4 அட்டகாசமான ஆன்லைன் வேலைகள் உங்களை லட்சாதிபதி ஆக்கும்

Best 4 Online jobs from home tamil | அதிக வருமானம் தர கூடிய ஆன்லைன் வேலைகள்

சிறந்த Online jobs from home tamil : பொதுவாக ஆஃப்லைனில் வியாபாரம் செய்வதில் பல விதம் உள்ளது. அதேபோல் பலவிதமான யுக்திகளும் இருக்கிறது அதேபோல்தான் ஆன்லைனிலும் வியாபாரம் செய்வதற்கு பலவிதமான யுக்திகள் இருக்கிறது. இன்று நாம் இதை தான் பார்க்கப் போகிறோம்.

முதலில் ஆன்லைன் பிசினஸ்(online business) மற்றும் ஆப்லைன் பிசினஸ்(offline business) என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக நாம் விரைவாக இந்த இரண்டு பிசினஸ் ஒப்பிட்டு பார்ப்போம்.

Offline Business Online Business
ஆஃப்லைன் பிசினஸில் பொதுவாக உங்களுடைய வியாபாரத்தை செட்டப் செய்வதற்கு, உங்களுக்கு கஸ்டமர்களை ஈர்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடம் ஒன்று தேவை. அந்த இடத்திற்கு வாடகையும் கொடுக்க வேண்டும், கரண்ட் பில் கொடுக்கவேண்டும். சம்பளத்திற்கு ஆள்போட வேண்டும். ஆனால் ஆன்லைனில் வியாபாரம் செய்வதற்கு எந்த ஒரு கதையும் தேவையில்லை, எந்த ஒரு ஆபீசும் தேவையில்லை உங்களிடம் ஒரு லேப்டாப் அல்லது கணினி மற்றும் அதனுடன் சேர்த்து இன்டர்நெட் இணைப்பு மட்டும் இருந்தால் போதும். இவற்றை வைத்து நீங்கள் ஆன்லைன் பிசினஸ் செய்யலாம்.
2. ஆஃப்லைனில் பிசினஸ் செய்வதற்கு கண்டிப்பாக உங்களுக்கு பணம் தேவைப்படும் பணமில்லாமல் ஆஃப்லைனில் பிசினஸ் செய்வது மிகவும் கடினம். ஆனால் ஆன்லைனில் almost பணம் இல்லாமல் இருந்தாலும் நாம் பிசினஸ் செய்யலாம். மிக மிக கம்மியான பணமிருந்தாலும் நாம் ஆன்லைனில் பிசினஸ் செய்யலாம்.
3. ஆஃப்லைன் பிசினஸில் நீங்கள் வீட்டிற்கு வெளியே சென்றால் தான் செய்ய முடியும். ஆன்லைன் பிசினஸில் உங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டே நீங்கள் செய்யலாம்.
4. அதேபோல் ஆஃப்லைன் பிசினஸ் செய்வதற்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் தான் கவர முடியும் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும்தான் உங்கள் வியாபாரத்தை நீங்கள் கொண்டுபோய் சேர்க்க முடியும். ஆனால் ஆன்லைன் பிசினஸில் நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உலகம் முழுவதும் வியாபாரம் செய்யலாம்.

Best 4 Online jobs from home tamil | ஆன்லைன் பிசினஸ் செய்வதற்கான வழிகள்:-

ஆன்லைன் பிசினஸ் செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன அதை நாங்கள் நன்கு ஆழமாக ஆராய்ந்து கீழே ஐந்து பிரபலமான வழியை உங்களுக்கு கொண்டு வந்து காண்பிக்கிறோம். இவை மாணவர்களுக்கும் சிறந்த ஒன்று என்றும் கூறலாம் (Money Earning Tips for Students)

#1. நீங்கள் சொந்தமாக ஒரு பிளாக் ஆரம்பிப்பது | Start Your Own Blog Tamil :-

blogging

பிளாக் ஆரம்பிப்பது நீங்கள் நினைக்கிற மாதிரி அவ்வளவு கடினம் கிடையாது மிக மிக சுலபம். ப்ளாக் என்றால் என்ன என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பிளாக் ஆரம்பிப்பதற்கு உங்களுக்கு எந்த அனுபவம் இருக்கக் கூடாது என்று நான் கூறமாட்டேன் அதாவது நீங்கள் இலவசமாக பிளாக்கரில் சென்று உங்களுடைய வலைதளத்தில் இலவசமாக ஆரம்பிக்கலாம்.

ஆனால் இலவசமாக நீங்கள் பிளாக் ஆரம்பித்தால் நீங்கள் அதை வைத்து பணம் ஈட்ட முடியாது. அதை வைத்து பணம் ஈட்டுவது மிக மிக கடினமான ஒரு காரியம் ஆக மாறிவிடும் எனவே நீங்கள் தன்னம்பிக்கையை இழந்து விடுவீர்கள்.

எனவே நான் மேலே கூறியது போல இதற்கு மிக மிக சிறிய பணம் மட்டுமே நீங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும்.

பிளாக் எப்படி ஆரம்பிப்பது என்பதை பற்றி நான் ஏற்கனவே ஒரு போஸ்ட் எழுதி உள்ளேன் அதை நீங்கள் படிக்கலாம் அதற்கு இந்த லிங்கை நீங்கள் கிளிக் செய்யுங்கள்.

ஆனால் நீங்கள் பணம் செலவழித்து ஒரு ப்ளாக் ஆரம்பித்தாலும் நீங்கள் எடுத்த உடன் அதில் பணம் எதிர்பார்ப்பது மிகமிகத் தவறு ஏனெனில் அது கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு பண மழையைக் கொட்டும் அதுவரை நீங்கள் உங்களுடைய விடா முயற்சியை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதன்பிறகு உங்கள் காட்டில் பண மழைதான். ப்ளாக் மூலம் இந்த உலகத்தில் எண்ணற்ற பலபேர் லட்சாதிபதி கோடீஸ்வரர்களாக மாறியிருக்கிறார்கள்; மாறிக்கொண்டு இருக்கிறார்கள் எனவே நீங்களும் உடனடியாக ஒரு ப்ளாக் ஆரம்பித்து உங்களுடைய வாழ்க்கையை மாற்றுங்கள்.

#2. நீங்கள் சொந்தமாக ஒரு ஆன்லைன் வர்த்தகத்தை தொடங்கலாம் | Start Your Own E-Commerce Site:-

இந்த காலத்தில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற பல ஆன்லைன் வர்த்தகங்கள் (E-Commerce Store) அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றன அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் உள்ளூர் வணிகர்கள் திணறி வருகின்றனர். எனவே நீங்கள் உள்ளூர் வணிகராக இருந்தார் உடனடியாக உங்களுடைய ஆஃப்லைன் கடையை ஆன்லைன் ஆக மாற்றலாம்.

எந்த கடையும்  வைக்கவில்லை என்றாலும் நீங்களாகவே சொந்தமாக ஒரு ஆன்லைன் கடையை தொடங்கலாம் அது ஒரு ஊறுகாய் விற்கின்ற தொழிலாக கூட இருக்கலாம்; உங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொட்டி தரும்.

ஏனெனில் ஆன்லைன் வர்த்தகத்தில் அவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் மக்களிடம் அதிகமாக தொலைபேசிகள் இருக்கின்றதால் மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். எனவே நீங்கள் எந்த ஊராக இருந்தாலும் சரி உங்களுடைய கடையை எப்படி ஒரு ஆன்லைன் வருத்தமாக மாற்றுவது என்று சிந்தியுங்கள்.

அது எந்த கடையாக வேண்டுமானாலும் இருக்கலாம் துணிக்கடை, ஸ்வீட் கடை, முறுக்கு கடை, ஹோட்டல், எலக்ட்ரானிக் கடை, ஸ்டேஷனரி கடை, என்று இன்னும் பல விதமாக இருக்கலாம். இதை நீங்கள் ஒரு ஆன்லைன் வர்த்தக மாற்றி அதே உள்ளூர் மக்களிடம் நீங்கள் கொண்டு போய் சேருங்கள் உங்களுக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று தரும்.

உங்களுக்கு ஆன்லைனில் எப்படி இ-காமர்ஸ் வலைத்தளம் உருவாக்குவது என்று தெரியவில்லை என்றால் எங்களது யூடியூப்  சேனலை தவறாமல் நீங்கள் சப்ஸ்கிரைப் செய்து வைத்துக் கொள்ளுங்கள் ஏனெனில் இந்த சேனல் மூலம் உங்களுக்கு பலவிதமான வீடியோக்கள் பலவிதமான எண்ணற்ற டிப்ஸ்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்.

#3. பிரீலன்ஸிங் | Freelancing

பிரீலன்ஸிங் என்றால் நீங்கள் மற்றவர்களுக்காக ஒரு வேலையை முடித்துக் கொடுப்பது அதற்கு அவர்கள் உங்களுக்கு பணம் தருவது இதைத்தான் பிரீலன்ஸிங் என்று நாம் சொல்வோம். பிரீலன்ஸிங் என்றால் என்ன என்பதைப் பற்றி நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதற்கு இந்த லிங்கை கிளிக் செய்து முழுவதுமாக தெரிந்து கொள்ளவும்.

#4. யூடியூப் சேனல் ஆரம்பிப்பது | Start Youtube Channel Tamil

யூ டியூப்பில் சேனல் ஆரம்பித்து பணம் சம்பாதிப்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரியும் உங்களுக்கும் நான் சொல்கிறேன்.
யூட்யூபில் சேனல் ஆரம்பித்து நீங்கள் நிறைய சம்பாதிக்கலாம். நீங்கள் எதில் சிறந்து விளங்குவீர்கள் அதைப்பற்றி நீங்கள் வீடியோவாக பதிவிடலாம்; அதைப்பற்றி சொல்லலாம்; அதைப்பற்றி கலந்துரையாடலாம். இவை அனைத்தும் ஒரு வீடியோவாக நீங்கள் எடுத்தும் போடலாம் அல்லது ஆடியோ மட்டும் பயன்படுத்தி அதற்கு மேலே அதற்கு ஏற்ற படங்களை கொஞ்சம் எடிட் செய்து அதை ஒரு வீடியோவாக நீங்கள் அப்லோடு செய்யலாம்.

4 1 vote
Article Rating
சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
அதிக வாக்குகள் பெற்றவை
புதிய பழைய
Inline Feedbacks
View all comments