அனைவருக்கும் தெரிந்த ஒரு விளக்கம் யாதெனில் பெண்களுடைய மாதவிடாய் காலம் நீண்டு செல்லும் போது கர்பமாக இருப்பதை (pregnancy symptoms in Tamil) அப்பட்டமாக வெளிப்படுத்தலாம் என்பதாகும் .
சில சந்தர்ப்பங்களில் இவைகளை உண்மையாக இருப்பினும் திட்ட வட்டமாக குறிப்பிட முடியாது.
கர்ப்பம் தரித்திருப்பதை எவ்வாறு அறிந்துகொள்வது? | Symptoms of pregnancy in Tamil)
1. உடல் பலவீனம் தன்மை ஏற்படும்: Early pregnancy symptoms in Tamil

கர்ப்பம் தரித்த ஒரு பெண் இன்னொரு உயிரை தன்னுடைய வயிற்றில் சுமக்க தயாராகிறாள் என்பதே ஆரம்ப அறிகுறியாகும்.
அதாவது ஒரு பெண் தன்னுடைய கருவை தன் வயிற்றில் சுமக்கும் போது அவளை அறியாமலே அவள் அதிக அளவுக்கு பலவீனம் அடைகிறாள் என்றே சொல்லலாம். முன்னைய காலங்களில் இருப்பதைவிட இக் காலங்களில் அதிக அளவிலான சோர்வையும் பலம் இல்லமையையும் தெளிவாக நாம் காணலாம்.
இவ்வாறு தொடர்ச்சியாக காணப்படும் பொழுது அந்தப் பெண் கர்ப்பம் தரிக்க கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக காணப்படுகின்றன.
2. குமட்டல் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்
கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு இது தொடர்ச்சியாக வருவது ஒரு அறிகுறியாகும். இது ஆரம்ப அறிகுறிகளாகவும் சில நேரங்களில் காணப்படலாம்.
ஒரு பெண்ணுக்கு தொடர்ச்சியாக குமட்டல் வாந்தி தலைசுற்றல் மற்றும் பசியின்மை, தூக்கமின்மை போன்ற சில உணர்வுகளும் இந்த கருவுற்றல் தன்மை காரணமாக ஏற்படலாம். இவையாவும் கருவுற்றிருப்பது சம்பந்தமான சில அடையாளங்கள் ஆகும்.
3. உணர்ச்சி திறன் அதிகரிப்பு
கருவுற்ற பெண்ணுக்கு இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதிகளவான வாசனையினை உணரக்கூடியதாகவும் நுகர கூடிய தாகவும் இருக்கும்.
அதாவது பூக்களின் உடைய வாசனையோ அல்லது சமையல் பொருட்கள் உடைய வாசனையோ அல்லது உணவுப் பொருட்களின் வாசனையோ எல்லை அற்ற விதத்தில் நுகர கூடிய அளவுக்கு காணப்படும்.
இதனை முன்னைய காலங்களில் ஒப்பிடும்போது சற்று பல மடங்கு அதிகமாகவே காணப்படும். இவற்றை ஆரம்ப கால அறிகுறிகளாக நாம் கருதலாம்.
4. மாதவிடாய் காலங்களின் சுழற்சி தன்மை மாறுபட்டு காணப்படும்

பொதுவாக இது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மையாகும். ஒரு பெண்ணுடைய மாதவிடாய் காலம் வராத பொழுது அல்லது தொடர்ச்சியான நீடிக்கும்போது அந்த பெண் கர்ப்பமுற்று இருப்பதை நீங்கள் தெளிவாக இனங்காண முடியும்.
ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தன்னுடைய 14 தொடக்கம் 17 வரை உள்ள காலப்பகுதிகளில் கருமுட்டை வளர்வது கூடிய அதிகப்படியான சாத்தியங்களை கொண்டு காணப்படும். இந்த நேரங்களில் உடலுறவு கொள்ளும் போது குழந்தைகள் பிறக்க அதிக சாத்தியப்பாடுகள் காணப்படு கின்றன.
5. சிறுநீர் கழிப்பதற்கான உணர்வு அடிக்கடி ஏற்படுதல்
ஒரு கருவுற்ற பெண் தன் முன்னேய சிறுநீர் கழிக்கும் வீதத்தை விட அதிகமாகவும் அதிக தடவையும் எத்தனிப்பது ஆரம்பகால அறிகுறியாக குறிப்பிடலாம் அதாவது இரவு நேரங்களிலும் அல்லது பகல் நேரங்களிலும் எண்ணற்ற மற்றும் முன்னைய காலங்களை விட அதிக அளவில் சிறுநீர் வெளியாகும் போது அந்த பெண் கருவுற்று இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
6. பசியின்மைத் தன்மை ஏற்படல் | Karpam Symptoms in Tamil
கருவுற்றலின் ஆரம்ப அறிகுறிகளில் இதுவும் மிகப்பெரிய அறிகுறியாக காணப்படுகிறது. அதாவது தன்னுடைய சாதாரண பசிக்கு சாப்பிடும் பெண் கூட தன்னுடைய பசியை மறந்து மிகவும் சோர்வாக இருப்பதை நாம் காணலாம்.
அதாவது பசியயையும் தாகமும் குறைவடைந்து பசியற்ற தண்மைக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அந்த பெண் கருவுற்று இருப்பதை நாம் இலகுவாக இனங் காணலாம்.
7. வயிற்றில் சிறு வலிகளை உணர்தல்

ஒரு பெண் கருவுற்றிருக்கும் ஆரம்ப காலங்களில் அந்த பெண்ணுடைய ஹோர் மோன் செயன்முறை காரணமாக வயிற்று பகுதிகளில் கரு தரிப்பதற் குறிய ஆரம்ப செயன்முறைகள் இடம் பெறுகின்றன.இதனால் இவ் நிகழ்வுகள் இடம் பெறும் பொழுது வயிற்று பகுதிகளில் வலி ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.
8. அதிகரித்த தலைவலி பிரச்சினை
இவை பொதுவாக அனைத்து பெண்களுக்கும் ஏற்படுவதில்லை குறிப்பாக ஒரு சில பெண்களுக்கு மாத்திரம் தான் இடம் பெருகின்றது.அதிகரித்த தலைவலி அல்லது தொடர்ச்சியான தலை வலி போன்றன சில நேரங்களில் கர்ப்ப கால அறிகுறிகலாக இருக்கலாம்.
9. இடுப்பின் பின் பகுதியில் வலி ஏற்படும்

கருவுற்ற பெண்களுக்கு ஹோர்மோன் செயல் முறை காரணமாக அதிகளவான வலி இடுப்புக்கு பின் புறத்தில் ஏற்படுவதை உணரலாம் இது கர்ப்ப காலத்தின் ஆரம்ப அறிகுறிகளாக காணப்படக்கூடிய ஒரு உணர்வாகும்.
10. மார்பகங்களில் தீடீர் பெருப்பம் அல்லது வலி ஏற்படல்
கருவுற்ற பெண்களுக்கு கருவுற்ற சில நாட்களிலேயே மார்பகங்கள் வளர்ச்சி அடைவது உண்டு அதோடு சேர்த்து மார்பகங்களில் வலிகளும் இடம் பெறுவது உண்டு இவ்வாறான சந்தர்ப்பங்களில் அந்த பெண் கருவுற்று இருக்கிறாள் என்பதை இலகுவாக இணங்கண்டு கொள்ளலாம்.
11. இரத்தப்போக்கு ஏற்படும்

இது மாதவிடாய் போல் அல்லாமல் வித்தியாசமான முறையில் இரத்தப்போக்கு ஏற்படும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இதனை நாங்கள் கர்ப்ப காலத்தின் ஆரம்ப அறிகுறிகளாகக் கொள்ளலாம்.
12. உடல் வெப்பநிலை அதிகரித்து காணப்படும்
இவ்வாறான சந்தர்ப்பங்களில் உடல் வெப்பநிலை சாதாரண நிலையிலும் பார்க்க அதிகரித்து காணப்படும் மேலும் சோர்வு ,பலம் பற்ற தன்மை அடிக்கடி ஏற்படுவதை நாம் இனம் காணலாம்.