தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் – How to increase breast milk supply in tamil
தாய்ப்பாலின் முக்கியத்துவம் | Importance of breastfeeding in Tamil
தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் குழந்தைக்கும் சிறந்தது. இதனால் குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
பிறந்த குழந்தைக்கு 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். ஆகவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கும் ஆரோக்கியமான உணவு கிடைக்கிறது.
இன்றைய காலகட்டங்களில் பல இளம் தாய்மார்களுக்கு குழந்தைக்கு சரியான அளவுபால் கொடுகின்றோமா, சரியான அளவு பால் சுரகின்றதா என்பதில் பல சந்தேகங்கள் இருகின்றன.
குழந்தை அழுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பசிக்கிறது என்று நினைத்து பால் கொடுக்கும் போது குழந்தை தவிர்க்க வாய்ப்பிருக்கிறது. இதற்கு தாய்ப்பால் சரியாக சுரப்பதில்லை என்று அர்த்தம் இல்லை. இதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
பாலூட்டும் தாய்மார்கள் நன்றாக ஓய்வெடுத்து, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, நன்றாக தூங்கி, சந்தோஷமான மனநிலையில் இருந்தாலே தாய்ப்பால் சரியான அளவில் சுரக்கும். குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பதாலும் தாய்ப்பால் சுரக்கும்.
குறைப்பரசவதில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்பால் சுரப்பது குறைய வாய்ப்பு இருகிறது. குழந்தை சரியாக உறிஞ்சி பால் குடிக்காததால் தாய்ப்பால் குறைவாக சுரக்கலாம்.
இருந்தும் சில உணவு பொருட்கள் சாப்பிடுவதால் தாய்ப்பால் அதிக அளவில் சுரக்க வாய்ப்பிருக்கிறது. How can i naturally increase my milk supply? இந்த கேள்வி நிறைய அம்மாக்கள் மனசுல இருக்கும் இதுக்கான பதில இந்த பதிவில் காணலாம்.
1. பூண்டு
- பூண்டு சாப்பிடுவதால் தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்க உதவுகிறது.
- இதில் anti-biotic, anti-fungal மற்றும் anti-oxidants இருக்கிறது.
- இதயத்திற்கு மற்றும் சிறந்த செரிமானத்திற்கும் உதவுகிறது.
செய்முறை:
- பூண்டை நெயில் வதக்கி சிறிது இந்துப்பு சேர்த்து சாப்பிடலாம்.
- பூண்டு குழம்பு வைத்து சாப்பிடலாம்.
- பசும் பாலில் பூண்டை வேகவைத்து சிறிது நாட்டுசர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.
- அன்றாட உணவில் பூண்டை கலந்து சாப்பிடலாம்.
2. முருங்கைகீரை
- முருங்கைகீரை சாப்பிடுவதால் தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்க உதவுகிறது.
- முருங்கைகீரையில் அதிகபடியான vitamins , magnesium, iron, calcium, phosphorus, and zinc இருக்கிறது.
- இதில் அதிகபடியான Anti-oxidants இருக்கிறது. நோய் எதிர்புசக்தியை அதிகரிக்கிறது.
செய்முறை:
- முருங்கைகீரை மற்றும் முருங்கைக்காய் சூப் செய்து சாப்பிடலாம்.
- முருங்கைகீரை பொறியல் மற்றும் கூட்டு செய்து சாப்பிடலாம்.
- 1 ஸ்பூன் முருங்கைகீரை பொடியை 1 டம்பளர் தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி குடிக்கலாம்.
3. வெந்தியம்
- வெந்தையகீரை சாப்பிடுவதால் தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்க உதவுகிறது.
- வெந்தியம் ஊறவைத்த தண்ணீர் குடித்தாலும் தாய்பால் சுரப்பது அதிகரிக்கும்.
- உடல் சூட்டை குறைகிறது.
செய்முறை:
- இரவில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் அந்த தண்ணீரை குடிக்கலாம்.
- வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.
- வெந்தய குழம்பு செய்து சாப்பிடலாம்.
- முளைகட்டிய வெந்தியம் சாலட் செய்து சாப்பிடலாம்.
4. கற்பூரவள்ளி இலை
- கற்பூரவள்ளி இலை தாய்ப்பால் சுரப்பதை அதிகரிப்பதோடு சளி பிடிப்பதை தவிர்க்கிறது.
செய்முறை:
- கற்பூரவள்ளி இலையை சாப்பிடலாம்.
- கற்பூரவள்ளி இலையுடன் வெற்றிலை துளசி ஒரு பல் பூண்டு சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.
5. பெருஞ்சீரகம்
- பெருஞ்சீரகம் நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஒரு மூலிகையாகும்.
- இது தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கிறது.
செய்முறை:
- ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.
- அன்றாட சமையலில் அளவோடு பயன்படுத்தலாம்.
6. பாதாம் பருப்பு
- பாதாம் பருப்பை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் Nutrients, Minerals, calcium, iron மற்றும் zinc இருக்கிறது.
- இது தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கிறது.
செய்முறை:
- 7 (அ) 8 பாதாமை இரவு தண்ணீரில் ஊறவைத்து பின் காலையில் சாப்பிடுவது மிகவும் நல்லது.
- வீட்டில் பாதாம் பால் செய்து குடிக்கலாம்.
- பாதாம் allergies இருந்தால் தவிர்க்கவும்.
7. நிலக்கடலை
- நிலக்கடலை தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது.
- நிலக்கடலையில் அதிகப்படியான Nutrients, Minerals, Folic acid, Protein, Biotin இருக்கின்றது.
செய்முறை:
- நிலக்கடலை வேகவைத்து சாப்பிடலாம்.
- நிலக்கடலை வறுத்து சாப்பிடலாம்.
- நிலக்கடலை சாலட் செய்து சாப்பிடலாம்.
- கடலை உருண்டை சாப்பிடலாம்.
- நிலக்கடலை allergies இருந்தால் தவிர்க்கவும்.
7. பசும்பால்
- பசும்பால் அதிக அளவு ஊட்டசத்து நிறைந்தது.
- இதில் கால்சியம், vitamin D, vitamin A, vitamin B12, magnesium and zinc இருக்கிறது.
- தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது.
செய்முறை:
- பால் காய்ச்சி நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.
- நெய், தயிர், வெண்ணெய், பன்னீர் உணவில் கலந்து சாப்பிடலாம்.
- பாலில், சிகப்பு அவுல், நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.
9. தண்ணீர், பழச்சாறு (Juice)
- அடிக்கடி தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது.
- வீட்டில் புதிதாக பழச்சாறு(Juice) செய்து சாப்பிடுவது நல்லது.
- பழமாகவும் சாப்பிடலாம்.
- கீரை காய்கறிகள் சமைத்து சாப்பிடுவது நல்லது.
இதையும் படியுங்கள் :- குழந்தை வளர்ச்சி – பிறப்பு முதல் 3 வருடம் வரை (Child Development Birth to 3 years)
Foods to increase breast milk in tamil | தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும் சில குறிப்புகள்
பிறந்தகுழந்தை அதிக நேரம் தூங்கிக்கொண்டு இருக்கும். குழந்தை தூங்குகிறது என்று பாலுட்டுவதை குறைக்க கூடாது. குழந்தையின் காலில் தட்டி எழுப்பி பால் குடிக்க வைக்க வேண்டும்.
பிறந்த குழந்தைக்கு 2 மணிநேரங்களுக்கு ஒரு முறை பால்கொடுக்கலாம். அடிகடி பால் கொடுப்பதால் தாய்ப்பால் சுரக்கும்.
குழந்தைக்கு பால் கொடுத்தவுடன் ஏப்பம் எடுக்கும் வரை முதுகில் தட்டி பிறகு தொட்டிலில் போடுவது சிறந்தது.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது ஒருமுறை இடதுபக்கமும் மறுமுறை வலது பக்கமும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனால் பால் கட்டிக் கொள்ளாமல் தவிர்க்கலாம்.
குழந்தைக்கு பாலுட்டுவதற்கு முன்னால் மார்பகங்களை வெந்நீரில் நனைத்த துணியை வைத்து துடைத்து விட்டு கொடுக்கலாம்.
மருத்துவரிடம் கேட்காமல் பாலுட்டும்போது வேறு மாத்திரைகள் எடுத்துக்கொள்வது நல்லது அல்ல.
டீ, காபி அதிகளவில் குடிப்பதை தவிர்க்கவும். எண்ணையில் பொறித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
தாய் நிம்மதியான மனநிலையில் இருப்பது குழைந்தைக்கு மிகவும் சிறந்தது. Melody Music கேட்பது, Meditation செய்வது, நன்றாக தூங்குவது, ஓய்வு எடுப்பது, குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது நிம்மதியான மனநிலையை தரும்.