ஆசிய நாடுகளில் பொதுவாக உணவு வகைகளில் பிரதான உணவாக காணப்படுவது அரிசிச் சோறு ஆகும். இவற்றில் அதிகமான சத்துப் பொருட்களும்,தாதுப் பொருட்களும் காணப்படுவது வழக்கம்.
அரிசி வகைகளில் எண்ணில் அடங்கா பயன்களை கருப்பு கவுனி அரிசி கொண்டுள்ளது (kavuni rice benefits in Tamil).
இந்த அதிக சத்துக்களை கொண்ட கவுனி அரிசி பற்றித் தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகிறோம்.
கவுனி அரிசியில் அதிக அளவில் போசணைச் சத்துக்களும் ( Nutrients) மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால் இவை ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளன.
கவுனி அரிசியின் விஷேட பயன்கள் (kavuni rice benefits in Tamil)
1. அதிகளவான நார்ச்சத்துக்களை கொண்டு காணப்படுதல்
அதிக நார்ச்சத்து காரணமாக இதய பலவீனம் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் மலச்சிக்கல் போன்ற நோய்களில் இருந்தும் இந்த அரிசியை உட்கொள்ளவதினால் பயன் கிடைக்கின்றது.
2. உடல் நிறை குறைவதற்கு உதவும்
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கவுனி அரிசியில் செய்யப்பட்ட உணவுகளை உட்கொண்டு வர நாளடைவில் உடல் எடையை குறைத்துக் கொள்ள முடியும்.
3. உடலில் காணப்படும் நச்சு தன்மையை அகற்றும்
நம்முடைய உடலில் இயற்கையாகவே அதிகளவான நச்சுத்தன்மை காணப்படுகின்றது. இந்த நச்சு தன்மை இணை அகற்ற சிறந்த கவுனி அரிசி உணவுப் பொருட்களை சாப்பிட்டு வருவதாகும். இதனால் எமக்கு அந்த அரிசி யின் போசணை கிடைப்பது மட்டும் அன்றி நச்சு தன்மையும் விட்டு அகல் கின்றது.
4. நீரிழிவு நோயில் இருந்து பாதுகாப்பு தரும்
அதிகமான நார்ச்சத்து பொருட்களை கொண்டு காணப்படுவதாலும் உடம்பில் உள்ள குளுக்கோசை உறிஞ்ச அதிக நேர அளவு தேவைப்படுகிறது. இதன் காரணமாக அதிகம் Glucose உடம்பில் சேருவது தடுக்கப்படுகிறது. இதனால் நீரிழிவு இரண்டாம் வகை ஏற்படுவது குறைக்கப் படுகின்றது.
5. ஆஸ்துமா பிரச்சினைக்கு தீர்வு தருதல்
சிவப்பு கவுனி அரிசியில் உள்ள சக்தி காரணமாக நுரையீரல் செயல்பாட்டுக்கு அதிக அளவில் உதவுகிறது. அதாவது நுரையீரல் சம்பந்தப்பட்ட அனைத்து வகையான நோய்களையும் கவுனி அரிசியில் உள்ள சத்துக்கள் பூர்த்தி செய்கின்றன.
மேலும் கவுனி அரசிகள்(kavuni rice benefits in Tamil) நுரையீரல் காற்றோட்ட செயன்முறைக்கு உதவுவதால் ஆஸ்துமா போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
6. செரிமான பிரச்சனைக்கு தீர்வு தரும்
கவுனி அரிசியில் கரையாத நார்ச்சத்துக்கள், கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் என்று இருவகை சத்துக்கள் உள்ளன இவற்றின் காரணமாக செரிமான பிரச்சினைக்கு பாரியளவு நன்மைகளையும் தருகிறது. மேலும் குடல் இயக்கம் இரப்பை அழற்சி மற்றும் மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.
7. எலும்பு பிரச்சினைகளுக்கு தீர்வு தாருதல்
சிவப்பு கவுனி அரிசியில் காணப்படும் இரும்புச்சத்து அதேபோன்று மகனிசீய சத்து காரணமாக எலும்புகளுக்கு ஆரோக்கியம் அளிக்கின்றது.மேலும் எலும்பு களுடன் தொடர்ப்பு பட்ட அனைத்து வகை பிரச்சனைகளையும் குணப்படுத்துகின்றது.
8. இதய அரோக்கியத்திக்கு உதவல்
கவுனி அரிசியில் காணப்படும் புரதம் நிறைந்த சத்துக்கள் காரணமாக இரத்த அளவில் உள்ள கொழுப்பு குறைக்கப் பட்டு இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.மேலும் இவற்றில் இருந்து கிடைக்கும் தவிடுகளில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன.
9. கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்துக்கு உதவுதல்
கர்ப்பம் தரித்த பெண்களின் குழந்தை வளர்ச்சிகும் பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை குணப்படுத்தவும் கவுனி அரிசிகள் மாபெரும் சேவை ஆற்றுகின்றன.மேலும் பெண்களின் குழந்தைகளுக்கு தேவையான தாய்ப் பால் சுரப்புகளையும் அதிகப் படுத்துகின்றன.
10. குழந்தைகளின் மூளை வளர்ச்சி உதவுதல்
குழந்தைகளுடைய ஆரோக்கியத்துக்கும் மூளை வளர்ச்சிக்கும் மன வளர்ச்சிக்கும் அதிகமாக ஏற்படுவதற்கு கவுனி அரிசிகளின் சத்துக்கள் தேவையாகும்.அவ்வாறு விரும்புகின்ற பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு உணவுகளிலிருந்து ஊட்டச்சத்துக்களையும் போசணைகளையும் வழங்குதல் மிக முக்கியமான விடயமாகும்.
11. தோல் ஆரோக்கியத்துக்கு உதவல்
சருமங்களின் பொலிவு தன்மை மற்றும் தோல் தொடர்பான நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடவும் கவுனி அரிசிகளின் தாதுப் பொருட்கள் பெரிதும் உதவுகின்றன. மேலும் முடி வளர்ச்சிக்கும் இவை அள பெரிய உதவிகள் புரிகின்றன.
12. நீண்ட ஆயுளை பெற்றுத்தருத்தல்
கவுனி அரிசி பழமைவாய்ந்த அரிசி இனமாகும் தற்போது அதிக அளவில் நெற் செய்கையில் இரசாயன பதார்த்தங்கள் சேறுவதால் அவற்றில் அதிக அளவு நச்சுத்தன்மை உருவாகுகிறது ஆனால் கவுனி அரிசியில் இத்தகைய மாற்றங்கள் உருவாவது மிக குறைவாகும்.
ஆதலால் இவ்வகையான அரிசிகளை நாம் உணவாக உட்கொள்ளும் போது எம் உடம்பில் நச்சு அற்ற தன்மை ஏற்பட்டு ஆயுளும் அதிகரிக்கின்றது.
Health Benefits of karuppu kavuni rice in Tamil – மேலதிக நன்மைகள்
kavuni arisi benefits/ karuppu kavuni benefits tamil:- கருப்பு கவுனி அரிசியில் இயற்கையாகவே அதிக அளவில் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்ட ஒரு உணவு பொருளாகும். இந்த கருப்பு அரிசியில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களைப் போக்க உதவுகிறது.
இன்றைய காலத்தில் பொதுவாக எல்லா உணவுகளும் ‘அரிசியால்’ செய்யப்பட்டு வருகிறது. அதிகளவு அரிசி உண்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. இது உண்மை தான். இருப்பினும் இப்போது நாம் பார்க்கக்கூடிய அரிசி உடல்நலத்திற்கு எந்த தீங்கும் இல்லாமல் நன்மையை விளைவிக்கக் கூடிய Wild Rice என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கருப்பு கவுனி அரிசி ஆகும்.
இதய ஆரோக்கியம் :கருப்பு கவுனி அரிசியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்தானது, ‘LDL’ என்ற கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இதனால் உண்டாகும் இருதய பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கிறது. எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஒரு வேளை கருப்பு கவுனி அரிசியை உட்கொள்ளவது அவசியம் ஆகும்.
நீரழிவு நோய் :மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி கருப்பு கவுனி அரிசி டைப் 2 நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும் என்கின்றனர். ஆய்வின் படி, இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கருப்பு கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
புரதச்சத்து :வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும் போது, கருப்பு கவுனி அரிசியில் அதிக புரதச்சத்து அடங்கி இருக்கிறது. இது உடலில் தசைகளை உருவாக்குவதிலும், உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது.
பக்க விளைவுகள் :கருப்பு கவுனி அரிசியில் ஈயம், ஆர்சனிக் மற்றும் காட்மியம் போன்ற கன உலோகங்கள் இருப்பதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு தெரிவிக்கின்றது. இந்த அரிசியினை அதிக அளவில் உட்கொண்டால், ஆபத்து ஏற்படும். எனவே, இதனை சரியான அளவில் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உடல் ஆரோக்கியம் :நிபுணர்களின் கூற்றுப்படி, கருப்பு கவுனி அரிசியில் குறைவான அளவில் கலோரிகள், கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகள் அடங்கியிருக்கிறது. அதோடு அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. இதனை உணவாக அன்றாடம் எடுத்துக்கொள்வதால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புவர்களும் கருப்பு கவுனி அரிசியை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.
1) கவுனி அரிசியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது, அதாவது அனைத்து வகை அரிசிகளை விட கருப்பு அரிசியில் அதிகளவு Nutrients & Antioxidant நிறைந்துள்ளது.
2) இந்த கருப்பு அரிசியில் Anthocyanin என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதய நோயை தடுக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் பயன்படுகிறது.
3) இந்த கருப்பு அரிசியில் அதிகளவு நார்ச்சத்து (Fibre) நிறைந்துள்ளது. ஒவ்வொரு 1/2 கப் கவுனி அரிசியிலும் 3 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
இந்த நார்ச்சத்துக்கள் என்னென்ன பிரச்சனைகளை சரி செய்கின்றது என்றால், குடல் அசைவுகளை செரிக்க பயன்படுகிறது, மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது, வயிற்று போக்கு மற்றும் குடல் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்யவும் பயன்படுகிறது.
4) நீங்கள் ஒரு உடல் பருமனை எதிர்கொள்ளும் நபராக இருந்தால், இந்த கருப்பு அரிசி தங்களுக்கு ஒரு சிறந்த உணவாக அமையும்.
ஆம் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கவுனி அரிசியில் செய்த உணவுகளை உட்கொள்வதினால் மிக எளிதில் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
5) கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் சர்க்கரை வியாதி உள்ளவர்களின் குளுக்கோஸ் நீண்ட நேரம் உங்கள் உடலில் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது.
கருப்பு அரிசி போன்ற முழு தானியங்களை உட்கொள்வதால் உங்கள் உடலில் டைப் 2 நீரிழிவு அபாயம் குறைக்கப்படுகிறது, உங்கள் உடல் எடை கண்காணிக்கப்படுகிறது, இதனால் உங்கள் உடலின் ஆற்றல் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கருப்பு அரிசியில் என்னென்ன உணவுகளை சமைக்கலாம்
1.இனிப்பு பொங்கல்
2.பாயசம்
3.சாதம்
4.கஞ்சி
5.இட்லி மற்றும் தோசை