இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை வளர்ப்பு சுலபமானது அல்ல. குழந்தை பிறந்து 7 வருடங்கள் வரை நாம் அவர்களுக்கு சொல்லிகொடுக்கும் விஷயம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் உதவும். பெற்றோராகிய நாம் சில விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தால் அவர்களது உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி(memory power) சிறப்பாக இருக்கும்.
ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியும் ஒரேமாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாது. சில குழந்தைகள் சீக்கிரம் தவழும் சில குழந்தைகள் மெதுவாக தவழும். அதைப்பற்றி கவலை பட தேவை இல்லை. உங்க குழந்தைக்கு அளவில்லாத அன்பை கொடுங்கள். உங்கள் குழந்தையுடன் அதிக நேரம் செலவிடுங்கள். இது உங்க குழந்தை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.
குழந்தையின் பிறப்பு முதல் 3 வயது வரை தோராயமான வளர்ச்சி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
குழந்தை வளர்ச்சி 1 – 6 மாதம் வரை (baby growth 1 – 6 month)
தாய்ப்பால் குடிப்பதால் குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
பிறந்த குழந்தைக்கு 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம்.
குழந்தை பிறந்ததிளிருந்து 2 மாதம் வரை அதிக நேரம் தூங்கிக்கொண்டு இருப்பார்கள். 2 மணிநேரங்களுக்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
கழுத்துப்(neck) பகுதி மென்மையாக இருக்கும். அதனால் நாம் தூக்கும்போது கவனமாக தூக்க வேண்டும்.
குழந்தைப் பசி, தூக்கம், என பல காரணங்களுகாக அழலாம். குழந்தை அழுகை மூலமே அவர்களது தேவையை உங்களிடம் வெளிபடுதுவர்கள்.
மூன்று மாதங்கள் முடிந்ததும் குழந்தையின் தலை நிற்க ஆரம்பிக்கும். நீங்கள் பேசும் போது குழந்தை புன்னகை மூலம் உங்களுக்கு பதிலளிப்பார்கள்.
செயல்பாடுகள் (1 – 6 month baby Activities for Brain Development)
- பிறந்தக் குழந்தையின் பார்வைக்கு பிரகாசமான வண்ணங்கள்(bright colors) தான் தெரியும். குறிப்பாக வெள்ளை(white), கருப்பு(black), and சிவப்பு(Red).
- குழந்தையின் அருகில் கருப்பு மற்றும் வெள்ளை நிற பொம்மைகள்(toys) தொங்கவிடுவது (அ) காட்டுவதால் அவர்கள் முகத்திலிருந்து 8 முதல் 10 அங்குல தூரத்தில் உள்ள பொருட்களில் சிறப்பாக கவனம் செலுத்த முடியும். இதனால் அவர்களது மூளை வளர்ச்சி அதிகரிக்கிறது.
- Black and white toys, Musical toys, soft toys குழந்தைக்கு மிகவும் பிடிக்கும்.
- குழந்தை சத்தம் கேட்கும் இடத்தை நோக்கி பார்க்க முயலும். Rattles கிலுகிலுப்பை போன்ற பொம்மைகள் கொடுக்கலாம்.
- குழந்தை தானாக முயற்சி செய்து திரும்ப மற்றும் நகர விட வேண்டும்
- குழுந்தைகளுடன் அதிக நேரம் பேசி விளையாடலாம். கதை சொல்லலாம்.
சருமம் பராமரிப்பு (1 – 6 month baby skin care)
- குழந்தையை காலை வெயிலில் ( 6am -7am ) நேரடியாக இல்லாமல் வைப்பது நல்லது.
- குழந்தையை குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணெய் தடவி பிறகு குளிக்க வைப்பது வேண்டும்.
- கடலைமாவு, பாசிபருப்பு மாவு, ரோஜாஇதழ் பொடி, ஆவரம்பூ பொடி இதனை சிறிதளவு தண்ணிரில் அல்லது பசும்பாலில் கலந்து தேய்த்து குளிக்க வைக்கவும்.
- குழந்தையின் நகங்களை நரிக்கி விட வேண்டும்.
- குழந்தை இருக்கும் இடத்தை சுற்றி தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.
- குழந்தைகளுக்கு டையபர்(diaper) உபயோகிப்பதர்க்கு பதில் காட்டன் துணிகளை உபயோகிப்பது மிகவும் நல்லது.
- அதிகம் வாசனை தரும் chemical பொருட்களை தவிர்பது நல்லது.
- 6 மாதம் வரை தாய்பால் குடிப்பதே மிக சிறந்தது.
- பால்லூட்டும் தாய்மார்கள் சத்தான உணவு வகைகளை உட்கொண்டாலே குழந்தைக்கும் சத்தான உணவு கிடைக்கும்.
- குழந்தை பால் குடித்தவுடன் ஏப்பம் வரும் வரை முதுகில் தட்டிப்பிறகு தொட்டிலில் போடவேண்டும்.
குழந்தை வளர்ச்சி 6 – 12 மாதம் வரை (baby growth 6 – 12 month)
ஒரு வயதிர்க்குள் குழந்தைகள் எப்படி வளருவாங்கனு தெரியாது வேகமா வளந்திடுவங்க. இந்த வயசுல தனியா உட்காரு வாங்க. தவழ்ந்து போவாங்க. நாற்காலி படிச்சுட்டு நிற்க ஆரம்பிப்பாங்க. சில குழந்தை 2 அடி நடக்க ஆரம்பிப்பாங்க.
இந்த ஒவ்வொரு வளர்ச்சியும் பாக்குறதுக்கு அழகாகவும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.
குழந்தை உங்கள் குரலை நன்றாக அடையாளம் தெரிந்து கொண்டிருப்பார்கள் உங்களையும் அவர்களால் அடையாளம் காணமுடியும் உங்களுக்கு பதிலளிக்க முயற்சி செய்வார்கள் சிரித்து பேச தொடங்குவார்கள்.
சில குழந்தைகள் இரவு நேரங்களில் 5 லிருந்து 6 மணி நேரங்கள் தொடர்ந்து தூங்க ஆரம்பித்து விடுவார்கள் உங்கள் குழந்தை அப்படி தொடர்ந்து தூங்கவில்லை என்றால் ஒன்றும் தவறில்லை ஒரு வருடத்திற்குள் வழக்கமான நேரத்தில் தூங்க ஆரம்பித்து விடுவார்கள்.
செயல்பாடுகள் (6 – 12 month baby Activities for Brain Development)
- குழந்தை தானாக முயற்சி செய்து நிற்க மற்றும் நடக்க விட வேண்டும்
- மென்மையான பொம்மைகளை கொடுக்கலாம்.
- Rattle toys, rotating toys, Musicle toys, சத்தம் கேட்கும் பொம்மைகள் (Sound Effect toys) கொடுக்கலாம்.
- பிரகாசமான நிறங்கள்(colourfull books) உள்ள புத்தகங்களை கொடுக்கலாம்.
- கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடலாம்.(pee-kaa-poo)
- கதை சொல்லலாம்.(read story books)
- பந்து விளையாட கொடுக்கலாம்.
சருமம் பராமரிப்பு (6 – 12 month baby skin care)
- குழந்தையை காலை வெயிலில் ( 6am -7am ) வைப்பது நல்லது.
- குழந்தையை குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணெய் தடவி குளிக்க வைப்பது நல்லது.
- கடலைமாவு, பாசிபருப்பு மாவு, ரோஜாஇதழ் பொடி, ஆவரம்பூ பொடி இதனை சிறிதளவு தண்ணிரில் அல்லது பசும்பாலில் கலந்து தேய்த்து குளிக்க வைக்கவும்.
- குழந்தையின் நகங்களை நரிக்கி விட வேண்டும்.
- குழந்தை இருக்கும் இடத்தை சுற்றி தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.
- பருப்பு வேகவைத்த தண்ணீர்.
- காரட், காய்கறி வேகவைத்த தண்ணீர்.
- கீரை வேகவைத்த தண்ணீர்.
- பருப்புசாதம், காரட் சாதம், கீரை சாதம். (நன்கு அரைத்து)
- இட்லி, தோசை.
- வேகவைத்த ஆப்பிள், பழச்சாரு.(fruit juice)
- சத்துமாவுக் கஞ்சி.
- தாய்ப்பால் கொடுக்கலாம்.
குழந்தை வளர்ச்சி 1 வயது முதல் 3வயது வரை (baby growth 1 – 3 years)
குழந்தைகள் இந்த வயதில் ஓரிரு வார்த்தைகள் பேச மற்றும் நடக்க ஆரம்பிப்பார்கள்.அவங்க மூளை வளர்ச்சிக்கு(brain improvement) க்கு நெறைய activities குடுக்கலாம்.
இந்த வயதில் நாம் சரியான வார்த்தை பேசுவது சரியான விஷயங்களை சொல்லிக் கொடுப்பது ரொம்ப முக்கியம். இந்த வயதில் மத்தவங்க மாதிரி immitate செய்வது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
குழந்தைகளுடன் அதிக நேரம் பேசி விளையாடுங்கள். அவர்களுடைய பேச்சுத் திறமை அதிகரிக்கும்.
இந்த வயதில் நாம் சொல்வதை நல்லா ஞாபகம் வெச்சிபாங்க அதனால் நாம் நிறைய நல்ல விஷயம் மற்றும் புது மொழிகள் கூட சொல்லிக் கொடுக்கலாம்.
செயல்பாடுகள் (1 – 3 years baby Activities for Brain Development)
- குழந்தைகளுக்கு கதை புத்தகங்கள் படித்துக்காமிங்கள்.( story books reading with kids)
- குழந்தைகளுக்கு பிரகாசமான வண்ணங்கள் நிறைந்த புத்தகங்கள் (colourfull picture books) பிடிக்கும்.
- பொருட்களை மறைத்து வைத்து விளையாடுங்கள்.(hide and seek with things)
- பொருட்களை சேர்க்கும் விளையாட்டு.(objects matching games)
- puzzle, building box விளையாடலாம்.
- body parts, clours சொல்லி கொடுங்கள்.
- புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொடுப்பது அவர்கள் மூளை வளர்ச்சிக்கு நன்றாக அமையும்.
- உங்கள் குழந்தைகள் பேசும்போது அவங்களுக்கு தெளிவாக வார்த்தைகளைச் சொல்லிக் கொடுங்கள்.
- புதிய மொழிகள்(language) கூட கற்றுகொடுக்கலாம்.
- உங்க குழந்தைகள் தானாக சாப்பிடுவதற்கு சொல்லிக்கொடுங்க.
சருமம் பராமரிப்பு (1 – 3 years baby skin care)
- குழந்தையை குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணெய் தடவி குளிக்க வைப்பது நல்லது.
- கடலைமாவு, பாசிபருப்பு மாவு, ரோஜாஇதழ் பொடி, ஆவரம்பூ பொடி இதனை சிறிதளவு தண்ணிரில் அல்லது பசும்பாலில் கலந்து தேய்த்து குளிக்க வைக்கவும்.
- குழந்தையின் நகங்களை நரிக்கி விட வேண்டும்.
அதிகம் வாசனை தரும் chemical பொருட்களை தவிர்பது நல்லது.
- நம் வீட்டில் சமைக்கும் அணைத்து ஆரோக்கியமான உணவுகளையும் கொடுக்கலாம்.
- கேரட்தோசை, கீரை தோசை, பீட்ரூட் தோசை,முட்டை தோசை.
- சத்துமாவு கஞ்சி, சத்துமாவு தோசை.
- பருப்புசாதம், கீரை சாதம், காய்கறி சாதம், ரசம் சாதம், தயிர் சாதம்.
- காய்கறி சூப்(veg soup), முட்டை.
- பழங்கள்(fruit), பழச்சாறு(fruit juice), பால்.