Freelance tamil meaning (2020)
Freelance tamil meaning : பொதுவாக இன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன. ஆனால் இன்று நாம் பார்க்க போகின்ற ஒரு வழி ஒரு தனித்துவமான விரைவான வழி.
ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது அவ்வளவு எளிது அல்ல. அதற்கு நிறைய கற்றுக்கொள்ள வேண்டும், கொஞ்சம் கஷ்டப்படவேண்டும், பொறுமையாக இருக்க வேண்டும். இந்த வழி blog வழியாக சம்பாதிக்க விரும்புவோருக்கு பொருந்தும்.
ஏனென்றால் பிளாக்கிங் வழியாக பணம் சம்பாதிப்பதற்கு சிறிது மாதங்கள் ஆகும். அதன்பிறகு அவர்களுக்கு ராஜ வாழ்க்கை தான். பணம் கொட்டிக் கொண்டே இருக்கும்.
சரி, அப்படி என்றால் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கு ஒரு விரைவான வழி என்ன என்று கேட்டால் அது freelancing ஆகும். வாருங்கள் இந்த ப்ரீலேன்சிங் என்றால் என்ன என்று புரிந்து கொள்வோம்.
Freelance meaning in tamil : Freelancing என்றால் என்ன?
எடுத்துக்காட்டாக :-
ராஜாவுக்கு வெப் டிசைன் பற்றிய முழு அறிவு இருக்கிறது. web டிசைனிங்கில் இவனை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. மற்றொருவர் ரவி இவருக்கு வெப் டிசைன் செய்து கொடுக்க வேண்டும், இவருக்கு அந்தத் தேவை இருக்கிறது. ஆனால் அது எப்படி என்பது பற்றி ஒன்றும் தெரியாது.
இப்போது ரவி தனக்கு வெப் டிசைன் முடித்துக்கொடுக்க ஒரு ஆள் தேடுகிறார். இவர் தேடியதில் ராஜா கிடைத்திருக்கிறார்.
இப்போது ராஜா ரவிக்கு வெப் டிசைன் வேலையை அவர் சொன்னது போல் முடித்துக் கொடுக்கிறார். அதற்கு ரவிக்கு பணம் கிடைக்கிறது.
இதில் இருவருக்குமே லாபம். ராஜாவுக்கு வெப் டிசைன் நன்றாகத் தெரியும், அவருடைய திறமைக்கு பணம் கிடைத்திருக்கின்றது. ரவிக்கு அந்த வேலை முடிந்துவிட்டது.
இதுதான் ப்ரீலேன்சிங் ஆகும்.
இது வெப் டிசைன்க்கு மட்டும் பொருந்தாது. Content writing, Blog writing, Video making, Online class, SEO, Link building, App development என்று இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும் freelancing தான்.
உங்களுக்கு எதில் எல்லாம் திறமை இருக்கின்றது அதை நீங்களே தேர்ந்தெடுக்கலாம். உங்களுக்கு பணமும் கிடைக்கும். அவருக்கு வேலையும் முடிந்து விடும்.
இதேபோல்தான் நீங்களும் freelancing செய்து எக்கச்சக்க பணம் சம்பாதிக்கலாம். ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் இது செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.
ஆனால் வாய்ப்புகள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. உங்களுடைய வேலை பிடித்துவிட்டால் பெரிய பெரிய கம்பெனிகள் உங்களை வேலைக்கு அமர்த்த விரும்பும். லட்சக்கணக்கான பணம் நீங்கள் சம்பாதிக்கலாம்.
Freelancing வெப்சைட் என்ன?
வாருங்கள், freelancing வெப்சைட் எப்படிவேலை செய்கிறது என்று பார்க்கலாம்.
இப்போது நாம் freelancing பிசினஸ் க்குள் நுழைந்துவிட்டால், அதைப்பற்றி தேடிக்கொண்டிருக்கும் மற்றவரை எப்படி தொடர்பு கொள்வது அதாவது BUYER.
Freelancer என்றால் ( யார் freelancing செய்கிறார்களோ, அவரை தான் freelancer என்று குறிப்பிடுகிறோம்).
நீங்கள் இன்டர்நெட்டில் தேடினால் நிறைய பேர் உங்களுக்கு கிடைப்பார்கள். சிலபேருக்கு சமூக வலைதளங்களிலும் கிடைப்பார்கள். அவர்களை நீங்கள் தொடர்புகொண்டு அவருடைய வேலையை முடித்துக் கொடுக்கலாம்.
ஆனால் நீங்கள் freelancing வெப்சைட் உங்களை பதிவு செய்தால் உங்களுக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகள் வரும். இதில்தான் சிறந்த வாய்ப்புகள் வரும்.
Freelancing வெப்சைட்டுகள் என்னென்ன?
நீங்கள் இன்டர்நெட்டில் freelancing website பற்றி தேடினால் ஆயிரக்கணக்கான வெப்சைட்டுகள் வரும். அதில் மிகச்சிறந்தவற்றை சில இப்போது உங்களுக்கு கூறுகிறேன்.
Fiverr
Fiverr என்பது freelancer மற்றும் buyer ஆகிய இருவருக்கும் பயன்படக்கூடிய ஒரு அல்டிமேட் பிளாட்ஃபார்ம் ஆகும். இந்த வெப்சைட்டில் நீங்கள் freelancer ஆக பதிவு செய்து கொள்ளலாம். அல்லது buyer ஆகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
Buyer என்றால் நீங்கள் மற்றவரை வேலைக்கு அமர்த்தி உங்களுடைய வேலையை முடித்துக் கொடுக்கும் அவருக்கு பணம் கொடுப்பது.
தனித்தனி freelancer ரிடம் தனித்தனி திறமைகள் இருக்கும். இங்கு உங்களுக்கு வேறு என்ன எல்லாம் திறமை இருக்கிறதோ அதை அவருக்கு தெரிவிக்கலாம். Gig Publish செய்யலாம். நீங்களே உங்களுடைய பணத்தை தேர்ந்தெடுக்கலாம். Fiverr இல் குறைந்தபட்ச தொகை 5 டாலர்கள் ஆகும்.
இதேபோன்று நிறைய வெப்சைட்டுகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு எது விருப்பமோ அதில் நீங்கள் வேலையைத் தேடலாம். முதலில் அவ்வளவு எளிதாக உங்களுக்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள்.
ஆனால் இவை கிடைத்துவிட்டால், அவருக்கு உங்களுடைய வேலை பிடித்துவிட்டால் பின்பு உங்களுடைய ரெகுலர் Client ஆக ஆகிவிடுவார்கள்.
உங்களுக்கு சைட்டுகளில் தேடுவதில் சிரமம் இருந்தால் நீங்கள் நேரடியாக கம்பெனிகளை தொடர்புகொண்டு அவர்களுக்காக நீங்கள் வேலை செய்து கொடுக்கலாம். அதற்கு சம்பளம் வாங்கிக் கொள்ளலாம்.
மேலும் சில:- (freelancing earn money tamil)
- Upwork (அப்வொர்க்)
Freelancer (ப்ரீலான்சர்)
எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்:-
இதற்கு கணக்கே இல்லை. உங்களுடைய வேலை மற்றவருக்கு பிடித்துவிட்டால் போதும் அவர் தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டே இருப்பார். நீங்கள் முடிக்க முடிக்க பணம் கொடுத்துக் கொண்டிருப்பார்.
நான் முன்பு சொன்னது போல் முதலில் அவ்வளவு எளிதாக உங்களுக்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். நீங்கள் அந்த வெப்சைட்டுகளை நன்றாக படித்து அதை புரிந்து கொள்ள வேண்டும்.
பின்பு உங்களுடைய வேலை அவருக்கு பிடித்து விட்டால், வேலைக்கு ஏற்றார்போல் நீங்கள் உங்கள் சம்பளத்தை நிர்ணயிக்கலாம்.
பெரிய பெரிய கம்பெனிகள் கிடைத்துவிட்டால் ஆயிரக் கணக்கான டாலர்கள் அள்ளிக் கொடுப்பார்கள். மாதம் 500 டாலர் முதல்- இரண்டாயிரம் டாலர்கள் வரை இதில் நீங்கள் சம்பாதிக்கலாம். இந்திய மதிப்பில் 35,000 முதல் 1,50,000 வரை.
Blogging ஆரம்பம் செய்வதற்கு freelancing எப்படி உதவும்?
நீங்கள் சொந்தமாக பிளாக் ஆரம்பித்து Blogging செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் இன்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ப்ரீலான்சிங் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
ஏனென்றால் நீங்கள் freelancing இல் உங்களுடைய கஸ்டமர் காக நீங்கள் நிறைய செய்திகளை சேகரிப்பார்கள், அதிலே உங்களுக்கு அனுபவம் கிடைத்துவிடும். அவர்களுக்கு என்ன பிடிக்கும், இப்படி செய்தால் பிடிக்கும் என்று உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.
பிறகு நீங்களாகவே மக்களுடைய மனோநிலை இப்படிதான் இருக்கும் என்று உங்களுக்கு தெரிந்துவிடும். பிறகு சொந்தமாக Blogging செய்து நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.
freelancing இல் நீங்கள் எந்த ஒரு பணத்தையும் முதலீடாக போட தேவையில்லை. அனைத்தும் இலவசம். உங்களுடைய திறமைக்கு பணம் கிடைத்துக் கொண்டிருக்கும்.
ஆனால், பிளாக்கிங் செய்வதற்கு நீங்கள் சிலவற்றை invest செய்ய வேண்டும். டொமைன் மற்றும் ஹோஸ்டிங் ஆகியவை நீங்கள் காசு கொடுத்து வாங்கவேண்டும்.
- WordPress Blog எப்படி ஆரம்பிப்பது? – முழு விளக்கம் (2019)
இவை அனைத்தும் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீங்கள் comment இல் கேட்கலாம்.