YouTube இல் இருந்து எப்படி பணம் சம்பாதிப்பது?

By Santhosh

Updated on:

earn money youtube tamil

YouTube இல் இருந்து எப்படி பணம் சம்பாதிப்பது?  | How to earn money from YouTube in Tamil?

குறிப்புச்சட்டகம் மறை
1 YouTube இல் இருந்து எப்படி பணம் சம்பாதிப்பது? | How to earn money from YouTube in Tamil?

Earn Money from Youtube Channel (2020) :- YouTube இல் இருந்து எப்படி பணம் சம்பாதிப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு YouTube பற்றின சில சுவாரஸ்யமானவற்றை அறிந்து கொள்க.

உங்களுக்கு தெரியுமா?

  • சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 300 மணி நேரம் வீடியோ யூடியூப்பில் அப்லோடு செய்யப்படுகின்றன.
  •  யூடியூப் பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளன, மற்றும் ஒவ்வொரு நாளும் அந்த பயனர்கள் ஒரு பில்லியன் மணிநேரம் வீடியோவை பார்க்கின்றார்கள்.
  •  யூடியூப் இரண்டாவது மிகப் பிரபலமான தளமாக Alexa ranking இன்டர்நெட்டால் மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 10 பேரில் 6 பேர் பேர் யூடியூப் மற்றும் இதர ஆன்லைன் வீடியோ பிளாட்பார்ம்களை தங்களது நேரடி டிவிக்கு கொண்டுவர விருப்பப்படுகின்றனர்.
  • மேலும் Google க்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய search engine என்ற பெருமையை யூடியூப் தட்டிச்சென்றது மற்றும் இன்டர்நெட்டில் அதிகமாக பார்வையிடப்பட்ட தளத்தில் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது.

YouTube இல் எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்? | How much money can you make from YouTube in Tamil

PewDiePie என்ற யூடியூப் சேனல் 2013 ஆம் வருடம் மட்டும் வருடம் மட்டும் கிட்டத்தட்ட நான்கு மில்லியன் US டாலர் வருமானத்தை ஈட்டியுள்ளன என புகழ்பெற்ற செய்தித்தாள் Wall Street Journal  அறிக்கையிட்டுள்ளன.

Charlie Bit My Finger  என்ற 55 வினாடி வீடியோ மாதத்திற்கு ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் சம்பாதிக்கிறது. பிரபல தமிழ் யூடியூபர்களான Madan Gowri, Micset, Tamil Tech, Rishipedia போன்றவர்கள் மாதத்திற்கு லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.

தமிழ் மக்களே!!  சிந்தித்துப் பாருங்கள். நீங்களும் YouTube channel  தொடங்கி பணம் சம்பாதியுங்கள்.

YouTube இல் இருந்து எப்படி பணம் சம்பாதிப்பது? | How to earn money from YouTube

1. யூடியூப் சேனல் தொடங்குங்கள்
2. வீடியோ கிரியேட் செய்யுங்கள்
3. வீடியோ அப்லோட் செய்யுங்கள்
4. YouTube partnership க்கு விண்ணப்பியுங்கள்
5. உங்களது வீடியோக்களை பிரமோட் செய்யுங்கள்
6. உங்களது வீடியோக்களில் இருந்து பணம் சம்பாதியுங்கள்

யூடியூப் சேனல் தொடங்குவது மிக எளிமை. நீங்கள் செய்ய வேண்டியது:

  • யூடியூபிற்கு சென்று உங்களது Gmail அக்கவுண்ட் வைத்து sign up செய்து கொள்ளவும்.
  • பின்பு யூடியூப் லோகோவின் அருகில் இடது மூலையில் உள்ள bar ஐ கிளிக் செய்ய வேண்டும்.
  • தற்போது My Channel  கிளிக் செய்ய வேண்டும்.

  • உங்கள் பெயர் மற்றும் தலைப்பை ஹைலைட் செய்து ஒரு பாக்ஸ் தோன்றும். அதை கிளிக் செய்து கொள்ளவும்.
  • பின்பு customize channel கிளிக் செய்யவும்.
  • இங்கு உங்களுடைய சேனல் ART மற்றும் PROFILE PIC தேர்வு செய்து கொள்ளலாம்.

  • இங்கு நீங்கள் உங்கள் சேனலை பற்றியும், உங்கள் வலைதள URL, SOCIAL MEDIA ACCOUNT URL ஆகியவை உள்ளிடலாம்.

  • அடுத்து PLAYLIST உருவாக்கலாம். மற்ற சேனல்கள் கொடுக்கலாம்.
  • அவ்வளவு தான் அடுத்தது வீடியோ கிரியேட் செய்யவும்.

உங்களது யூடியூப் சேனலில் வீடியோவை அப்லோட் செய்யுங்கள்.

யூடியுபில் வீடியோ எப்படி அப்லோட்/பதிவேற்றம் செய்வது | How to upload videos on youtube in tamil

  • இது மிக எளிது யூடியூபில் லாகின் செய்து பக்கத்தின் மேல் வலது மூலையில் இருக்கும் அப்லோட் பட்டனைக் கிளிக் செய்தால் நேரடியாக அப்லோட் பேஜ் க்கு உங்களை அழைத்துச் செல்லும்.

earn money youtube tamil

earn money youtube tamil earn money youtube tamil earn money youtube tamil

earn money youtube tamil

earn money youtube tamil

வீடியோ அப்லோட் செய்வதற்கு முன் privacy level செட் செய்துகொள்ளுங்கள்.

நீங்கள் தேர்ந்தெடுப்பதாவது:

  • Public – யார் வேண்டுமானாலும் உங்களது வீடியோவை பார்த்துக் கொள்ளலாம்.
  • Unlisted – உங்களது வீடியோவிற்கான link ஐ கொண்டவர்கள் மட்டுமே வீடியோவை பார்க்க முடியும்.
  • Private – இவற்றில் நீங்கள் மற்றும்  நீங்கள் தேர்ந்தெடுத்த பார்வையாளர்கள் உங்களது வீடியோவை பார்க்க முடியும்.
  • Scheduled – நீங்கள் நிர்ணயித்த குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே பார்க்க முடியும்.

Privacy level தேர்ந்தெடுத்த பின்பு மீண்டும் ஆரோ பட்டனை கிளிக் செய்து உங்களது வீடியோவை அப்லோட் செய்து கொள்ளுங்கள் அல்லது drag and drop செய்துகொள்ளலாம்.

ஒரு beginner க்கு எளிமையாக மற்றும் மலிவான வழியில் வீடியோ பதிவேற்றம் செய்வதற்கு அவர்களது smartphone  அல்லது PC Webcam போன்றது சிறந்ததாகும். சில நாட்களுக்குப் பின் நீங்கள் ஒரு நல்ல webcam இல் முதலீடு செய்ய வேண்டியதிருக்கும்.

அதுமட்டுமல்லாமல் tripod, microphone, screen recorder, வீடியோ மற்றும் ஆடியோ எடிட்டிங் டூல்ஸ் போன்றவற்றை வாங்க வேண்டியதிருக்கும் .

YouTube Partnership Program க்கு விண்ணப்பியுங்கள்

YouTube Partnership Program வீடியோ கிரியேட் செய்து அப்லோட் செய்பவர்களுக்கு பணம் சம்பாதிக்க உதவுகிறது. இது வழக்கமாக பார்வையாளர்கள்  காணப்படும் விளம்பரங்கள் மூலமாகவும் மற்றும் வீடியோவை பார்க்கும் யூடியூப்  பிரீமியம் சப்ஸ்கிரிபர் மூலமாகவும் பணம் சம்பாதிக்க இயலும்.

Creator Studio வில் உங்களது  personal  அக்கவுண்டில் இருந்து நேரடியாக யூடியூப் பார்ட்னர் ப்ரோக்ராமிற்க்கு விண்ணப்பிக்கலாம். யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் சேர்வதற்கான தகுதி தேவைகளை ஜனவரி 16, 2018 ஆம் ஆண்டில் Google அறிவித்தது.

முந்தைய 12 மாதங்களில் ஒரு சேனல் 4000 கண்காணிப்பு நேரங்களை அடைந்ததும் மற்றும் குறைந்த பட்சம் 1000 subscriberகளை கொண்டதும் இத்திட்டத்தில் சேர அனுமதி அளிக்கப்படுகிறது.

  • கண்காணிப்பு நேரம் கடந்த 12 மாதங்களில் குறைந்தது 4000 மணிநேரம் இருக்க வேண்டும்.
  • AdSense கணக்கு வைத்திருந்து அதனை லிங்க் செய்திருக்க வேண்டும்.
  • YouTube partner திட்டம் eligible உள்ள நாட்டில்  வாழ வேண்டும்.
  • சப்ச்க்ரைபர்களை தொடர்ந்து maintain செய்ய வேண்டும் மற்றும் அதிக வீழ்ச்சி விகிதங்களுடன் watch hours காண வேண்டும்.

How to apply for the YouTube Partnership Program in Tamil | யூடியூப் பார்ட்னர் ப்ரோக்ராம் எப்படி விண்ணப்பிப்பது?

இதில் இரண்டு சாத்தியமான காட்சிகள் உள்ளன.

1. முதலில் ஏற்கனவே யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் இருந்த சேனல்களை இந்த சந்தர்ப்பத்தில் புதிய விதிமுறைகளின் கீழ் தகுதி பெறும்போது சேனல்கள் தானாக மறு மதிப்பீடு செய்யப்படும்.

2. அடுத்தது சேனல் உரிமையாளர்கள் தங்களது பணமாக்குதல்(Monetization) நிலையை கிரியேடர் ஸ்டுடியோ/சேனல்/Monetization இல் சரி பார்த்துக் கொள்ளலாம்.

அதில் கிரியேடர் ஸ்டுடியோ அக்கவுண்டில் குறிப்பிட்டுள்ள 4 ஸ்டெப் புரிந்து கொள்ள வேண்டும். சேனல் தகுதிக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்தவுடன் சேனல் மதிப்பாய்வு செய்யப்படும்.

உங்களது YouTube வீடியோவை பிரமோட் செய்யுங்கள் |  Promote your YouTube Videos

முதலில் உங்களது  வீடியோ லேட்டஸ்ட் SEO parameters கொண்டு அப்டேட் செய்து இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்துங்கள். உங்கள் landing  பக்கத்திற்கு வீடியோவை அப்லோட் செய்வதற்கு முன் உங்கள் meta description மற்றும் போதுமான சொற்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்க.

அடுத்ததாக பார்வையாளர்களை கவர்வதற்கு உங்கள் சமூக ஊடக தளங்களில் பகிருங்கள். அதிக reach கிடைப்பதற்கு hashtag, paid for pre-roll ads (available on YouTube) போன்ற டூல்களை பயன்படுத்தி போஸ்ட் செய்யுங்கள்.

Start earning money from YouTube in Tamil? | யூடியுபில் எப்படி சம்பாதிப்பது

பல வெற்றி கதைகள் இருந்தாலும்  யூடியூபில்  பணம் ஆக்குதல் பற்றிய குழப்பங்கள் மற்றும் சந்தேகங்கள் மக்களிடம் அதிகமாகவே இருக்கின்றன.

யூடியூபர்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்கள்?  மற்றும்  ஒரு பார்வைக்கு யூட்யூப் எவ்வளவு பணம் செலுத்துகிறது? போன்ற இரண்டுக்கும் மக்களிடையே அதிக குழப்பங்கள் இருக்கின்றன.

எந்த ஒரு தொழிலிலும் அதன் வருவாய் திறன் குறித்து உங்களுக்கு சரியான துப்பு இல்லை என்றால் அதில் நுழைவதில் அர்த்தமே இல்லை.

YPP  மூலம் ஒரு மில்லியன் பார்வைகளை தொட்டால் யூடியூப் உங்களுக்கு எவ்வளவு பணம் செலுத்தும் என்பதை மதிப்பிட மட்டுமே நம்மால் முயற்சி செய்ய முடியும். வேறு எந்த கணக்கையும் நம்மால் கணக்கிட முடியாது.

சில மதிப்பீடுகளின்படி ஒரு Pro – YouTuber 1000 பார்வையாளர்களுக்கு சராசரியாக 3 – 10 US  டாலர் வரை பணம் சம்பாதிக்க முடியும். அவை – CPC மற்றும் CPI விளம்பரங்களுடன்.

யூடியூபில் இருந்து பணம் சம்பாதிப்பதற்கு மிக எளிமையான மற்றும் பிரபலமான வழி என்னவென்றால் monetization enable செய்து உங்களது YouTube channel மற்றும் Google Adsense அக்கௌன்ட் ஐ லிங்க் செய்து கொள்ளவும்.

அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வீடியோக்கள் உருவாக்கும் விளம்பர வருவாயில் 55% வரை சம்பாதிக்கலாம். மேலும் யூடியூப் 45% வைத்துக்கொள்ளும்.

எனவே சராசரியாக அமெரிக்க மற்றும் இங்கிலாந்த் போன்ற வெளிநாடுகளில் இருந்து உங்கள் வீடியோ பார்த்து விளம்பரம் கிளிக் வந்தால் உங்கள் வீடியோவின் 1000 பார்வையாளர்களுக்கு 2 முதல் 6 டாலர் கிடைக்கலாம்.

அதேபோன்று இந்தியா மற்றும் சில ஆசிய நாடுகளில் இருந்து மக்கள் உங்கள் வீடியோவை பார்த்து விளம்பரம் கிளிக் செய்தால் உங்களுக்கு $0.01 , $0.05 என்று கிடைக்கும். இவை அதிக பணம் தரும் விளம்பரம் பொருது மாறுபடும்.

யூடியுபில் வருமானத்தை ஒருபோதும் கணிக்க முடியாது சில நேரம் கூடும் குறையும். எடுத்துகாட்டாக என்னுடைய சில வீடியோக்களில், குறைந்த பார்வையாளர்கள் பார்த்த விடாக்களில் டாலர் சற்று அதிகமாகவும், அதிக பார்வையாளர்கள் பார்த்த வீடியோக்களில் மிக கம்மியான டாலர்களும் கிடைத்திருக்கிறது.

earning potential on youtube in tamil earning potential on youtube in tamil earning potential on youtube in tamil

உங்களது வீடியோவின் Content quality, Keywords, Title, Advertisement, Trending, VIDEO Watch time, CPC, Marketing என மேலும் சில திறன்கள் போன்றவற்றைப் பொறுத்தே நீங்கள் பணம் சம்பாதிக்க இயலும்.

வைரல் வீடியோக்கல் கிரியேட் செய்வதற்கான டிப்ஸ்

உங்களது யூடியூப் வீடியோ வைரலாகும் என்று உத்தரவாதம் அளிக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. இங்கு வெற்றிபெறுவதற்கான பார்முலா ஒன்றுமில்லை.
ஆனால் நீங்கள் இப்பதிவில் உள்ள வைரல் வீடியோ கிரியேட் செய்வதற்கான டிப்ஸ்களை பின்பற்றினால் முடியும்.

  • Mindless அல்லது தவறான promotion களில் ஈடுபட வேண்டாம்.
  • கதை சொல்ல முயற்சி செய்யுங்கள்.
  • பார்வையாளர்களின் உணர்ச்சிகளை தூண்டுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
  • மக்கள் எதிர்பாராததை செய்யுங்கள்.
  • Trending Topic பற்றி வீடியோ போடுங்கள்.
  • செய்தி சேனல் ஆரம்பிக்கலாம்.

Title, tags  மற்றும் description எழுதுவதற்கான டிப்ஸ்

தலைப்பு மிக கவர்ச்சியாக மற்றும் பார்வையாளர்கள் தேடுதலுக்கு பொருத்தமாக இருக்க வேண்டும். Search result  பக்கத்தில் ரேங்கிங் அடிப்படையில் இது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

Google search result  இல் உங்களது வீடியோ ரேங்க் ஆக வேண்டுமென்றால்  Keyword research, Tags  மற்றும் Description மிக முக்கியம்.

 

YouTube இல் இருந்து பணம் சம்பாதிக்க வேறு வழிகள் | Other Ways to Earn Money from YouTube in Tamil

நீங்கள் விளம்பரம் மூலம் சம்பாதிப்பது உடன் இவற்றையும் சேர்த்து செய்தால் மேலும் அதிக பணம் சம்பாதிக்கலாம்.

1. Affiliate marketing

பெரிய மார்க்கெட் ஏஜென்சிகள் அதிக சப்ஸ்கிரிபர் உள்ள யூடியூப் சேனல்களுக்கு பணத்தை செலுத்த தயாராக உள்ளனர். அவற்றின் தயாரிப்புகளின் link ஐ உங்களது வீடியோ description இல் இணைப்பதன் மூலம் இதை செய்யலாம்.
யூடியூபில் இருந்து பணம் சம்பாதிப்பதற்கு அப்ளியேட் மார்க்கெட்டிங் மிக எளிய மற்றும் சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

2. Direct promotion

இவற்றில் உங்கள் சேனல் உடன் விளம்பர நிறுவனங்கள் உங்களுக்கு நிலையான கட்டணத்தை வழங்கி பார்ட்னர்ஷிப் வைத்துக்கொள்வார்கள். அவற்றின் தயாரிப்புகளை உங்களது வீடியோவில் காண்பிக்க வேண்டும். அவர்களுடைய தயாரிப்பு பொருளை காண்பிப்பதன் மூலம் உங்களுக்கு அவர்கள் நிலையான தொகையை வழங்குகிறார்கள்.

3. Paid videos

நீங்கள் அப்லோட் செய்யும் வீடியோவை பார்வையாளர்களுக்கு விற்கலாம். ஆனால் இதில் முக்கியமானது என்னவென்றால் உங்களது வீடியோவின் தனித்துவம் மற்றும் குவாலிட்டி மிக முக்கியம். இல்லையென்றால் வாடிக்கையாளர்கள் விலைகொடுத்து பார்க்க மாட்டார்கள்.

4. Licensing content

உங்கள் வீடியோ வைரல் ஆகி விட்டதா? அதன்மூலம் உங்கள் கண்டென்ட்களை பிற நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதன் மூலம் நீங்கள் சம்பாதிக்கலாம்.

5. Crowdsourcing

அதிகமான Wikipedia போன்ற non-profit வலைத்தளங்கள் உள்ளன. இத்தளங்கள் இலவசமாக தகவல்களை பகிர்ந்து கொள்கின்றன. ஆனால் தளங்களை இயங்குவதற்கு பணம் தேவை. இது நன்கொடைகள் மூலம் பார்வையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இதை போல் நீங்களும் இந்த ஐடியா பயன்படுத்தி சம்பாதிக்கலாம்.

இறுதியாக, ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் மற்ற தொழில் போல் இதில் முதல் நாளில் இருந்தே பணம் சம்பாதிக்க முடியாது. உங்களுக்கு முதல் PAYMENT வருவதற்கு 6 மாதம் ஆகலாம். பணம் சம்பாதிக்க பொறுமை மிகவும் முக்கியம்.

ஆக இப்பதிவில் யூடியூப் சேனல் எப்படி தொடங்கி எப்படி பணம் சம்பாதிப்பது என்பது  பற்றி பார்த்தீர்கள். மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள comment section இல் கேள்விகளை கேட்கவும்.

இதையும் படியுங்கள் :-

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான 7 வழிகள்

How to create a blog in Tamil | ப்ளாக் எப்படி தொடங்குவது?

நன்றி :- சூரியகாந்த் (போஸ்ட் ஆசிரியர்)

3.3 3 votes
Article Rating

Santhosh

நான் ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ப்ளாகர் / டிஜிட்டல் மார்கெட்டராக பணியாற்றி வருகிறேன். fitness பைத்தியம், ஊர் சுற்றும் வாலிபன், பாடகர், குழந்தை பிரியர். மேலும் நிறைய இருக்கிறது ஆனால் சொன்னால் நம்ப மாடீங்க:)))

Related Post

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments