பெஷல் !* மருதாணியும் அம்பிகையும்:

Navratri quotes in Tamil | Navratri Wishing quotes –  நவராத்திரி வாழ்த்துக்கள்

மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு என்றைக்கும் உங்களுக்கு இருக்கட்டும்
இந்த இனிய வாழ்த்துக்களுடன்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நவராத்திரிக்கு அன்பான வாழ்த்துக்கள்.
அன்னை அன்பு உங்களுக்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் அளிக்கட்டும்.
இனிய நவராத்திரி.

navarathiri quotes tamil

தாயே எங்களுக்கு  வரம் வேண்டாம்,
எங்களுக்கு உங்கள் சிறிய அன்பை மட்டும் கொடுங்கள்,
இந்த முழு வாழ்க்கையும் உங்கள் காலில் வாழ்ந்தது,
இந்த ஆசீர்வாதத்தை எங்களுக்கு கொடுங்கள்
உங்கள் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்
நல்ல நவராத்திரி 2020

navaratri quotes tamil

Short essay story on Navratri in Tamil:-

அம்பிகைக்கு உகந்த வாசனை பொருட்களில் ஒன்று மருதாணி ஆகும். வெறும் கைகளோடு பூஜை செய்வதை விட அம்பிகைக்கு உகந்த சிவப்பு வண்ணத்தோடும், நல்ல வாசனையோடும் நம் கைகளில் மருதாணி  வைத்து கொண்டு அம்பாளுக்கு தூப, தீப, ஆராதனைகள் செய்யும் போது தேவி இன்னும் மகிழ்கிறாள். மற்ற காலங்களில் வைத்து கொள்ளாவிட்டாலும் நவராத்ரி காலங்களில் ஆவது அவசியம் வைத்துக்கொண்டு பூஜிக்கலாம்.
சிறந்த அம்பாள் பக்தையாக விளங்கிய ஒரு பெண்மணிக்கு தனது கணவருக்கு வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனைக்கு மருத்துவமனை அணுக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்றும் இருப்பினும் உயிர் பிழைப்பது கடினம் என்றும் தேதி வைத்துவிட்டனர். மிகவும் வருத்தப்பட அந்த பக்தை ஒரு ஸ்ரீவித்யா உபாசகரை நாடினார்.
அந்த பக்தையாக அம்பாளிடம் பிரார்த்தித்த உபாசகர் 5 வெள்ளிக்கிழமைகள் கோயிலுக்கு சென்று வரும் சுமங்கலி பெண்களுக்கு மருதாணி வைத்து வேண்டிகொள்ளுமாறு சொன்னார். 4 வெள்ளிக்கிழமைகள் செய்தானது.
5 ஆம் வாரம் ஆலயத்திற்கு சோதனையாக ஒருபெண்களும் வரவில்லை, பயந்த பக்தை அம்பாளை பிரார்த்தித்தாள். கருணை கொண்ட அம்பிகை சிறு பெண் (பாலா) ரூபத்தில் கோயிலுக்குள்  ஓடி வந்தாள்.
அக்கா எனக்கு மருதாணி வச்சிவிடறீங்களா? என கொஞ்சி மழலையாக கேட்டாள். சுமங்கலிக்கு தானே வைக்கவேண்டும், வந்ததோ சிறு பெண் என தயங்கிய பக்தை அம்பாள் மீது பாரத்தை போடு விட்டு, ஆடம் பிடித்த குழந்தைக்கு கைகளில் கொப்பி கொப்பியாக மருதாணி வைத்து விட்டு, நான் கொஞ்சம் மருதாணி தருகிறேன் நீ சென்று உன் அம்மாவுக்கும் வைத்து விடு என்று கேட்டுக்கொள்ள அப்படியே செய்யவதாக சொல்லிவிட்டு ஆலயம் விட்டு ஓடிவிட்டாள்.
வீட்டிற்கு வந்து அம்பாள் மீது பாரத்தை போடு விட்டு மறுநாள் அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டு, சோதனை செய்த போது மருத்துவர்கள் வியந்தனர், புற்றுநோயாக மாற இருந்த செல்கள் அனைத்தும் சாதாரண செல்களாக மாறிவிட்டதாகவும் அறுவை சிகிச்சை தேவையில்லை என்றும் கூறிவிட்டனர்.
வியந்த நன்றிப்பெருக்கோடு ஸ்ரீவித்யா உபாசகரிடம் சென்று சுவாமி நான் 5ஆம்வாரம்  பூர்த்தி செய்ய
முடியவில்லை சுமங்கலிக்கு வைக்கல. ஆனாலும் அம்பாள் திருவருள் மூலம் கணவர் நலம் பெற்றார் என்றார்.
அப்போது சிரித்த ஸ்ரீவித்யா உபாசகர், வந்தது சாஃஷாத் அம்பிகை தான் என்றும், அவளுக்கே மருதாணி வைக்கும் பெரும் பேறு உன் பக்தியால் கிடைத்தது என்று கூறினார். கண்ணீர் மல்க அம்பிகைக்கு நன்றி சொன்னார் அந்த பக்தை..
 நாமும் அம்பாளை பூஜிக்கும் தருணம் மருதாணி வைத்துக்கொள்ளலாம், நவராத்ரி காலங்களில் இல்லத்திற்கு வரும் பெண்களுக்கும் மருத்துவ குணம் நிறைந்த மருதாணி வைத்துவிடலாம். அம்பிகை அருள் பெறலாம்..  ஜெய ஜெய ஜெகதாம்பிகே ஜெய ஜெய காமாக்ஷி!
மருதாணியின்மஹிமை
=======================

Short Story on Navratri in Tamil:- நவராத்திரி கதை:-

ஒருநாள் ஸ்ரீஇராமர், இராவணனை போர் செய்து கொன்றுவிட்டு சீதாதேவியை பத்திரமாக மீட்டார். அப்போது அன்னை சீதாதேவி ஸ்ரீஇராமரிடம், “இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்.” என்று கூறி மருதாணி செடியிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்.” என கேட்டாள்.
“எங்களுக்கு எதுவும் வேண்டாம். இன்று உன் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. உன்னை போல அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சிதான். அது போதும்.” என்றது மருதாணி செடி.
அதற்கு சீதை, “உன்னதமான உன் குணத்திற்கு நான் ஒரு வரம் தருகிறேன். உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில் வைத்துக்
கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மைகள் கிடைக்கும். அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.” என்ற வரத்தை தந்தார் சீதாபிராட்டி.
அதனால்தான் இன்றுவரை வடஇந்தியர்கள் திருமணத்திற்கு முந்தைய நாளில் மெஹந்தி விழா நடத்துகிறார்கள். இதன் காரணம், ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசி மணமகளுக்கும், திருமணத்தில் கலந்துக்கொள்ளும் உறவினர் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அத்துடன் மருதாணிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மருதாணியை ஒருவர் கையில் வைக்க
 மருதாணி வைக்கபட்ட கை சிவந்தால், எந்த நபர் மருதாணி வைத்தாரோ அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும்.
அதனால்தான் இன்றும் சில கிராமபுரத்தில் உள்ள பெண்கள், தன் கையில் மருதாணி வைக்கும் படி தன் கணவரிடம் சொல்வாள்.மருதாணி வைத்த பிறகு அந்த பெண்ணின் கை நன்றாக சிவந்தால், தன் கணவர் தன் மேல் நல்ல பாசமாக இருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்வாளாம்.
வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்து கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்.
நவராத்ரி ஸ்பெஷல் 1:
ஸ்த்ரியஸ் ஸமஸ்தா: தவ தேவி பேதா:
ஒரு தேவி உபாஸகர். அவாத்துல ப்ரஹ்மாண்டமா கொலு வைச்சுருந்தா!! எத்தனையோ மனுஷா அந்த கொலுவை பாக்கறதுக்காக நிறைய இடங்கள்ல்லேர்ந்தும் வந்துருந்தா!! எல்லோர்க்கும் கொலுவை நன்னா காண்பிச்சார் அந்த உபாசகர்!
ஒரு நடுவயது இருக்கற ஒரு ஸ்த்ரியும் கொஞ்சம் லக்ஷணக் குறைவு இருக்கறவளா, எடுப்பான பல் இருக்கறவளா ஒரு பெண் அவாத்து கொலுவைப் பார்க்க வந்திருந்தா!! அவளைப் பார்த்து “ஒன்ன பாத்தா சுமங்கலி மாதிரியும் தெரியல்லே!! நீ அந்தப் பக்கம் போய் அப்படி ஒக்காரு!!” அப்டீன்னார்!!
கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா அந்த பொம்மணாட்டியைக் காணும்!!
அன்னிக்கு ராத்திரியே அவரோட பேத்திக்கு “இசிவு” வந்துடுத்து!! ஆஸ்பத்திரிக்கு எடுத்துத்துண்டு ஓடினா எல்லோருமா!!
“துர்கே!! காப்பாத்து!!”ன்னு அம்பாளை வேண்டிண்டார் அந்த உபாசகர்!!
“என்னை ஏன் கூப்டறே!! நான் காளி தான்!! என் பல்லு எடுப்பாத் தான் இருக்கும்!! மஹிஷாஸுரமர்த்தினி ஆத்துக்கு வந்தா இப்படித் தான் விரட்டுவியா!!” ன்னா அம்பாள்!!
அந்த உபாசகர்க்குத் தன் தப்பு புரிஞ்சது!! கதறி அழுது “இனிமே இது போல பாதகத்தைப் பண்ண மாட்டேன் தாயே!! மன்னிச்சுடு!!” ன்னு கதறினார்!!
அம்பாள் அருளால அவர் பேத்தி பூரண குணமடைஞ்சுட்டா!!
அவருடைய பேத்திக்கு வரப்போற ஆபத்தைத் தடுக்கத் தான் அம்பாள் அந்த ரூபத்துல அவாத்துக்கு வந்துருக்கா!! ஆனா உபாசகராயிருந்தாலும் அதை அவர் புரிஞ்சுக்காத அலக்ஷ்யபடுத்தினார்!!
அம்பாள் அழகா லலிதாம்பாளா, புவனேச்வரியா த்ரிபுரஸுந்தரியா மாத்ரம் இல்லே!! தூமாவதி போன்ற மஹாவித்யா ரூபங்களிலேயும் அவள் தான் இருக்கா!! கோரமான வடிவங்களும் பராசக்தி தான்னு புரிஞ்சுக்கனும்!!
ஸ்த்ரிகள் பதிவ்ரதையானாலும் அல்லது வேச்யையானலும் அம்பாளுடைய அம்சம் தான்!! ஸுமங்கலியானாலும் விதவையானலும் பராசக்தியுடைய ஸ்வரூபம் தான்!! கன்யையானாலும் வ்ருத்தையானாலும் ஜகதம்பாள் வடிவம் தான்!!
அதுனாலத் தான் தேவி உபாஸகாள் ஸ்த்ரீகளைப் பார்த்தாலே தேவீ ஸ்வரூபமா நினைக்கனும்ங்கறது!! ஆத்ம சைதன்ய வடிவானவள் பராசக்தி தானே!!
நவராத்ரி மாத்ரம் அல்ல ஆத்துக்கு எந்த ஸ்த்ரீ எப்போ வந்தாலும் அவாளுக்கு யதாசக்தி தாம்பூலம் கொடுத்து அனுப்பினா தான் அம்பாளுக்கு ப்ரீதி!! அம்பாள் எந்த வடிவத்துல எப்போ வருவாங்கறது தெரியாது!!
நன்றி : பொன்னம்மாள் பக்கம்
லலிதே சரணம்
காமாக்ஷி சரணம்நவராத்திரி ஸ்பெஷல் !
நவராத்திரி – பூக்களும், நைவேத்தியங்களும்!
navarathiri quotes golu

Navarathri pooja History  in tamil language:-

ஸ்ரீ பராசக்தி சண்டிகா தேவிகாளி உக்கிரத்துடன் அவதரித்து மகிசாசுரனுடன் போர் புரிந்து வீழ்த்தினாள். இவ்வாறு சண்டிகா தேவி மகிஷாசுரமர்த்தினியாக அவதரித்து அசுரனை அழித்த விழாவே நவராத்திரி மகோற்சவம்.
*நவராத்திரி, உத்தரபிரதேசத்தில் “ராம்லீலா’ என்ற பெயரிலும் வங்காளிகள் “காளிபூஜை’, “துர்க்கா பூஜை’ என்றும் கர்நாடகத்தில் “தசரா பூஜை’ என்றும் கொண்டாடுகின்றனர்.
*தில்லியில் விஜயதசமி அன்று ராவணன் பொம்மைகளை எரித்து ராவணன் சம்காரமாக கொண்டாடுகின்றனர்.
*நவராத்திரியின் முதல் மூன்று தினங்கள் துர்க்கா; அடுத்த மூன்று நாள்கள் லட்சுமி; கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதி பூஜையாகவும் பத்தாம் நாள் ஆயுதபூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.
*விஜயதசமி அன்று புதுவேலை, கல்வி, பாட்டு போன்றவற்றை தொடங்குதல் நல்லது. நவராத்திரி சமயத்தில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கொடுத்தால் பன்மடங்கு செல்வம் பெருகும்.
*நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் அம்பிகையை பூஜிக்க வேண்டும். அதிலும் முக்கியமாக அஷ்டமியன்று கட்டாயம் வழிபட வேண்டும். “துர்காஷ்டமி’ என்றே அந்நாளுக்கு பெயர். இந்நாளில் துர்க்கையை வழிபட்டால் அனைத்து பலன்களையும் பெறலாம்.
*நவராத்திரியில் ஒன்பது நாள்களிலும் தேவி ஒன்பது வடிவங்களில் காட்சியளிக்கிறாள். குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்ரா என்னும் ஒன்பது வடிவங்களில் தேவி காட்சி தந்து அருள்புரிகிறாள்.
*நவராத்திரியின் ஒன்பது நாள்களிலும் விரதம் இருப்பது சிறப்பு. படுக்கை, தலையணை உபயோகிக்காமல் படுப்பதும் நல்லதே. பெண்கள் காலை, மாலை நீராடி அம்பாள் பூஜை செய்து லலிதா சகஸ்ர நாமம், துர்க்கா சப்தமி, விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற சுலோகங்களைப் பாராயணம் செய்ய வேண்டும். விஜயதசமி அன்று இரவு பொம்மைகளுக்கு ஆரத்தி எடுத்து ஓரிரு பொம்மைகளை எடுக்க வேண்டும். மறுநாள் கொலுவை எடுத்துவிடலாம்.
*விஜயதசமி அன்று வன்னி மரத்தை வழிபடுவது சிறப்பான வழிபாடாகும். ஒருசமயம், பரமேஸ்வரி வன்னி மரத்து நிழலில் எழுந்தருளி இளைப்பாறினாள். அதுசமயம் சீதாதேவியைத் தேடிக்கொண்டு புறப்பட்டு வந்த அனுமன் வன்னிமரத்தை வலம் வந்து வணங்கிப் புறப்பட்டான். அஞ்ஞாத வாசத்தை மேற்கொள்ளப் புறப்பட்ட பாண்டவர்கள் தங்களது ஆயுதங்களை வன்னிமரத்துள் வைத்துச் சென்றதாக புராணங்கள் உரைக்கின்றன.
 *நவராத்திரி கொலுவை பராசக்தியின் விஸ்வரூப தரிசனம் என்றும் கூறலாம். எல்லாமுமாக இருப்பது சக்தியே என்பதைச் சுட்டிக்காட்டும் பரிணாம வளர்ச்சியை விளக்கி இவை அன்னையின் அருளாலேயே நடைபெறுகிறது என்பதை உணர்த்துவதே கொலுவின் தத்துவமாகும்.
*அமாவாசையன்று பூஜைப் பொருள்களை சேமித்து உபவாசம் இருந்து பிரதமையன்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும்.
 *பகலில் செய்யும் பூஜை இறைவனுக்கும் இரவில் செய்யும் பூஜை இறைவிக்கும் உரியவை என்பது பொதுவான வழக்கமாகும். ஆனால் நவராத்திரி ஒன்பது நாள்களிலும் பகலிலும் இரவிலும் செய்யும் பூஜைகள் தேவிக்கே நடைபெறுகின்றன.
*ஒன்பது நாள்களிலும் தேவியை பூஜிக்க முடியாதவர்கள் அஷ்டமியன்றாவது அவசியம் ஜகன்மாதாவை பூஜிக்க வேண்டும்.
முதல்நாள்வடிவம்: மகேஸ்வரி
திதி : பிரதமை
கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : மல்லிகை, சிவப்பு நிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை.
பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.
இரண்டாவது நாள்வடிவம் : ராஜராஜேஸ்வரி
திதி : துவிதியை
பூக்கள் : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம் : புளி யோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.
கோலம் : மாவினால் கோலம் போட வேண்டும்.
பலன் : நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும்.
மூன்றாவது நாள்வடிவம் : வாராகி
திதி : திருதியை
கோலம் : மலர் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல்.
பலன் : தனதான்யம் பெருகும் வாழ்வு சிறப்பாக அமையும்.
நான்காம் நாள்வடிவம் : மகாலட்சுமி
திதி : சதுர்த்தி
கோலம் : அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.
பூக்கள் : செந்தாமரை, ரோஜா பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.
நைவேத்தியம் : தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல்.
மாலை : கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம்.
பலன் : கடன் தொல்லை தீரும்.
ஐந்தாம் நாள்வடிவம் : மோகினி
திதி : பஞ்சமி
கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும்.
வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.
பூக்கள் : கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல்.
பலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.
ஆறாம் நாள்வடிவம் : சண்டிகாதேவி
திதி : சஷ்டி.
கோலம் : கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்.
பூக்கள் : பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம்.
நைவேத்தியம் : தேங்காய் சாதம், தோங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம்.
பலன் : வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.
ஏழாம் நாள்வடிவம் : சாம்பவி துர்க்கை
திதி : சப்தமி.கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.
பூக்கள் : தாழம்பூ, தும்பை, மல்லிகை, முல்லை.
நைவேத்தியம் : எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு.
பலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.
எட்டாம் நாள்வடிவம் : நரசிம்ம தாரினி
திதி : அஷ்டமி
கோலம் : பத்ம கோலம்
பூக்கள் : மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி.
நைவேத்தியம் : பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.
பலன் : நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.
ஒன்பதாம் நாள்வடிவம் : பரமேஸ்வரி, சுபத்ராதேவி
திதி : நவமி
கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.
பூக்கள் : தாமரை, மரிக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள்.
பலன் : ஆயுள், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சவுக்கியமாக இருப்பார்கள்.
9 நாட்களும் விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்கள் விரதமிருந்து வழிபடலாம். அதுவும் இயலவில்லை எனில், அஷ்டமி தினத்தில் அம்பாளை பூஜித்து வழிபட்டு அருள் பெறலாம்.
இந்த தினத்தில்தான் தட்ச யாகத்தை அழித்த அம்பாள், அநேக கோடி யோகினியருடன் தோன்றினாள். அதனால் இந்த தினம் விசேஷமானது.
எவரொருவர் இந்த விரதத்தைத் தொடர்ந்து 9 நாட்கள் கடைப்பிடிக்கிறார்களோ, அவர்களுக்கு தேவர்களுக்கும் கிட்டாத இன்பமும், பிணியின்மையும் வரமாகக் கிட்டும்; சத்ருக்கள் தொல்லையும் நீங்கும் என்பது நம்பிக்கை.
5 1 vote
Article Rating
சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
அதிக வாக்குகள் பெற்றவை
புதிய பழைய
Inline Feedbacks
View all comments