Blogger-ஐ Google Analytics மற்றும் Google Search Console உடன் இணைப்பது எப்படி ?

How to Connect Your blog with Google Analytics and Google Search Console in Tamil | உங்கள் Blogger-ஐ Google Analytics உடன் இணைப்பது எப்படி?

உங்கள் Blogger-ஐ Google Analytics உடன் இணைப்பது எப்படி ?

How to Connect Your blog with Google Analytics and Google Search Console in Tamil:- Google Analytics என்பது நம்முடைய Website-க்கு தினமும் எவ்வளவு பார்வையாளர்கள் வருகிறார்கள் பார்த்து கொள்ள முடியும் .

நீங்கள் முதலில் Google Analytics Website-க்கு செல்ல வேண்டும் . பிறகு உங்கள் G-mail ID வைத்து sign in செய்ய வேண்டும் .

Start என்பதை கிளிக் செய்ய வேண்டும் .

My new account name என்ற இடத்தில் உங்கள் Website பெயரை டைப் செய்ய வேண்டும் .

பிறகு Web என்பதை கிளிக் செய்து next என்பதை கிளிக் செய்யவும் .

முதல் கட்டத்தில் உங்கள் Website Name-ஐ டைப் செய்யவும் .இரண்டாவது கட்டத்தில் உங்கள் Website URL-ஐ டைப் செய்யவும். பிறகு உங்களுடைய Category-ஐ தேர்ந் தெடுக்கவும். அதன் பின் உங்களுடைய நாட்டை தேர்வு செய்யவும். Create என்பதை கிளிக் செய்ய வேண்டும் .

முதலில் உங்கள் நாட்டை தேர்வு செய்யவும். பிறகு இரண்டு டிக் பாக்ஸ் இருக்கும் அதனை கிளிக் செய்ய வேண்டும். பின்பு I Accept என்பதை கிளிக் செய்ய வேண்டும் .

உங்கள் Tracking ID -ஐ copy செய்ய வேண்டும் .

பிறகு உங்கள் Blogger க்கு சென்று அதில் settings என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் Google Analytics Property ID என்பதை கிளிக் செய்ய வேணும்.

அதில் நீங்கள் copy செய்த Analytics ID Paste செய்ய வேண்டும். Save என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

மீண்டும் Google Analytics Website-க்கு செல்ல வேண்டும். அதில் website Tracking என்று இருக்கும். அதன் கீழ் ஒரு JAVA Script இருக்கும் அதனை copy செய்ய வேண்டும்.

மீண்டும் உங்கள் Blogger -க்கு சென்று Theme என்பதை கிளிக் செய்ய வேண்டும். My Theme என்ற இடத்தில் 3 டாட் இருக்கும், அதனை கிளிக் செய்ய வேண்டும்.

அதில்  Edit HTML என்பதை கிளிக் செய்ய வேண்டும் .

அதில் <head> என்று இருக்கும் . அதற்க்கு கீழ் Copy செய்த Code -ஐ Paste செய்யவும் .பிறகு Save பண்ணி கொள்ள வேண்டும் .

இது அனைத்தையும் செய்து முடித்தால் உங்கள் Blogger Website Google Analytics Connect ஆகி விடும் .

உங்கள் Blogger-ஐ Google Search Console உடன் இணைப்பது எப்படி? | Connect Google Search Console with Blogger in Tamil

Google Search Console என்பது நம்முடைய website-ஐ Google -ல் Index செய்ய வைப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது .

முதலில் Google Search Console Website-ற்க்கு செல்ல வேண்டும் . பிறகு அதில் G-mail வைத்து Log in செய்ய வேண்டும் .

நீங்கள் உங்கள் Blogger -ல் ஏற்கனவே Domain add பன்னிருந்தால் முதலில் உள்ள Domain என்ற கட்டத்தில் உங்களுடைய Website பெயரை டைப் செய்ய வேண்டும். Example : suzeela.com

நீங்கள் Domain add செய்ய வில்லை என்றால் உங்களுடைய subdomain இரண்டாவது கட்டத்தில் முழுமையாக டைப் செய்ய வேண்டும்.  example : https://tamiltechify.blogspot.com/

அதன் பின் Continue என்பதை கிளிக் செய்ய வேண்டும் .

பிறகு Go to Property என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Google Analytics and Google Search Console Tamil

இடது பக்கத்தில் Sitemaps என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு add new sitemap என்ற இடத்திற்கு கீழ் sitemap.xml என்று டைப் செய்து submit என்பதை கிளிக் செய்ய வேண்டும். அவ்வளவு தான் உங்கள் வேலை முடிந்து விட்டது .

இதில் உள்ள முக்கியமான setting பார்போம் .

Google Analytics and Google Search Console Tamil

Overview  என்பதை கிளிக் செய்தால் உங்கள் website -ன் முழு Report பார்த்து கொள்ள முடியும்.

Google Analytics and Google Search Console Tamil

Perfomance என்பதை கிளிக் செய்தால் Total clicks என்பதில் உங்கள் website-ஐ எத்தனை நபர்கள் கிளிக் செய்து பார்க்கிறார்கள் என்பது தெரியும். Total Impression என்பதில் உங்கள் website எத்தனை மக்களுக்கு show ஆகிருக்கு என்பதை கட்டும் . உங்களுடைய website -ன் Average CTR-ஐ  தெரிந்து கொள்ள முடியும்.

URL inspection என்பதை பயன்படுத்தி உங்கள் website-ன் அனைத்து post-களும் Google-ல் Index ஆகி இருக்கா இல்லையா பார்த்து கொள்ள முடியும். அப்படி Google-ல் Index ஆக வில்லை என்றால், இதனை பயன்படுத்தி நீங்களே Google-ல் Index செய்ய வைத்து கொள்ள முடியும் .

Google Analytics and Google Search Console Tamil

Coverage என்பதை கிளிக் செய்தால் உங்கள் website-ல் ஏதேனும் Error இருந்தால் இதில் காட்டும். அதனை பார்த்து நீங்கள் அதனை சரி செய்து கொள்ள முடியும்.

முக்கியமான அனைத்தையும் நாம் பார்த்து விட்டோம். இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

இலவசமாக பிளாகரில் வலைத்தளத்தை உருவாக்குவது எப்படி?

நன்றி :- பாஸ்கர் (ஆசிரியர்)

4.6 8 votes
Article Rating
சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
அதிக வாக்குகள் பெற்றவை
புதிய பழைய
Inline Feedbacks
View all comments