Aadhaar Card யை Online மூலம் Apply செய்வது எப்படி

By Santhosh

Published on:

aadhar card apply online tamil

Aadhaar Card யை Online மூலம் Apply செய்வது எப்படி:

இந்தியாவில் Aadhaar Card யை பற்றி கேள்விப்படாதவர் யாரும் இருக்க முடியாது. ஏனெனில் நம் அன்றாட வாழ்க்கையில் ஆதார் அட்டை என்பது ஒரு அடிப்படை தேவையாகிவிட்டது. அனைத்து அரசாங்க சலுகைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் ஆகும். எனவே அனைவரும் ஆதார் அட்டையை வைத்திருப்பது அவசியம். இன்னும் சில பேர் அந்த அட்டையை பெறாமல் இருக்கலாம். அவர்களுக்கான ஒரு வழிகாட்டியாக தான் இந்த கட்டுரையை  எழுதப் போகிறேன். Aadhaar Card க்கு Online மூலம் எப்படி Apply செய்வது என்பதற்கான முழு தகவல்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.

Aadhaar Card  என்றால் என்ன?

நாம் Aadhaar Card யை Apply செய்வதற்கு முன்பாக அதை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஆதார் அட்டை என்பது இந்திய அரசின் சார்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படும் 12 இலக்க தனித்துவ அடையாள எண் ஆகும்.

மக்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு ஆதார் எண்ணும் தனித்துவமானது ஆகும். அதாவது, ஒரு நபருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டால், அதே எண்ணை இந்தியாவில் மற்ற யாருக்கும் வழங்க முடியாது.

Aadhaar Card இல் என்னென்ன தகவல்கள் இருக்கும்  

ஆதார் அட்டையில் உங்களின் Photo, Name, Date of Birth, Gender, Father Name, Mobile Number, Address மற்றும் Aadhaar Number போன்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

மேலும் உங்களின் இரண்டு கைகளின் விரல் ரேகைகள் மற்றும் கருவிழி தகவல்களும் இருக்கும். இதை பயோமெட்ரிக் தகவல்கள் என்று கூறுவர். இந்த பயோமெட்ரிக் விவரங்கள் ஆதார் Database இல் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும்.

ஆதார் அட்டையின் நன்மைகள் 

  • ஆதார் அட்டையானது இந்திய அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட தனித்துவ அடையாள எண் ஆகும். எனவே இந்தியாவில் எங்கிருந்தும் அடையாளம் (identity card) மற்றும் முகவரிக்கான (Address) சான்றாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • ஒரு பயனாளரின் வங்கிக்கணக்கிற்கு ஆதார் எண் மூலமாகவே Money Transfer செய்ய முடியும்.
  • ஒய்வூதிய பயனாளர்கள் மற்றும் பிற நபர்கள் கைரேகை மூலமாகவே பணத்தை Withdraw செய்ய முடியும். இது படிப்பறிவு அற்ற மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
  • தற்போது  அரசாங்கத்தின் அனைத்து சலுகைகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  
  • அரசாங்கத்தால் கொண்டு வரப்படும் திட்டங்கள் பொதுமக்களை நேரடியாக சென்றடைவதற்கு ஆதார் முக்கிய பங்காற்றுகிறது.
  • PF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கு ஆதார் சரிபார்ப்பு செய்ய வேண்டும். இது PF பணத்தை Online மூலம் Withdrawal செய்வதற்கு துணைபுரிகிறது.
  • மேலும் இதுபோன்ற பல்வேறு சரிபார்ப்புகளுக்கு (Authentication) ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டைக்கு Apply செய்வதற்கு தேவையான Documents 

ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது அதற்க்கு சில ஆவணங்கள் தேவைப்படுகிறது. அவற்றைப் பின்வருமாறு வரிசைப்படுத்தியுள்ளேன்.

1. Identity Proof

2. Address Proof

3. Proof for Date of Birth

Identity Proof க்கான ஆவணங்கள் 

Passport/ Driving License/ Ration Card/ PAN Card/ NREGA Card/ Voter ID/Credit with Photo/ Debit Card with Photo/ Pensioners Photo Card/ Arms License/ Govt ID Card/ Address Card/ Identity Certificate with Photo/ Kissan Photo Passbook

Address Proof க்கான ஆவணங்கள் 

Passport/ Driving License/ Ration Card/ Voter ID/ NREGA Card/ Gas Bill Connection/ Arms License/ Govt ID Card/ Address Card/ Kissan Photo Passbook/ Electricity Bill/ Water Bill/ Receipt of Property tax/ Insurance Policy/ Credit Card Statement/ Vehicle Registration Certificate

Date of Birth க்கான ஆவணங்கள் 

Birth Certificate/ SSLC Book/ Certificate/ Passport/ Photo ID card having Date of Birth/ issued by Recognized Educational Institution/ PAN Card/ Marksheet issued by any Government Board or University/ Government Photo ID Card/ Photo Identity Card issued by PSU containing DOB

Aadhaar Card யை Online மூலம் எவ்வாறு Apply செய்வது 

Step 1: நீங்கள் முதலில் https://ask.uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 

Step 2: இந்த பக்கத்தில் ஏற்கனவே Indian Resident மற்றும் Mobile Number என்று தேர்வு செய்யப்பட்டிருக்கும்.

Enter Your Mobile Number and Click Send OTP

இப்பொழுது உங்களின் மொபைல் நம்பர் மற்றும் Captcha வை Enter செய்து Send OTP என்பதை கிளிக் செய்யவும்.

Step 3: உங்களின் மொபைல் எண்ணிற்கு வந்த OTP நம்பரை உள்ளிட்டு Submit OTP & Proceed என்பதை அழுத்தவும்.

Type OTP Number and Click Submit OTP & Proceed Button.

Step 4: இப்பொழுது நாம்  புதிய aadhaar Card க்கு Apply செய்வதால் New Enrolment என்பதை தேர்வு செய்க.

Select New Entrolment for New Aadhaar Card Apply Online

Step 5: உங்களின் Full Name, Date of Birth, Gender மற்றும் Resident Type போன்றவற்றை நிரப்பி Save & Proceed என்பதை கிளிக் செய்க.

Enter Your Details and Click Save & Proceed - New Aadhaar Card Apply Online

Step 6:  உங்களிடம் Identity Proof மற்றும் Address Proof இருந்தால், I have valid documents as proof of Identity and Proof of Address என்பதை தேர்வு செய்யவும்.

Select I Have Valid Documents Option

ஒருவேளை உங்களிடம் இல்லையென்றால் இரண்டாம் Option யை தேர்வு செய்யலாம். இதில் உங்களின் உறவினர் ஒருவரின் ஆதார் அட்டையை அடையாள மற்றும் முகவரி சான்றாக பயன்படுத்தி கொள்ளலாம். 

இருப்பினும், அவர் உங்களின் உறவுக்காரர் என்பதற்கான ஒரு Valid Document யை நீங்கள் வைத்திருக்க வேண்டும்.

Step 7: உங்களின் Address மற்றும் Contact details யை நிரப்புக. இங்கு Email Id என்பது கட்டாயம் இல்லை.

இருப்பினும், நீங்கள் Email Id யை கொடுக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். 

நீங்கள் Email ID யை கொடுத்தால் அதை Verify செய்ய வேண்டும். 

அது எப்படி என்றால் Verify என்ற லிங்கை கிளிக் செய்தவுடன், Send OTP என்ற பட்டன் வரும். அதை கிளிக் செய்ய வேண்டும்.

இப்பொழுது உங்களின் Email ID க்கு ஒருமுறை கடவுச்சொல் (OTP) எண் வரும். அதை Enter செய்து Verify OTP என்பதை கிளிக் செய்தால் உங்களின் Email ID Verify ஆகிவிடும்.

Enter Address Details and Click Save & Proceed

Step 8: இப்பொழுது நீங்கள் Enter செய்த அனைத்து தகவல்களும் ஒரே பக்கத்தில் தோன்றும். அவை அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Now Click Submit

பிறகு Check box யை டிக் செய்து Submit செய்யவும்.

Step 9: உங்களின் ஆதார் விண்ணப்பம் இப்பொழுது வெற்றிகரமாக Submit செய்யப்பட்டது. மேலும் திரையில் தோன்றும் Appointment ID யை குறித்துக்கொள்ளவும்.

Now Your Application has been submitted For New Aadhaar Card

Appointment யை Book செய்தல் 

நீங்கள் Online மூலம் விண்ணப்பத்தை Submit செய்தால் மட்டும் போதாது. உங்களின் கைரேகை மற்றும் கருவிழியை ஸ்கேன் செய்ய அருகில் உள்ள ஆதார் சென்டருக்கு செல்ல வேண்டும்.

அதற்கான Appointment யை எவ்வாறு Book செய்வது என்பதை பற்றி காணலாம்.

Step 10: Book Appointment என்ற பட்டனை அழுத்தவும்.

Step 11: Search by Center name, Search by pincode மற்றும்  Search by Villages

இவற்றில் ஏதாவது ஒன்றின் மூலம் உங்களுக்கு அருகில் உள்ள ஆதார் சென்டரை தேடலாம்.

Step 12: Enrolment Center திரையில் தெரிந்தவுடன் Book Appointment என்பதை கிளிக் செய்யவும்.

Step 13: இப்பொழுது உங்களுக்கு ஒரு காலண்டர் தோன்றும். அதில் நீங்கள் செல்ல விரும்பும் தேதி, நேரம் போன்றவற்றை தேர்வு செய்யலாம்.

Select Slots

குறிப்பு:

காலண்டரில் இருக்கும் நாட்கள் பச்சை நிறத்தில் இருந்தால் மட்டுமே உங்களால் தேர்வு செய்ய முடியும். சிவப்பு நிறத்தில் இருந்தால் ஏற்கனவே தேதிகள் நிரம்பி விட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

Step 14: நீங்கள் தேதியை தேர்வு செய்த பிறகு, அந்த குறிப்பிட்ட நாளில் அடையாள சான்று, முகவரி சான்று, பிறந்த தேதிக்கான சான்று போன்றவற்றின் ஒரிஜினல் Document களை எடுத்துச்செல்ல வேண்டும்.

Step 15: ஆதார் சென்டரில் அனைத்தும் முடிந்த பிறகு ஒரு ரசீதை கொடுப்பார்கள். அதை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இது உங்களின் Aadhaar Status அறிந்துகொள்ளவும் மற்றும் Aadhaar card யை Download செய்யவும் உதவும்.

முடிவுரை 

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு நபரும் ஆதார் அட்டையை பெறுவது  முக்கியமாகும். இது போலி நபர்களை ஒழித்து உண்மையான  நபர்களை கண்டறிய உதவுகிறது.

நீங்கள் Aadhaar Card பெறுவதற்கு மேலே சொன்னபடி Online மூலம் Apply செய்வது சிறந்ததாகும். மேலும் இதன் மூலம் நேரத்தையும் சேமிக்க முடியும். ஒருவேளை நேரடியாக சென்று விண்ணப்பித்தால் நேரவிரயமும், அலைச்சலும் ஏற்படக்கூடும். எனவே Online சேவைகளை பயன்படுத்தி உங்களின் மதிப்புமிக்க நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

இன்று நீங்கள் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டீர்கள். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment பிரிவில் பதிவிடவும்.

0 0 votes
Article Rating

Santhosh

நான் ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ப்ளாகர் / டிஜிட்டல் மார்கெட்டராக பணியாற்றி வருகிறேன். fitness பைத்தியம், ஊர் சுற்றும் வாலிபன், பாடகர், குழந்தை பிரியர். மேலும் நிறைய இருக்கிறது ஆனால் சொன்னால் நம்ப மாடீங்க:)))

Related Post

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments