Blog meaning in tamil : பெரும்பாலும் இணையத்தளத்தைப் பயன்படுத்துவதற்கும், இணையத்தில் இன்டர்நெட்டின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்குப் பிறகு, இணையதளம் வேகத்தையும் போக்குவரத்தையும் அதிகரித்து வருகிறது.
பட்ஜெட்டில் ஸ்மார்ட்போனின் நடுத்தர வர்க்கம் இருப்பதால், பெரும்பாலான மக்கள் தங்களுடைய பழைய தொலைபேசிகள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்களையே பயன்படுத்துகின்றனர்.
சில இசை தளங்கள், சில ஆன்லைன் வர்த்தக வலைத்தளங்கள் மற்றும் சில வலைத்தளங்கள் குறிப்பிட்ட பகுதி பற்றிய தகவல்களை மட்டுமே கொண்டுள்ளன. கிட்டத்தட்ட ஒவ்வொரு புலத்திற்குமான தகவல் மற்றும் சேவைகள் இணையத்தில் கிடைக்கின்றன.
இண்டர்நெட் என்பது உலகில் இருக்கும் மக்களை கவர்ந்திழுத்த ஒரு தயாரிப்பு, “வலைப்பதிவு (BLOG) என்பது ஒரு எளிய உள்ளடக்கத்தில், ஒரு காட்சி அல்லது பட ஆசிரியரின் உதவியுடன் எங்களுக்கு உதவும் உள்ளடக்க மேலாண்மை முறை ஆகும்.
Blog என்றால் தமிழில் எப்படி புரிந்து கொள்வது? Blog meaning in tamil
பிளாக் என்றால் எழுதுவது( ஏதாவது ஒரு தலைப்பு தேர்ந்தெடுத்து அதைப்பற்றி எழுதுவது ).
பிளாக் என்பதை மூன்று விதமாக எனக்குத் தெரிந்து சொல்லுவேன்:–
- அதில் BLOG என்பது ஒரு online ஜெர்னல்(Journal) என்று சொல்லலாம். அங்குதான் bloggers தங்களுடைய பர்சனல், ப்ரொபஷனல் அனுபவங்கள், மற்றும் சாதனைகளை இந்த Virtual உலகத்திற்கு பகிர்வார்கள்.
- Blog என்பது ஒரு online பிளாட்பார்ம் என்றும் சொல்லலாம். அங்கு bloggers தங்களுடைய ஐடியாக்கள், குறிக்கோள்கள், Hobbies, யோசனைகள், lifestyle என பலவற்றை இந்த உலகத்துடன் பகிர்வார்கள்.
- Blog என்பது ஒரு வெப்சைட் என்றும் online டைரி என்றும் சொல்லுவார்கள். அங்கு bloggers தங்களுடைய தினசரி வாழ்க்கையை update செய்வார்கள். இதை இப்படியும் சொல்லலாம்.
Blogging பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்னாள் நாம் சில வார்த்தைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
BLOG :- இது ஒரு online டைரி என சொல்லலாம்.
BLOGGER :- எவன் ஒருவன் தன்னுடைய BLOG ஐ (ஆன்லைன் டைரி) update செய்கிறானோ, எவன் ஒருவனுக்கு தனக்கென்று ஒரு BLOG(ஆன்லைன் டைரி) வைத்திருக்கிறானோ, அவர்களை பிளாக்கர்( blogger) என்று சொல்லுவார்கள்.
BLOGGING :- தன்னுடைய பிளாக்(ஆன்லைன் டைரி)யில் தினசரி எழுதுவதை BLOGGING என்று கூறுவார்கள்.
பிளாக் எதற்காக செய்ய வேண்டும்? Blog tamil meaning:-
இது பிளாக்(BLOG) ஆரம்பித்து பிளாக்கர்(Blogger) ஆக விரும்புவர்களுக்கு அருமையான கேள்வி. இன்றைய இன்டர்நெட் உலகத்தில் இன்டர்நெட்டின் பயன் இந்தியாவில் அமெரிக்காவிற்கு நிகராக இன்டர்நெட் பயன்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு மனிதர்களிடத்திலும் ஏதாவது ஒரு பாஸிட்டிவ் ஐடியாக்கள் இருக்கும். அதை இன்டர்நெட் மூலமாக மக்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
Blog உருவாக்குவதற்கான காரணம் அது நமக்கு கருத்து சுதந்திரத்தை தருகிறது. “ஒரு எளிய வலைப்பதிவு (Blog) ஒன்றை உருவாக்குவதற்கு, நமக்கு அதிக தொழில்நுட்ப அறிவு தேவையில்லை, கணினியைப் பற்றி மட்டும் அறிந்திருக்க வேண்டும்.
இதால் நீங்கள் ஒரு நல்ல வலைப்பதிவு உருவாக்க முடியும். வலைப்பதிவு எந்த விஷயத்திலும் இருக்கக்கூடும், குறிப்பாக நீங்கள் ஒரு விஷயத்தைப் பற்றிய நல்ல அறிவைப் பெற்றிருந்தால், அதை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்ள விரும்புவது, தகவலைப் பகிர்ந்து கொள்ள நீங்கள் ஒரு சிறந்த தளமாக இருக்க முடியும்.
ஆனால் உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம் நான் எதைப் பகிர்ந்துகொள்வது? என்று , ஐடியாக்கள்? அனுபவங்கள்? அல்லது வாழ்க்கை முறை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ? எது மக்களிடம் கொண்டு சேர்த்தால் நன்மை என்று நீங்கள் நினைக்கின்றீர்களோ, எது மக்களுக்கு உதவுகிறதோ, அதை நீங்கள் பற்றி எழுதலாம்.
நீங்கள் கேட்கலாம் தம்முடைய தினசரி அனுபவங்கள், ஐடியாக்கள் அனைத்தும் சமூக வலைத்தளமான முகநூல், ட்விட்டர், whatsapp என்று பகிர்ந்துகொண்டுதான் இருக்கின்றோமே என்று.