Bluehost ஹோஸ்டிங் எப்படி இருக்கிறது? – வாங்கலாமா? வேண்டாமா?

Bluehost Hosting Full Review (2020) in Tamil | Bluehost Hosting Pros and Cons In Tamil | ப்ளுஹோஸ்ட் விமர்சனம் – முழு விளக்கம்

குறிப்புச்சட்டகம் மறை
1 Bluehost Hosting Full Review (2020) in Tamil | Bluehost Hosting Pros and Cons In Tamil | ப்ளுஹோஸ்ட் விமர்சனம் – முழு விளக்கம்

Bluehost Hosting review(2020) in tamil :- இன்று நான் உங்களுக்கு ப்ளுஹோஸ்ட் பற்றிய நன்மைகள் தீமைகள் பற்றி முழுதாக ஆராய்ந்து கூற போகிறேன். எனவே நீங்கள் புதிய ப்ளாகராக இருந்தால் இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த bluehost ன் அனைத்து திட்டங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 24/7 நேரடி Chat வசதி வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல் Unlimited Bandwidth மற்றும் 5 email accounts வழங்குகின்றன. பல வலைத்தள ஹோஸ்டிங் நிறுவனங்களைப் போலவே இவர்களும் தங்கள் புதிய பயனர்களுக்கு முதல் ஆண்டிற்கான இலவச டொமைன் வழங்குகிறார்கள்.

Bluehost Hosting review tamil

இந்த bluehost திட்டங்கள் மாதம் 149 ரூபாயிலிருந்து தொடங்குகின்றன, இதனுடன் மேம்பாட்டு, பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இலவச SSL சர்டிபிகேட் ஆகியவை அடங்கும். இவை உங்கள் வலைப்பதிவு அல்லது வலைதளத்தை பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவும்.

Bluehost Hosting review tamil

ஒட்டுமொத்தமாக இவர்களின் கடைசி 24 மாத செயல்திறன் நன்றாக இருந்தது. ப்ளூ ஹோஸ்ட் அதன் இயக்க நேரத்துடன் 99.99% மற்றும் 405 ms (0.4) வினாடிகள் வேகமாக நேரத்துடன் இருந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக bluehost எப்படி இருக்கிறது – Bluehost Hosting Overview tamil:-

எங்கள் வெர்டிக்ட்: சிறந்த ஒட்டுமொத்த பகிரப்பட்ட ஹோஸ்டிங்
வேகம்: 405 எம்.எஸ் (பிப்ரவரி 2018 முதல் ஜனவரி 2020 சராசரி வரை)
இயக்க நேரம்: 99.99% (பிப்ரவரி 2018 முதல் ஜனவரி 2020 சராசரி வரை)
வாடிக்கையாளர் ஆதரவு: 24/7 நேரடி அரட்டை
APPS: வேர்ட்பிரஸ், ஜூம்லா, Drupal மற்றும் சில வலைத்தள உருவாக்குநர்கள்
அம்சங்கள்: அளவிடப்படாத அலைவரிசை(unlimited Bandwidth) மற்றும் சேமிப்பு, மின்னஞ்சல் கணக்குகள், இலவச டொமைன் (1 ஆண்டு)
ஹோஸ்டிங் திட்டங்கள்: பகிரப்பட்ட(bluehost shared hosting), கிளவுட்(bluehost cloud hosting), VPS Hosting மற்றும் Dedicated ஹோஸ்டிங்
தள பரிமாற்றம் (Site Transfer): இலவசம் அல்ல

நன்மைகள்- Bluehost  Hosting review Pros in Tamil

#1. சிறந்த இயக்க நேரம் 99.99% – ஒரு ஆண்டு முழுவதும் ஆராய்ந்துள்ளது:-

நீங்கள் உங்கள் வலைத்தளத்திற்கு ஹோஸ்டிங் தேர்ந்தெடுக்கும் பொழுது இயக்க நேரம் மிக முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் தளம் இயக்க நேரம் கீழே (downஆக) இருந்தால் உங்களுடைய பயனர்கள் உங்களுடைய வலைத்தளத்தை தேடும்பொழுது சர்வர் பிஸி என்று வரும்.

இது உங்களுடைய பயனாளர்களுக்கு சிறிய கஷ்டமாக இருக்கும் எனவே தொடர்ந்து நல்ல நேரம்(good uptime) உங்கள் முன்னுரிமைகள் ஒன்றாக இருக்கவேண்டும்.

எனவே இயக்க நேரத்தை பொறுத்தவரையில் ப்ளூ போஸ்ட் மிகவும் நன்றாக இருக்கிறது கடந்த 24 மாதத்திற்கான இயக்க நேரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களின் மாதாந்திர இயக்க நேரம்:

  • ஜனவரி 2020 சராசரி இயக்க நேரம்: 100%
  • டிசம்பர் 2019 சராசரி இயக்க நேரம்: 100%
  • நவம்பர் 2019 சராசரி இயக்க நேரம்: 100%
  • அக்டோபர் 2019 சராசரி இயக்க நேரம்: 99.96%
  • செப்டம்பர் 2019 சராசரி இயக்க நேரம்: 99.99%
  • ஆகஸ்ட் 2019 சராசரி இயக்க நேரம்: 99.99%
  • ஜூலை 2019 சராசரி இயக்க நேரம்: 100%
  • ஜூன் 2019 சராசரி இயக்க நேரம்: 99.98%
  • மே 2019 சராசரி இயக்க நேரம்: 100%
  • ஏப்ரல் 2019 சராசரி இயக்க நேரம்: 100%
  • மார்ச் 2019 சராசரி இயக்க நேரம்: 99.99%
  • பிப்ரவரி 2019 சராசரி இயக்க நேரம்: 100%

#2. வலைத்தள வேகம் 405 மில்லி செகண்ட்:- | Bluehost tamil review

கடந்த வருடம் பெரும்பாலான வலைத்தளம் மொபைல் போனில் மிகவும் மெதுவாக இருப்பதாக கூகுள் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.

உங்களுடைய வலைத்தளம் கூகுளில் வருவதற்கு இந்த வேகம் மிகவும் முக்கியமான ஒரு காரணமாக இருக்கிறது. ஏனென்றால், கூகுளின் மொபைல் முதல் குறியீடானது உங்கள் தளத்தின் வேகத்தைப் பொருத்து மக்களுடைய தேடல்களில் உங்களுடைய வலைத்தளத்தை முதலில் உயர்த்தலாம் குறைவான வேகம் இருந்தால் உங்களுடைய வலைத்தளம் மறைக்கவும் படலாம்.

வேகம் குறைவாக இருக்கும் வலைத்தளங்கள் எப்போதுமே உங்களுடைய வணிகத்திற்கு மிகவும் குறைந்த விற்பனை கொடுக்கும் என்று ஒரு ஆய்வு சொல்லுகிறது.

எனவே நேரத்திற்கு பிறகு உங்கள் ஹோஸ்டிங் உடைய load time எனப்படும் page Loading speed உங்கள் தளத்தின் வெற்றியை உருவாக்கவும் அல்லது உடைக்க கூடியதாகவும் இருக்கும்.

Pingdom என்ற மூன்றாம் தரப்பு கருவியை பயன்படுத்தி Bluehost ஹோஸ்டிங் கை பயன்படுத்தும் சில வலைத்தளங்களை கண்காணித்தோம். அதில் சராசரி பக்க ஏற்றுதல் வேகம் 405 மில்லி செகண்ட் ஆக இருந்தது. இது நாங்கள் சோதனை செய்த அனைத்து ஹோஸ்டிங் இடமிருந்தும் ஐந்தாவது வேகமான தளமாக அமைகிறது.

#3. குறைந்த அறிமுக Offer மாதத்திற்கு 199 ரூபாய்:-

இந்த Bluehost ஹோஸ்டிங் விலையை பொருத்தவரை மிகவும் மலிவானதாக கருதப்படுகிறது. அதாவது இதனுடைய பேசிக் பிளான் மூன்று வருடத்திற்கு உங்களிடம் மாதம் 199 ரூபாய் வசூலிக்கும்.

அதே நேரத்தில் நீங்கள் மூன்று வருட பிளான் தேர்ந்தெடுக்காமல் ஒரு வருடம் நீங்கள் தேர்ந்தெடுத்தால் உங்களுடைய மாத கட்டணம் அதிகமாகும் எனவே அனைத்து ஹோஸ்டிங் கம்பெனிகளும் உங்களுக்கு கொடுத்திருக்கும் இந்த விலை மொத்தமாக மூன்று வருடத்திற்கும் அல்லது நான்கு வருடத்திற்கு நீங்கள் வாங்கினால் மட்டுமே அது பொருந்தும்.

நீங்கள் ஒரு வருடத்திற்கு வாங்கினால் அதனுடைய விலை அதிகமாக இருக்கும் இது அனைத்திற்கும் பொருந்தும்.

Bluehost Basic Plan பொருத்தவரை உங்களுக்கு 50 ஜிபி SSD Storage கொடுக்கிறது. அதனுடன் சேர்ந்து வரம்பற்ற பேண்ட்வித்(Unlimited bandwidth), இலவச எஸ் எஸ் எல் சர்டிபிகேட் (SSL Certificate), ஒரு வருடத்திற்கான இலவச டொமைன்(Free Domain) 25 Sub Domain, நல்ல வலைத்தள வேகம் என பல சிறந்தவற்றை உங்களுக்கு தருகிறது.

#4. நல்ல பாதுகாப்பு விருப்பங்கள்:- | Bluehost hosting security in tamil

ப்ளூ ஹோஸ்ட் பல ஹோஸ்டிங் கம்பெனிகளை காட்டிலும் விலை மலிவாக இருந்தாலும் இதனுடைய பாதுகாப்புக்கு எந்த ஒரு குறையும் வைத்ததில்லை, இதனுடைய பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் அருமையாக இருக்கிறது.

நான் உங்களுக்கு மேலே கூறியது போல மலிவான விலையில் உங்களுக்கு Free SSL Certificate தருகிறது.

எஸ் எஸ் எல் சர்டிபிகேட் (SSL Certificate) என்பது உங்களுடைய வலைத்தளத்தின் URLல் இடப்பக்கத்தில் பூட்டு போன்ற ஒரு படம் இருக்கும் அதனுடைய அர்த்தம் என்னவென்றால் உங்களுடைய வலைத்தளம் பயன்படுத்துவதற்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கிறது என்பது அர்த்தம்.

வேறு எந்த ஹோஸ்டிங் கம்பெனிகளும் இந்த மலிவான விலையில் உங்களுக்கு SSL சர்டிபிகேட் வழங்குவதில்லை. எஸ்எஸ்எல் சர்டிபிகேட் உங்களுடைய வலைத்தளத்திற்கு மிகவும் அவசியமானது ஏனென்றால் பல ஹேக்கர்களிடமிருந்து உங்களுடைய வலைத்தளத்தை இது பாதுகாக்கும்.

Codeguard என்பது மற்றுமொரு பாதுகாப்பு அம்சமாகும் இது தினசரி உங்களுடைய வலைத்தளத்தை பேக்அப்(Backup) எடுத்துக் கொள்ளும் எடுத்துக்காட்டாக உங்களுடைய வலைத்தளம் ஹேக்கர்களால் ஏதாவது திருடப்பட்டால் அல்லது உங்களுடைய வலைத்தளத்தில் நீங்கள் ஏதாவது தவறு செய்து உங்களுடைய வலைத்தளம் காணாமல் போய்விட்டால் இந்த Backup மூலம் உங்களுடைய வலைத்தளத்தை பழையபடி மீண்டும் நீங்கள் கொண்டுவந்து இயக்கலாம்.

அதுமட்டுமில்லாமல் postini எனப்படும் பாதுகாப்பு tool டூல் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இது உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸில் ஸ்பாம் வருவதை தடுக்கும்.

எனவே இந்த மலிவான விலையில் உங்களுக்கு இவ்வளவு பயனுள்ள பாதுகாப்பு அம்சத்தையும் இந்த Bluehost நிறுவனம் உங்களுக்கு வழங்குகிறது. இதனால் உங்களுக்கு பல நன்மைகள் இருக்கிறது.

#5. பல Integeration, Apps, இ காமர்ஸ் வழங்குகிறது:-

பாதுகாப்பு அம்சத்திற்கு பிறகு இந்த bluehost hosting உங்களுக்கு பலவிதமான ஆப்ஸ் உங்களுடைய வலைத்தளத்திற்கு ஒருங்கிணைக்க உதவிகரமாக இருக்கிறது.

அது மட்டுமில்லாமல் உங்களுடைய வலைத்தளத்திற்கு நீங்கள் வேர்ட்பிரஸ் இன்ஸ்டால் செய்ய விரும்பினால் வெறும் ஒரே கிளிக்கில்(One click wordpress Install) வேர்டப்பிரஸ் இன்ஸ்டால் ஆகிவிடும்.

அதுமட்டுமில்லாமல் நீங்கள் சி எம் எஸ் எனப்படும் Drupal,  ஜூம்லா போன்ற இ-காமர்ஸ் வலைத்தளமும் நீங்கள் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இது போன்ற மேலும் பல வகை அது உங்களுக்கு வழங்குகிறது.

#6. Official wordpress.org ப்ளூஹோஸ்ட் பரிந்துரைக்கிறது:-

நாம் அனைவரும் ப்ளூ ஹோஸ்ட்ல் வேர்டப்பிரஸ் இன்ஸ்டால் செய்து தான் தங்களுடைய வலைத்தளத்தை உருவாக்க இருக்கிறோம். அந்த வேர்டப்பிரஸ் ஆப் நமக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் WordPress.org நிறுவனமே bluehost பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறது.

#7. புதியவர்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது:-

நான் என்னுடைய வலைத்தளத்தை முதலில் bluehostல் தான் நிறுவினேன் எனக்கு அப்போது வலைத்தளத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. எனவே எனக்கு அப்போது ப்ளூ போஸ்ட் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக எனக்கு இருந்தது.

அதனுடைய Cpanel தெளிவாகவும் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாகவும் இருந்தது. எனவே நீங்கள் ஒரு புதுப்பயனர் ஆக இருந்தால் உங்களுக்கு Bluehost Cpanel பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.

#8. 30 நாள்  Money Back Guarantee:-

இந்த ப்ளூ கோஸ்ட் நிறுவனமானது உங்களுக்கு 30 நாட்கள் பணத்தை திருப்பி தரக்கூடிய கேரன்டி பிளான் ஒன்றைத் தருகிறது.

இந்த 30 நாட்களுக்குள் நீங்கள் bluehost hosting பயன்படுத்தி உங்களுக்கு திருப்திகரமாக இல்லை என்றால் நீங்கள் அவர்களிடத்தில் தெரிவித்து உங்களுடைய பணத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம்.

#9. சிறந்த வாடிக்கையாளர் சேவை:-

நான் முதன்முதலாக வலைத்தளத்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல் நான் அதைப் பயன்படுத்திய போது எனக்கு அறியாமையால் சில கஷ்டங்கள் சந்தித்தேன். அந்த சமயத்தில் நான், எனக்கு எந்த ஒரு சிறிய சந்தேகம் இருந்தாலும் கூட உடனடியாக ப்ளூ கோஸ்ட் வாடிக்கையாளர் Live Chat சேவையை பயன்படுத்தி கொண்டே இருப்பேன்.

அவர்களும் உடனுக்குடன் எனக்கு உதவி செய்தார்கள் இதனால்தான் நான் வலைத்தளத்தைப் பற்றி மேலும் நன்றாக அறிய முடிந்தது.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் நேரடி சாட் சப்போர்ட் உங்களுக்கு இருக்கிறது.

இதனால் உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் அவர்கள் உங்களுக்கு உடனடியாக உதவி செய்வார்கள்.

Bluehost Hosting review tamil

தீமைகள் – Bluehost Cons in Tamil:-

#1. அதிக ரினிவல் ரேட் – High Renewal Rate:-

நீங்கள் ப்ளூ கோஸ்ட் ஹோஸ்டிங் முதன்முதலாக வாங்கினீர்கள் என்றால் உங்களுக்கு அந்த முதல் வருடத்தில் விலை மிகவும் கம்மியாக இருக்கும். நீங்கள் ஒரு வருடம் முழுவதும் அதை நன்றாக பயன்படுத்தி மீண்டும் அதை ரினிவல் செய்ய வேண்டுமென்றால் முதலில் நீங்கள் என்ன தொகை கொடுத்தீர்களோ அதை விட சற்று அதிகமாக நீங்கள் பணத்தை கட்ட வேண்டி இருக்கும்.

இது சில வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.

#2. தளத்தை ப்ளுஹோஸ்ட் க்கு மாற்றுவது இலவசம் கிடையாது:-

பொதுவாக மற்ற ஹோஸ்டிங் கம்பெனிகள் பயனர்கள் அவர்களுடைய வலைதளத்தை மாற்ற விரும்பும் ஹோஸ்டிங் க்கு மாற்ற நினைத்தால் அந்த கம்பெனி அவர்களுக்கு இலவசமாக மாற்றி கொடுக்கும்.

இந்த விஷயத்தில் bluehost பொறுத்தவரையில் நாம் வேறு ஒரு ஹோஸ்டிங் பயன்படுத்தி இப்போது நான் bluehost க்கு மாற்ற நினைத்தால் அதற்கு அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டியிருக்கும். அது இலவசம் கிடையாது.

விரைவான விமர்சனம்:- Bluehost Quick Review Facts in tamil:-

  • இலவச டொமைன்? – ஆம். 1 ஆண்டிற்கு, பின்னர் நீங்கள் புதுபிக்க நினைத்தால் அதை விட அதிகமாக இருக்கும்.
  • Easy Signup: இரண்டு பக்க பதிவுசெய்தல் செயல்முறை.
  • கட்டண முறைகள்: கிரெடிட் கார்ட் மற்றும் paypal
  • மறைக்கப்பட்ட கட்டணங்கள்(Hidden Cost): மறைக்கப்பட்ட கட்டணங்கள் ஏதும் இல்லை. renewal கட்டணம் அதிகமாக இருக்கும்.
  • கண்ட்ரோல் பேனல் மற்றும் டாஷ்போர்டு அனுபவம்: எளிய மற்றும் பயன்படுத்த எளிதாக இருக்கும்.
  • பயன்பாடுகள் மற்றும் சிஎம்எஸ் நிறுவுதல் (வேர்ட்பிரஸ், ஜூம்லா, முதலியன): மோஜோ மார்க்கெட்ப்ளேஸ் பயன்பாட்டு நிறுவலை விரைவாகவும் எளிதாகவும் செய்கிறது.

Bluehost Hosting review tamil

நன்றி – Hosting Facts 

5 2 votes
Article Rating
சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
அதிக வாக்குகள் பெற்றவை
புதிய பழைய
Inline Feedbacks
View all comments