Adsense என்றால் என்ன? அதனை எவ்வாறு பெறுவது ? | How to apply for an adsense account in Tamil
Adsense என்றால் என்ன? | What is Adsense in Tamil
How to Apply for an adsense account in Tamil :- Adsense என்பது Google-ன் விளம்பர நிறுவனமாகும். இதனைப் பயன்படுத்தி நீங்கள் உங்களது websites அல்லது youtubeவிற்கு apply செய்து அதற்கு நீங்கள் தகுதியானவர்களாக இருந்தால் நீங்கள் அதில் approval வாங்கலாம். அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
How to create a blog in Tamil | ப்ளாக் எப்படி தொடங்குவது?
கூகுள் ஆட்சென்ஸ் உலகத்திலேயே மிகவும் சிறந்த அதிக பணம் தரக்கூடிய விளம்பர தளமாக இருக்கிறது.
நீங்கள் எந்த மொழியிலும் உங்களுடைய website- ஐ உருவாக்கி இருந்தாலும் Adsense கிடைக்கும்.
அதற்கு சில விதிமுறைகள் இருக்கிறது. அதனை நீங்கள் கடைபிடித்தால் போதும். நீங்கள் எளிதாக Adsense Approval வாங்கி விடலாம்.
கூகுள் அட்சென்ஸ் apply செய்வதற்கு முன்பு செய்ய வேண்டிய விஷயங்கள்:- Important Tips Before applying Adsense in tamil:-
முதலில் உங்க website-க்கு Custom Domain வாங்கி இருக்க வேண்டும். அதை உங்கள் website உடன் இணைக்க வேண்டும்.
பிறகு About us, Contact us மற்றும் Privacy Policy pages ஆகியவற்றை உருவாக்க இருக்க வேண்டும்.
- அதில் About us page-ல் உங்களை பற்றி சில தகவல் எழுத வேண்டும்.
- Contact us page-ல் உங்கள் website-க்கு வருபவர்கள் உங்களை எவ்வாறு contect செய்வது என்பதை குறிப்பிட வேண்டும்.
- Privacy policy page-ல் உங்களுடைய Website விதிமுறைகளை எழுத வேண்டும்.
- அப்படி எழுத தெரியவில்லை என்றால். இணையத்தளத்தில் இதற்கு என்று சில website-கள் உள்ளது அதனை பயன் படுத்திக்கொள்ளலாம். –> Privacy Policy Generator , Terms Condition Generator
நல்ல Theme:-
உங்கள் website-ற்கு நல்ல Theme இருக்க வேண்டும். இணையத்தளத்தில் நிறைய Theme-கள் உள்ளது. உங்களுக்கு high quality theme மிக குறைந்த விலையில் வேண்டுமென்றால் நீங்கள் எங்கள் தீம் ப்ளகின் கடையில் பார்வையிடலாம். இங்கு 100 டாலருக்கு அதிகமாக உள்ள High Quality Premium Themes அனைத்தும் அனைத்தும் கம்மியாக கிடைக்கும்.
- அடுத்து குறைந்தது நீங்கள் 20 முதல் 30 வரை Post போட வேண்டும்.
- ஒவ்வொரு Post-லும் குறைந்தது 500 வார்த்தைக்கு மேல் இருக்க வேண்டும்.
- மற்ற website-ல் உள்ள post-ஐ copy – paste பண்ணக்கூடாது. அப்படி பண்ணினால் உங்களுக்கு adsense கிடைக்காது.
- ஒவ்வொரு Post-உம் உங்களுடைய சொந்த Post ஆக இருக்க வேண்டும்.
- அடுத்தவர்களின் பயன்படுத்திய Image பயன்படுத்தக்கூடாது. நீஙகள் Screenshot அல்லது modify செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
உங்கள் website-ற்கு எவ்வளவு பார்வையாளர்கள் இருக்க வேண்டும் என்று எதுவும் கிடையாது. உங்களுக்கு 0 பார்வையாளர் இருந்தால் கூட உங்களுக்கு கிடைத்து விடும்.
குறைந்தது 30 நாட்கள் பழைமையான டொமைன்:-
- உங்கள் டொமைன் குறைந்த பட்சம் 30 நாட்கள் ஆகியிருக்க வேண்டும்.
- ஓரிரு நாட்களில் உடனடியாக 30 போஸ்ட்கள் எழுதி விடக்கூடாது.
- ஒரு நாட்களில் 2 போஸ்ட் எழுதினால் கூட போதும். முப்பது போஸ்ட்கள் வந்த உடன் GOOGLE ADSENSE APPLY பண்ணலாம்.
உங்களிடம் ஏதேனும் Social Media Account இருந்தால் அதனை உங்கள் website-ல் பயன்படுத்தி கொள்ள்ளலாம்.
Adsense Approval கேட்பது எப்படி?
- நீங்கள் Blogger-ல் Website உருவாக்கி இருந்தால் அதில் Earning என்னும் Option-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
- Adsense-ற்கு தகுதியானவராக இருந்தால் அதில் உங்களுக்கு காண்பிக்கும். அப்படி இல்லை என்றால் நீங்கள் நேரடியாக Adsense Website-க்கு சென்று நேரடியாக Apply செய்யலாம்.
WordPress அல்லது வேற website ஆக இருந்தால் நீங்கள் நேரடியாக Adsense Website-க்கு சென்று Apply செய்து வேண்டும்.
கூகுள் ஆட்சென்ஸ் நேரடியாக Apply செய்வது எப்படி?
- முதலில் உங்கள் Website Domain name -ஐ copy செய்ய வேண்டும்.
- பிறகு Adsense Website-ற்கு செல்ல வேண்டும். அதில் Sign up என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- Your website என்ற இடத்தில் Copy செய்த domain name-ஐ paste செய்யவும்.
- பின்பு Your Email Address என்ற இடத்தில் உங்களுடைய Email-ஐ கொடுக்க வேண்டும்.
- கீழே yes என்பதை கிளிக் செய்து save and continue என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- Next Page-ல் உங்களது country தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு Terms and Conditions படித்துவிட்டு கீழே உள்ள கட்டத்தில் கிளிக் செய்து Create Account என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- உங்களுடன் Account உருவாக்கிய பிறகு அதில் நீங்கள் உங்களுடைய Payment Address Details கொடுக்க வேண்டும்.
- நான் முதலில் பதிவுசெய்தபோது இந்த பகுதியில் இரண்டு தவறுகளைச் செய்தேன். எனவே நீங்கள் இந்த வழிகாட்டியை பின்பற்றினால், நீங்கள் அதே தவறுகளை செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
- உங்களுடைய Bank Account Details அல்லது Pancard-ல் உள்ள detail கொடுப்பது நல்லது. உங்கள் வங்கிக் கணக்குப் பெயரும் மேலே கொடுத்திருக்கும் பெயரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
- பின்பு Save கொடுக்க வேண்டும்.
- நீங்கள் AdSense இல் பதிவுசெய்ததும், உங்கள் blog/websiteல் AdSense codes சேர்க்க வேண்டும்.
- அதாவது உங்கள் Adsense Code-ஐ copy செய்து <head> and </head> இவை இரண்டிற்கும் நடுவில் paste செய்ய வேண்டும் . பிறகு கிழே டிக் செய்து விட்டு done என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- நீங்கள் codes சேர்த்த பிறகு AdSense குழு உங்கள் விண்ணப்பத்தை Review செய்யும், பின்பு அவர்களது விதிமுறைக்கு உங்களது website உட்பட்டிருந்தால் உங்களுக்கு adsense கிடைத்துவிட்டது என்று உங்களுக்கு ஈமெயில் மூலம் தகவல் தெரிவிக்கும்.
AdSense Approval process செயல்முறை:-
AdSense சிறந்த விளம்பர நெட்வொர்க்குகளில் ஒன்றாகும் என்பதை மீண்டும் குறிப்பிடுகிறேன் . இப்போது வரை, AdSense ஒப்புதல் செயல்முறை எளிதானது.
நீங்கள் ஒரு புதிய AdSense கணக்கை உருவாக்கிவிட்டிர்கள் , உங்கள் கணக்கு மதிப்பாய்வு செய்யப்படும் , Adsense குழு உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு , மேலும் உங்கள் தளத்தில் விளம்பரங்களை செயல்படுத்தலாம் மற்றும் பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.
சில முக்கிய குறிப்புகள் :- Some Important Tips about adsense Pin Verification in Tamil
- உங்கள் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்ய 48 மணிநேரம் ஆகும். உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், அது உங்கள் வலைப்பதிவில் விளம்பரங்களைக் காட்டத் தொடங்கும், மேலும் நீங்கள் பணம் சம்பாதிக்கத் தொடங்கலாம் .
- இறுதி ஒப்புதல் செயல்முறை முடிவடையாத வரை விளம்பரங்கள் காலியாக காண்பிக்கப்படும்.ஒப்புதலுக்கு 2 வாரங்கள் ஆகலாம்.
- இறுதி AdSense ஒப்புதலுக்குப் பிறகு, நீங்கள் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.
- உங்கள் AdSense-ல் $ 10 ஐ அடைந்ததும், AdSense உங்கள் முகவரிக்கு PIN ஐ அனுப்புவார்கள் .
- உங்கள் AdSense கணக்கில் உள்நுழைந்து, அதைப் பெற்றதும் பின்னை உள்ளிடவும்.
- அவ்வளவுதான் நீங்கள் அனைத்து படிகளையும் முடித்துவிட்டீர்கள்.
- உங்கள் கணக்கு $ 100 ஐ அடைந்ததும், கூகிள் உங்களுடைய பணத்தை உங்களுடைய வங்கி கணக்கிற்கு செலுத்தி விடுவார்கள் .
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் .
நன்றி :- பாஸ்கர் (கட்டுரை ஆசிரியர்)