10 சிறந்த இலவச Webhosting என்னென்ன

By Santhosh

Updated on:

free web hosting in tamil

சிறந்த 10 Free Web Hosting Providers in Tamil – முழு review

Best 10 Free web hosting providers tamil :- Blogging க்கு இலவச வெப் ஹோஸ்டிங் சரியா அதை நாம் ப்ரொபஷனல் ஆக பயன்படுத்தலாமா என்பதை பற்றி இன்று நாம் பார்க்கப் போகிறோம் இலவச என்னென்ன நன்மைகள் என்னென்ன தீமைகள் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.



முதலில் வெப் ஹோஸ்டிங் என்றால் என்ன என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அதற்கு இதை படிக்கவும்.

ஹோஸ்டிங் என்பது நம்முடைய வலைத்தளத்தை வைப்பதற்கான ஒரு இடமாகும், எடுத்துக்காட்டுக்கு அது வீடு என்று கூறலாம்.

சிறிது காலத்திற்கு முன்னால் இன்டர்நெட் அஞ்சல்களை அனுப்புவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு அந்த காலம் முடிந்து தற்போது வீடியோக்கள், படங்கள், ஆவணங்கள் என நிறைய அனுப்புவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த மாதிரி அனைத்து வசதிகளை செய்வதற்கும் நமக்கு சில தளம் தேவைப்படுகிறது அதாவது ஹோஸ்டிங்.

நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பல ஆண்ட்ராய்டு ஆப்கள் இந்த ஹோஸ்டிங் துணையுடன் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இப்படி நாம் தினமும் அன்றாட வாழ்வில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் டெக்னாலஜி அனைத்தும் இந்த ஹோஸ்டிங் பெரும் பங்கு வகிக்கிறது.

இந்த ஹோஸ்டிங் பல கம்பெனிகள் நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. அதில் சில கம்பெனிகள் ஹோஸ்டிங் உடன் சில பாதுகாப்பு அம்சங்களையும் நமக்கு சேர்த்து வழங்குகிறது.

வீடியோக்கள், ஆவணங்கள், படங்கள் பாதுகாப்பாக பரிமாறி கொள்ள  எஸ் எஸ் எல்(SSL Certificate) பாதுகாப்பையும் சில ஹோஸ்டிங் கம்பெனி வழங்குகின்றன.

சில ஹோஸ்டிங் Providers தங்களது சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கின்றனர், ஆனால் இலவச ஹோஸ்டிங் வழங்கும் சில வலைதளங்களும் உள்ளன.

அத்தகைய இலவச சேவையை பயன்படுத்தி நாம் நமது டொமைனை ஹோஸ்ட் செய்து மேம்படுத்தலாம், பயன்படுத்தலாம்.

இலவச வெப் ஹோஸ்டிங் தளங்கள் மற்றும் அதன் அம்சங்கள்:

1. Blogger (Blogspot) – ப்ளாக்ஸ்பாட் | Best Free web hosting Providers tamil

free web hosting providers in tamil

Blogger என்பது blogging க்கான மிகப் பழமையான வளைதளங்களில் ஒன்று, அதுவும் கட்டணமின்றி நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். இன்டர்நெட் நடைமுறைக்கு வந்த காலகட்டத்தில் இருந்தே BlogSpot சிறந்தது. சிறந்த இலவச வெப் ஹோஸ்டிங் பற்றி பேசுகையில் Blogger பயன்படுத்துவது நல்லது.

ஒவ்வொரு தளத்திலும் சில நன்மைகள் தீமைகள் உள்ளன அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

Blogger தளத்தின் நன்மை தீமைகள் :- Pros & Cons of Blogger in Tamil

நன்மைகள்:

* இது முற்றிலும் இலவசம், இது blogspot.com என்ற சப் டொமைனை கொண்டது. இது free SSL சான்றிதழ் வழங்குகிறது. இதில் upgrade செலவு ஏதும் இல்லை.

* இது user-friendly மற்றும் பயன்படுத்த மிகவும் எளிது. 

* இந்த தளம் கூகுளால் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ளதால் பாதுகாப்பிற்கு பிரச்சனை ஒருபோதும் இருக்காது. இது கூகுளில் பணிபுரியும் உயர் தர அதிகாரிகளால் கையாளப்படுகிறது, ஆதலால் data loss இல்லாமல் அதிகமான dataவை சேகரிக்கலாம்.

தீமைகள்:

* இதில் வாடிக்கையாளர் ஆதரவு இல்லை

* மற்றொரு பெரிய சிக்கல் SEO techniques இங்கு செயல்படுத்த முடியாது

* இங்கு ப்ளகின் ஏதும் கிடைக்காது மற்றும் குறைந்தபட்ச அம்சங்களே வழங்கப்படுகின்றன. 

2. WordPress –  வேர்ட்ப்ரெஸ்:-

free web hosting providers in tamil

WordPress என்பது தற்போது சக்தி வாய்ந்த மற்றும் மிகவும் பிரபலமான ஹோஸ்டிங் தளங்களில் ஒன்று. WordPress.org இல் sign up செய்து நமது எண்ணங்களை இலவசமாக எழுதி வெளிப்படுத்தலாம். WordPress அதிகமான அம்சங்களை கொண்டு சிறந்த இலவச ஹோஸ்டிங் தலங்களில் ஒன்றாகும். இதன் முழு அம்சத்தையும் (Premium plan) பெற நினைத்தால் கட்டணம் அவசியம்.

WordPress தளத்தின் நன்மை மற்றும் தீமைகள்: – Pros & Cons of wordpress in Tamil

நன்மைகள்:

* Tags, meta description போன்ற கூடுதல் அம்சங்களுடன் SEO techniques களை சிறப்பாக செயல்படுத்தலாம்.
* இதில் mobile-friendly தீம்ஸ் இருக்கிறது.
* இதில் self hostஆக இருப்பதால் இந்த வலைப்பதிவின் முழு உரிமையாளர் நீங்கள் மட்டுமே. உங்களுக்கு ஏதாவது மாற்றம் வேண்டியதிருந்தால் உங்கள் விருப்பபடி எளிதாக மாற்றங்களை செய்து முடிக்க முடியும்.
* இந்த தளம் PHPயில் கட்டமைக்கப்பட்டுள்ளது இது மற்றவர்களுடன் ஒப்பிடும்போது மிக விரைவாக இருக்கும்.
* Customer support உடன் எப்போது வேண்டுமானாலும் தங்களது பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு காணலாம்.

தீமைகள்:-

* இதில் self host ஆக இருப்பதால் இங்கு எழும் முக்கிய பிரச்சனை பாதுகாப்பு(security)
* WordPress தன்னை அடிக்கடி update செய்து கொண்டே இருக்கும். இந்த அம்சம் நாம் முன்பு பார்த்த blogspot இல் கிடையாது.

3. Wix – விக்ஸ்

free webhosting in tamil

சிறந்த அம்சங்களுடன் சிறந்த இலவச ஹோஸ்டிங் தலங்களின் பட்டியலில் wix நிச்சயமாக இடம்பெறும். இதில் நாம் தேர்வு செய்வதற்கு அதிகமான themes இருக்கின்றன. இங்கு ஒரு பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் back-end அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றது. எனவே front-end மட்டும் நாம் கவனித்துக் கொள்ள வேண்டும்.
இதிலுள்ள drag and drop option நமது வலைப்பதிவை வடிவமைக்க மிகவும் உதவுகிறது. இந்த தளத்தில் அதிகமான டெம்ப்ளேட் மற்றும் தீம்கள் உள்ளன.

Wix இன் சில நன்மைகள் மற்றும் தீமைகள்:- Pros & Cons of WIX Hosting in Tamil

நன்மைகள்:

* இந்த தளம் எளிய interface ஐ கொண்டது எனவே இது user-friendly ஆக இருக்கும்.
* இத்தகைய தளங்களை தொழில் வல்லுநர்கள் கவனிக்கப்படுவதன் மூலம் வலைப்பதிவுகளின் வேகமும் பாதுகாப்பும் மிகச் சிறந்தவையாக இருக்கின்றன.
* வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதின் மூலம் நல்ல ஆதரவை வழங்குகின்றனர்.

தீமைகள்:

* Drag and drop மூலம் வடிவமைப்பு எளிதானது என்றாலும் ஒரு சில நேரங்களில் அது எதிர்பார்த்த முடிவுகளை தராது. வடிவமைப்பின் போது அதிகமான tools இருந்தாலும்கூட coding இங்கே load ஆக நேரம் இருக்கக்கூடும்.
* இந்த தளத்திலிருந்து நம்முடைய data export செய்வதற்கு option இல்லை.

4. Weebly :- வீப்லி

free web hosting providers in tamil

நமது தனிப்பயன் டொமைனை blogging க்கும் மற்றும் ஹோஸ்ட் செய்வதற்கும் இன்னொரு தளம் weebly. ஒருவர் தங்களது விருப்பத்திற்கேற்ப வடிவமைக்க drag and drop செய்து கொள்ளலாம். இது அதிகமான அம்சங்களுடன் கூடிய இலவச சிறந்த ஹோஸ்டிங் தலங்களில் ஒன்றாகும்.

 Weebly இன் சில நன்மைகள் மற்றும் தீமைகள்:- Pros & Cons of weebly Hosting in Tamil

நன்மைகள்:

* ஹேக்கர்ஸ் (hackers) மற்றும் spammers சிடம் இருந்து நமது தளத்தை பாதுகாத்து வைத்திருக்கின்றன.
* மேலும் சிரமம் ஏதும் ஏற்பட்டால் customer support உள்ளது
* இது தொலைபேசி ஆதரவையும் கொண்டுள்ளது.

தீமைகள்:-

* தளத்தின் மீது ஒருவருக்கு முழு கட்டுப்பாடு இல்லாததால் அட்வான்ஸ் கருவிகளை இங்கே சேர்க்க முடியாது.
* இதில் பெரும்பாலான செட்டிங்ஸை (settings) மாற்றி அமைக்க இயலாது.
மேலும் கன்டென்ட் மேனேஜ்மென்ட் இங்கு இல்லை. எனவே அதிக எண்ணிக்கையிலான பக்கங்களை சேர்க்க இயலாது.

5. Medium:- மீடியம்:-

free web hosting providers in tamil

Medium என்ற தளம் அதிகமான பார்வையாளர்களை கொண்டிருப்பதால் இது ஒரு சிறந்த தளங்களில் ஒன்றாகும். கிட்டத்தட்ட 60 மில்லியன் மக்கள் இந்த தளத்தை பார்வையிடுகிறார்கள். மேலும் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. உங்களது திறமை மற்றும் ஆர்வத்தை உலகுக்கு வெளிப்படுத்த நினைத்தால் இது மிகச் சிறந்ததாகும்.

Medium இன் சில நன்மைகள் மற்றும் தீமைகள்:- Pros & Cons of Medium Hosting in Tamil

நன்மைகள்:-

* இத்தகைய தளத்தில் நம் பதிவை பதிவிட்டால் அதன் 60 மில்லியன் பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தலாம்.
* நான் எளிதாக நம் விருப்பப்படி பக்கங்களை சேர்த்துக்கொள்ளலாம்.

தீமைகள்

* முன்னணி தலைமுறைக்கு எந்த இன்பில்ட் அம்சமும் இல்லை.

6. Bravenet:- ப்ரேவநெட்

free webhosting in tamil

அனைத்து அம்சங்களுடனும் சிறந்த இலவச ஹோஸ்டிங் தளங்களில் Bravenet ஒன்றாகும். ஒருவர் தனது தனிப்பயன் களத்தை இங்கே எளிதாக சேர்க்கலாம். இங்கும் drag and drop tool உள்ளது, அது நம் விருப்பத்திற்கு ஏற்ப edit செய்துகொள்ளலாம்.
இதில் email marketing tool உள்ளது. இது contact list உருவாக்கும் பணியை எளிதாக்குகிறது.

Bravenet இன் சில நன்மைகள் மற்றும் தீமைகள்:- Pros & Cons of Bravenet Hosting in Tamil

நன்மைகள்:-

* இதிலுள்ள email marketing tool மூலம் அளவற்ற அஞ்சல்களை அனுப்ப இது நமக்கு பயன்படும்.
* ஆரம்பக்கட்டத்தில் பார்வையாளர்களை வளர்க்கவும் இது உதவுகிறது.
* தளம் வலைப்பதிவை மேம்படுத்த அனைத்து சிறப்பு நல்ல அம்சங்களையும் வழங்குகிறது.

தீமைகள்:-

* ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதை சரி செய்து கொள்வதற்கு கஸ்டமர் சப்போர்ட்(customer support) இல்லை.
* மேலும் இலவச வெப் ஹோஸ்டிங் c panel உடன் வழங்கப்படவில்லை, ஆக வாடிக்கையாளர்களுக்கு அதன் மீது முழு கட்டுப்பாடு இல்லை.

7. X10Hosting :-

அனைத்து அம்சங்களுடன் சிறந்த இலவச வெப் ஹோஸ்டிங் தளங்களில் X10Hosting ஒன்றாகும். PHP, MySQL இன் சமீபத்திய பதிப்புகளை பயன்படுத்துவதன்மூலம் இது நிலையான மற்றும் நல்ல செயல்திறன் கொண்ட சூழலை வழங்குகிறது. இத்தளம் Magneto போன்ற இணையவழி கருவிகளையும் வழங்குகிறது.

X10Hosting இன் சில நன்மைகள் மற்றும் தீமைகள்:- Pros & Cons of X10Hosting Hosting in Tamil

நன்மைகள்:-

* இத்தளம் பயன்படுத்துவதற்கு எளிதானது.
* PHP, MySQL என் லேட்டஸ்ட் வெர்சன் பயன்படுத்துவதன் மூலம் இது ஒரு நல்ல நிலையான செயல்திறனை வழங்குகிறது

தீமைகள்:-

* இத்தளத்திற்கு கஸ்டமர் சப்போர்ட்(customer support) ஏதுமில்லை. எனவே மக்கள் தங்களது கேள்விகளை கூகுளில் சர்ச் செய்துதான் அறிந்து கொள்ள வேண்டும்.

8. Joomla:- ஜூம்லா 

Joomla ஒரு இலவச வெப் ஹோஸ்டிங் தளமாகும். இதில் அதிகமான அம்சங்கள் வேர்ட்பிரஸ் மாதிரி இருக்கும். இதில் ஒருவர் தனது தனிப்பயன் களத்தை எழுதி சேர்க்கலாம். இதில் மைக்ரோசாஃப்ட் வேர்ட் மாதிரி classic editor என்ற ஒன்று ஜூம்லா வில் இருக்கின்றன. அது நமது FONT, கலர், பேக்ரவுண்ட் மாற்றம் செய்வதற்கு உதவுகின்றன.

Joomla இன் சில நன்மைகள் மற்றும் தீமைகள்:- Pros & Cons of Joomla Hosting in Tamil

நன்மைகள்:-

* ஜூம்லா e-commerce கடைகளுக்கு நல்ல தளமாகும் இது e-commerce கருவிகளை ஆதரிக்கிறது.
* அதன் பெரிய சமூக தளத்துடன் ஒருவர் படைப்புகளை உலகுக்கு வெளிப்படுத்துகின்றது

தீமைகள்:-

* வடிவமைப்பின் அடிப்படையில் இது சற்று சிக்கலானது ஆக ஒரு டெவலப்பரை நியமிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

9. Jimdo :-

Jimdo வில் பல அடிப்படை அம்சங்களை கொண்டுள்ளது. இதில் ஒருவர் எளிதாக போஸ்ட் செய்து வலைப்பதிவை தொடங்கலாம். சிறந்த இலவச வெப் ஹோஸ்டிங் தளங்களில் இதுவும் ஒன்று. இது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) ஆல் இயக்கப்படுகின்றது, ஆக ஒரு வலைப்பதிவை அமைப்பது 3 நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆகும். ஆக இது ஒரு மிகச்சிறந்த தளமாகும்.

Jimdo இன் சில நன்மைகள் மற்றும் தீமைகள்:- Pros & Cons of Jimdo Hosting in Tamil:-

நன்மைகள்:-

* இதில் drag and drop option அளிப்பதால் ஒருவர் மிக எளிதாக பயன்படுத்த முடியும். பிளாக்கிங்(blogging) வசதிகளைத் தவிர e-commerce ஐ எளிதில் செய்ய ஒரு e-commerce tool ஐயும் இது வழங்குகிறது.

தீமைகள்:-

இது ஒரு எளிய இன்டர்பேஸ் கொண்டதாக இருந்தாலும் மிகக்குறைந்த டிசைன்களே உள்ளன.

10. Freehostia:-

Freehostia என்பது அனைத்து அம்சங்களுடன் மற்றொரு சிறந்த இலவச வெப் ஹோஸ்டிங் தலமாகும். இத்தளம் வேகமான சேவையை தருகின்றன. இதுவும் e-commerce கருவியை வழங்குகின்றன.

 Freehostia இன் சில நன்மைகள் மற்றும் தீமைகள்:- Pros & Cons of Freehostia Hosting in Tamil:-

தீமைகள்:

கஸ்டமர் சப்போர்ட்(customer support) இங்கு காம்ப்ரமைஸ் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் மின்னஞ்சல் சேவையும் இல்லை.

நன்றி :- சூரியகாந்த் (கட்டுரை ஆசிரியர்)

5 2 votes
Article Rating

Santhosh

நான் ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ப்ளாகர் / டிஜிட்டல் மார்கெட்டராக பணியாற்றி வருகிறேன். fitness பைத்தியம், ஊர் சுற்றும் வாலிபன், பாடகர், குழந்தை பிரியர். மேலும் நிறைய இருக்கிறது ஆனால் சொன்னால் நம்ப மாடீங்க:)))

Related Post

Bluehost ஹோஸ்டிங் எப்படி இருக்கிறது? – வாங்கலாமா? வேண்டாமா?

Bluehost Hosting Full Review (2020) in Tamil | Bluehost Hosting Pros and Cons In Tamil | ப்ளுஹோஸ்ட் விமர்சனம் – முழு விளக்கம் Bluehost Hosting review(2020) in tamil :- இன்று ...

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments