நரம்புத் தளர்ச்சி (Narambu Thalarchi Solution in Tamil)

By Santhosh

Updated on:

100% Narambu Thalarchi குணமடைய இதை செய்யவும்

குறிப்புச்சட்டகம் மறை

இன்றைய காலகட்டத்தில் நம் சமூகத்தில் பத்தில் இரண்டு பேர் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு அவதிக்கு உள்ளார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. 

அதற்கு மிக முக்கியமான என்னவென்றால்  நம்முடைய தினசரி பழக்கவழக்கங்கள், உணவு உண்ணும் முறை, தூக்கமின்மை போன்ற பல காரணங்களை கூறலாம்.

நாம் இந்த போஸ்டில் நரம்புத் தளர்ச்சி என்றால் என்ன? நரம்புத் தளர்ச்சி எதனால் ஏற்படுகின்றது? அதன் அறிகுறிகள் என்ன? அவைகளை எவ்வாறு குணப்படுத்துவது என்பதை முழுமையாக பார்ப்போம்.

நரம்பு தளர்ச்சியை மிக எளிமையாக குணப்படுத்தும் ஒரு நோயா? என்று கேட்டால்  ஆனால் ஆம் என்றே கூறலாம்.

 அது மிக எளிதாக குணப்படுத்தும் ஒரு பிரச்சனைதான். முதலாவது அதற்கான காரணங்கள் என்ன என்பதை தெரிந்து கொண்டால் நாம் எளிமையாக குணப்படுத்திவிடலாம்.

Narambu Thalarchi meaning in english

நரம்பு தளர்ச்சியை ஆங்கிலத்தில் நெர்வஸ் டிஸ்ஆர்டர் (Nerves Disorder), நர்ஸ் வீக்னஸ் (Nerves Weakness) என்று அழைப்பார்கள். 

நரம்புகள் நம் உடம்பில் மிக முக்கியமான செயல்களை ஆற்றுகிறது குறிப்பாக ஒரு மனிதனின் உடம்பில் பத்தாயிரம் நரம்புகள் உள்ளன என்பதை மருத்துவ ஆதாரங்கள் கூறுகின்றன.

நம் உடலின் செயல்திறன், ஆற்றல், முழுமையாக அனுபவிக்க நரம்புகளை மிக முக்கியமான பங்காற்றுகிறது. நம்முடைய சந்தோஷம் துக்கம் என அனைத்திலும் மிக முக்கியமான பங்குதாரராக இருப்பது நம்முடைய மனதிற்கு அடுத்தபடியாக நரம்புமண்டலம் தான்.

உண்மையில் நம்முடைய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு உள்ளதா என்பதை மிக எளிமையாக நம்மாலே சில நரம்புத்தளர்ச்சி அறிகுறிகளைக் கொண்டு நாம் கண்டுபிடித்து விடலாம். மேலும் இதனை விரிவாக பார்ப்போம்:-

நரம்பு தளர்ச்சி வர காரணம், Narambu Thalarchi Reasons

நரம்புத் தளர்ச்சியின் அறிகுறிகள் பொதுவாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொரு காரணங்களைக் கொண்டும் மாறுகிறது.

இப்போ இருக்கிற காலகட்டத்தில் பத்தில் ஏழு பேருக்கு இருக்கும்  நீரிழிவு நோய் இதற்கு காரணம்.

நீரிழிவு நோய் பெரும்பாலும் இரத்த நாளங்களையும் நரம்பு மண்டலத்தில் முதலில் பாதிக்கிறது.

மேலும் நாம் சாப்பிடும் ஒவ்வொரு நீரிழிவு நோய்க்கான மருந்துகளும் நம்முடைய செல்களில் தேவையற்ற சர்க்கரையை ஒவ்வொரு செல்களில் கலக்கிறது ஆகையால் நம்முடைய நரம்பு செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்படைகிறது.

 மேலும் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் சாப்பிடும் பிராய்லர் கோழிகளும் முட்டைகளும் நம்முடைய ஹார்மோன்  சமச்சீரற்ற தன்மையை உருவாக்குகிறது.

 இப்பொழுது இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் மன அழுத்தமும் நரம்பு மண்டலம் பாதிப்பதற்கு மிக முக்கிய பங்காற்றுகிறது.

பெரும்பாலும் சிறுநீரக பிரச்சினைகளால் அவதிப்படும் ஒவ்வொருவரும் நரம்பு மண்டல பாதிப்பை அனுபவிக்கின்றனர் என்று ஒரு ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நரம்புத் தளர்ச்சி அறிகுறிகள், Narambu Thalarchi symptoms tamil

Narambu thalarchi arikurikal குறிப்பாக கால் மரத்துப்போதல், எரிச்சல், சோர்வு, கை கால்களில் நடுக்கம், பலவீனம், பாதங்களில் குத்துதல், தூக்கமின்மை, தலைவலி, தடுமாற்றம், தசை பலவீனம், மேலும் மகிழ்ச்சியான மனநிலை இன்றி காணப்படுவர் ஆகியோரை கூறலாம்.

நம் உடம்பில் பொதுவாக எத்தனையோ மண்டலங்கள் உள்ளன. ஆனால் அதில் மிக மிக மிக முக்கியமான மண்டலம் நரம்பு மண்டலமும், சிறுநீரக மண்டலமும், நம்முடைய ஜீரண மண்டலமும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிக முக்கிய பங்காற்றுகிறது. 

Narambu Thalarchi Fruits

நரம்புத் தளர்ச்சிக்கு பழங்களில் மிக முக்கிய பங்கு இருக்கிறது. நம்முடைய நரம்பு செல்களில் ஏற்படும் பாதிப்புகளை அது வெகுவாக நீக்கி சரிசெய்து குணப்படுத்துகிறது என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அவற்றில் மிக முக்கியமாக நாம் ஒரு ஐந்து வகையான பழங்களை பார்ப்போம்.

செவ்வாழைப் பழம்

செவ்வாழைப்பழம் நரம்புமண்டலம் பாதித்தவர்களுக்கு ஒரு அற்புதமான பழமாகும். அதில் இருக்கும் பீட்டா கரோட்டின் (β-Carotene) ஆன்டி ஆக்சிடன்ட் செல்களை புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டது. அனைத்தும் உங்களுடைய நரம்பு மண்டலத்தை வெகுவாக பலப்படுத்துகிறது. 

அதுமட்டுமல்லாமல் இந்த நரம்பு பிரச்சினைகளை அதிசீக்கிரத்தில் குணப்படும் ஆற்றல் கொண்டது.

இரவு தூங்க செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன் 48 நாள் தொடர்ந்து ஒரு செவ்வாழை பழம் மற்றும் பால் அருந்தி வந்தால் நரம்புமண்டலம் பலப்படும், நரம்புத்தளர்ச்சி அதிசீக்கிரத்தில் சரியாகும் என்று பல ஆராய்ச்சிகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் எனக்கு நீரிழிவு நோய் இருக்கிறது நான் எப்படி செவ்வாழைப் பழத்தை தினமும் சாப்பிடுவது? என்று.

ஒரு உண்மையை கூறுகிறேன். செவ்வாழைப்பழம் உங்களுடைய நரம்பு மண்டலத்தை மட்டுமல்ல உங்களுடைய நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது.

 • அது உங்கள் உடம்பை குளிர்ச்சி ஆக்குகிறது. 
 • அது மட்டுமல்ல உங்களுடைய இறந்த செல்களை புதுப்பிக்கிறது.
 •  உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
 • உங்களுடைய கணையம் புத்துணர்ச்சி பெற உதவுகிறது.

மாதுளை பழம்:

மாதுளை பழம் நரம்பு மண்டலத்திற்கு மிகவும் ஒரு அற்புதமான மருந்தாகிறது. அதிலிருக்கும் ஆர் பி சி மற்றும் அதில் இருக்கும் பி காம்ப்ளக்ஸ் உங்களுடைய நரம்பு மண்டலத்திற்கு ஒரு அற்புதமான சக்தியை அளிக்கிறது.

மேலும் நரம்பு மண்டலம் பாதிப்பால் தூக்கமின்மை உள்ள அனைவருக்கும் இது ஒரு சிறந்த மருந்தாகும்.

இரவில் மாதுளம்பழத்தை ஒரு மண்டலம் சாப்பிட்டு வருவோருக்கு தூக்கமின்மை, நரம்பு பாதிப்புகள் அனைத்தும் ஒருசேர குணமாகிறது.

மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் சம்பந்தமான உடலுறவு பிரச்சினைகளிலும் மாதுளை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

அவர்களுக்கு இருக்கும் நரம்பு ரீதியான பலவீனம், வெள்ளைப்படுதல், ஆண்களுக்கு விந்து நீர்த்துப்போதல், சீக்கிரம் வெளிவருதல், உடல் சூடு போன்ற அனைத்தையும் ஒருசேர சரி செய்கிறது.

மேலும் மாதுளம்பழத்தை உரித்து அதிலிருக்கும் முத்துக்களை அப்படியே சாப்பிடுவதே சிறந்தது என்றும், அதை பழச்சாறாக அருந்துவதை காட்டிலும் அதை அப்படியே சாப்பிடுவது மிகவும் சிறந்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அத்திப்பழம்:

அத்திப்பழம் ஒரு மிகச்சிறந்த நரம்பு போஷாக்கு கொடுக்கின்ற ஒரு பாரம்பரிய மருந்து ஆகும்.

நரம்புகள் வலுப் பெறுவதற்கும், உடல் பலவீனத்தை போக்குவதற்கும், தினமும் காலை இரண்டு அத்திப்பழம் மற்றும் மாலை இரண்டு அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் இரண்டு வாரத்தில் மிக அற்புதமான பலனை அடையலாம்.

திராட்சை பழம்:

திராட்சைப்பழம் பல வகைகள் உண்டு. அதில் குறிப்பாக பன்னீர் திராட்சை என்று அழைக்க கூடிய கருப்பு விதை உள்ள திராட்சையை நரம்புகளுக்கு போஷாக்கு கொடுக்கின்ற ஒரு பழமாக விளங்குகிறது.

இப்போது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் அதில் இருக்கும் விதையானது நீரிழிவு நோயாளிகளுக்கும், கால் மரத்துப்போதல், கால் எரிச்சல், பாத எரிச்சல் மற்றும் கை கால்கள் பலவீனத்தை போக்கும் மிக முக்கியமான சத்துக்கள் நிறைந்து உள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

ஆகையால் திராட்சை பழத்தை விதையோடு தினமும் காலையும் மாலையும் சாப்பிட்டு வர சிறந்த பலனளிக்கிறது. நான் இதை பலரிடம் கண்டு வியந்துள்ளேன்.

திராட்சை பழத்தின் அற்புத பலனை அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை பல நேரங்களில் பலரிடம் பகிர்ந்து அதில் பலனடைந்தவர்கள் ஏராளமானவர்கள்.

பேரிச்சம்பழம்:

பேரிச்சம்பழம் அரபுநாடுகளில் கிடைக்க கூடிய ஒரு அற்புதமான பழம். இந்தியாவிலும் சில இடங்களில் அதை பயிரிடுகின்றனர்.

பேரீச்சம் பழம் தினமும் பசும்பாலுடன் சேர்த்து பருகி வர நல்ல மாற்றத்தை உடலில் காணலாம். எலும்புகள் உங்களுடைய தசைநார்கள் நரம்புகள் அனைத்தும் ஒருசேர பலன் அடைகிறது.

தினமும் இரண்டு அல்லது மூன்று பேரீச்சம் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை அடையலாம்.

ஆரஞ்சு பழம்:

ஆரஞ்சு பழம் என்பது நம்முடைய பாரம்பரியமான சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு பற்றி தான் நான் கூறுகின்றேன்.

ஆரஞ்சு பழத்தில் போதுமான அளவு வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் நிறைந்துள்ளது.

அவை நம் நரம்பு செல்களில் உள்ள பிரச்சனைகளை போக்கி புத்துணர்வு அளிக்கிறது. அது மட்டுமின்றி நம்முடைய நரம்பு மண்டலங்களை அமைதிப்படுத்துகிறது.

நரம்பு தளர்ச்சி உணவுகள், Narambu Thalarchi Food in tamil

பெரும்பாலும் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டோர் தங்கள் நரம்புகள் பலம் பெற எந்த உணவுகளை உண்ண வேண்டும் என்று பல மருத்துவரிடம் சென்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Narambu Balam Pera

ஆனால் நம்முடைய பாரம்பரிய உணவுகளில் நம்மளுடைய நரம்பு மண்டலங்களை வலுப்படுத்தக்கூடிய சத்தான உணவு முறைகள் நம்மிடமே உள்ளன.

ஆனால் இதை ஆங்கிலத்தில் இன்று பலர் இணையதளத்தில் கூட தேடி வருகின்றனர்.

நான் ஒரு பத்து வகையான நரம்பு மண்டலத்தை பல படுத்துகிற உணவு முறைகளை கீழ்க்கண்டவாறு கொடுக்கிறேன்.

இதில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டை தினசரி பயன்படுத்தினால் போதுமானது.

Narambu Thalarchi

பிரண்டை: 

பிரண்டை நாம் பாரம்பரியமாக உபயோகப்படுத்திய ஒரு சிறந்த நரம்பு பலப்படுத்துகின்றன உணவாகும்.

பிரண்டையை துவையலாகச் வாரத்தில் மூன்று நாள் நம்முடைய உணவில் சேர்த்துக் கொண்டால் போதுமானது.

அவை நம்முடைய இறந்த செல்கள் எல்லாம் புதுப்பித்து நம்முடைய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும் பலப்படுத்தும் செய்கின்றது.

பிரண்டை பறித்து அதில் உள்ள பிஞ்சான தண்டுகளை மாத்திரம் நாம் எடுக்க வேண்டும். 

அதில் உள்ள நாடுகளை நன்றாக உரித்து சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வீட்டில் எப்படி துவையல் செய்வோமோ அப்படி செய்து அதை உபயோகப்படுத்தினால் போதுமானது. 

உளுந்து:

இது நம் பாரம்பரிய உணவு உளுந்தங்களி நம்முடைய முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு இப்படிப்பட்ட உணவுகளை தேர்ந்தெடுத்து உண்டனர். 

உளுந்தில் நம்முடைய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் முக்கியமான சத்துக்கள் அனைத்தும் நிறைந்த ஒரு பருப்பு வகையாகும்.

அதில் மிக முக்கியமாக உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ நாம் அன்றாடம் நம்முடைய ஒரு வேளை உணவாக எடுத்துக் கொண்டோமானால் நம்முடைய நரம்புமண்டலம் 100% பலப்படும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

அதுமட்டுமில்லாமல் இது நம்முடைய எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், ஜீரண மண்டலம் மற்றும் நம்முடைய தசைநார் மண்டலம் ஆகிய அனைத்தையும் பலப்படுத்துகிறது.

குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உளுந்தங்களி செய்து கொடுத்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுகிறார்கள்.

மற்றும் வயதான மெனோபாஸ் முடிந்த பெண்களுக்கும் தங்கள் எலும்புகள் உறுதி செய்வதற்கு இந்த உளுந்து மிக முக்கிய பங்காற்றுகிறது.

வயதானவர்களுக்கும் தங்களுடைய வயது முதிர்வின் காரணமாக வரும் நரம்பு பலவீனத்தை உளுந்தை கொண்டே நாம் சரி செய்ய முடியும். 

உளுந்தில் மிக முக்கியமாக நாம் கருப்பு முழு உளுந்தை பயன்படுத்த வேண்டும்

ஈரல் :

ஈரல் மிக முக்கியமான ஒரு பி காம்ப்ளக்ஸ் நிறைந்த ஒரு உணவாகும்.

அதில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் அனைத்து பீஸ் பி சத்துக்கள் நம் நரம்பு மண்டலத்திற்கு தேவையான ஒரு டானிக்காக விளங்குகிறது.

வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை ஒவ்வொருவருக்கும் தேவையான பாதிப்பைப் பொறுத்து மாறுபடலாம்.

மிகவும் நரம்புமண்டலம் பாதித்தவர்களுக்கு வாரம் இரண்டு முறை ஈரலை சமைத்து கொடுக்கவேண்டும்.

இப்படி செய்தால் மிக அற்புதமான மாற்றத்தை காணலாம். கால் மரத்துப்போதல் எரிச்சல் போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கி அவர்களுடைய தசையும் நரம்பும் ஒருசேர பலம் அதை கண்கூடாக பார்க்கலாம். 

முருங்கைக்கீரை: 

முருங்கை ஒரு அற்புதமான மருத்துவ குணம் கொண்ட ஒரு மரமாகும்.

 அவற்றில் முக்கியமாக முருங்கைக் கீரையில் இருக்கும் சத்துக்கள் 

 • பி-காம்ப்ளக்ஸ் 
 • வைட்டமின் சி 
 • வைட்டமின் ஏ 
 • பீட்டா கரோட்டின் 

போன்ற அனைத்து சத்துக்களும், உங்களுடைய நரம்பு மண்டலம் மற்றும் கழிவுகளை வெளியேற்றுவதற்கான தேவையான நுண்ணூட்டச் சத்துக்கள் அனைத்தும் ஒருசேர கிடைக்கிறது.

நீங்கள் வாரத்தில் மூன்று நாள் முருங்கைக்கீரை சமைத்தோ அல்லது சூப் செய்தோ சாப்பிட்டு வர நல்ல பலனை அடையலாம்.

மேலும் முருங்கை பூவை பசும்பாலில் ஊறவைத்து காய்ச்சி குடித்துவர உங்களுடைய நரம்பு மண்டலமும் உங்களுடைய இனப்பெருக்க மண்டலமும் ஒருசேர பலனடைந்து ஒரு நல்ல இல்லற வாழ்வை கொடுக்கிறது.

 கீரை வகைகள்:- 

நம்முடைய முன்னோர்கள் தங்களுடைய அன்றாட வாழ்வில் தினம் ஒரு கீரை உண்டு வந்துள்ளனர்.

அதற்கான மிக முக்கியமான காரணம் என்னவெனில் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலுக்கு தேவையான நுண்ணுயிர் சத்துக்களைக் கொடுத்து உங்கள் உடலை மிகவும் போசாக்கான ஒரு பலம் நிறைந்த மனிதனாக மாற்றுகிறது.

குறிப்பாக நரம்பு மண்டலம் பலப்படுத்துவதற்கு மணத்தக்காளி கீரையும் பொன்னாங்கண்ணிக் கீரையை உங்களுடைய மதிய உணவுகள் அன்றாடம் உண்டுவர நல்ல பலனை காணலாம். 

வெற்றிலை:

நம் முன்னோர்கள் வெற்றிலையை சாப்பாட்டிற்கு பின் அன்றாடம் சுவைத்து வந்தனர்.

அதற்கு பல காரணங்கள் உண்டு குறிப்பாக உங்களுடைய ஜீரண மண்டலம் வலுப்பெற்று நீங்கள் சாப்பிட்ட ஆகாரம் உங்களுடைய உடம்பில் ஒரு சேர சேர்ந்து நச்சுக்கள் அதிலிருந்து பிரிவதற்கு வெற்றிலை மிக முக்கிய பங்காற்றுகிறது.

மேலும் உங்களுடைய நரம்பு மண்டலம் வலுப்பெற்று நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் வெற்றியடைய வெற்றிலை உங்களுக்கு உறுதுணையாக நிற்கிறது. 

மீன் உணவுகள்: 

பொதுவாக புலால் உணவுகளை வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ கொண்டு வருவது நம்முடைய பாரம்பரிய பழக்கமாக இருந்துள்ளது.

அது குறிப்பாக மீன் உணவுகளான சாலை மீன் மற்றும் மஞ்சள் ஒளி போன்ற பலவகையான மீன்களில் இருக்கும் ஒமேகா 3 ஆகும்.

 • ஒமேகா ஃபேட்டி ஆசிட் நம்முடைய உடல் உறுதிக்கும் நரம்பு செல்கள், நரம்பு செல்கள் புத்துணர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றுகிறது.
 • மீன்களில் வைட்டமின் ஈ, கால்சியம் போன்ற சத்துக்கள், புரதச் சத்துக்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

உங்களுடைய உடலை வலுப்படுத்துவதற்கும், நரம்பு முறுக்கேற்றுக்கும் மீன் மிக முக்கியமான ஒரு உணவாக திகழ்கிறது.

இதற்கு எடுத்துக்காட்டாக நீங்கள் கடலோரம் வசிக்கும் மக்களை பார்த்தீர்களானால் அவளுடைய உடல் கட்டுமஸ்தாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணம்.

அவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் மீன் உணவை பெரும்பாலும் தினமும் ஒரு வேளை அல்லது இரண்டு வேளை சாப்பிட்டதே அதற்கான காரணம்.

முந்திரி:

முந்திரி, பாதாம், பிஸ்தா வாரமிருமுறை உங்களுடைய தின்பண்டம் ஆக எடுத்து வர உங்களுடைய நரம்பு மண்டலம் மிகவும் வலுப்படும்.

 • அவற்றில் இருக்கும் 
 • ஜிங்க் பொட்டாசியம் 
 • மெக்னீசியம் 
 • வைட்டமின் ஈ 
 • புரதச்சத்து உங்களுடைய நரம்பு மண்டலத்தில் வலுப்பெற உதவுகிறது.

வேர்க்கடலை:

வேர்கடலை மிக சத்தான உணவாகும். மிகவும் மலிவான அதே நேரத்தில் சத்தும் உயர்ந்த டிரைபுட்ஸ் வகைகள் வேர்க்கடலை இன்றியமையாத ஒரு பொருளாகும்.

வேர்கடலையில் இருக்கும் புரதச்சத்து, மெக்னீசியம் பி காம்ப்ளக்ஸ் போன்ற நுண் செலினியம் போன்ற நுண்ணுயிர் சத்துக்கள் உங்களுடைய உடம்பிற்கும் வலுப் பெறுவதற்கும் உங்களுடைய உடம்பு மேலும் எந்த எந்த பாதிப்புகளும் அடையாதவர் பார்த்துக் கொள்வதற்கு மிக முக்கிய பங்காற்றுகிறது.

இது உங்களுடைய இறந்த செல்களை புதுப்பித்து உங்களுடைய கழிவுகளை நச்சுக்களை நீக்கி உடைய உடம்புக்கு தேவையான போஷாக்கு கொடுக்கிறது.

மேலும் வேர்க்கடலை வறுத்த வேர்க்கடலை அவித்து வேர்க்கடலை சாப்பிடலாம் பச்சையாக சாப்பிட்டால் மிகவும் சிறந்தது. 

ஆனால் அளவாக சாப்பிட வேண்டும் இல்லையெனில் உங்கள் உடம்பில் பித்தம் கூடி சில உபாதைகள் ஏற்படும்.

வேர்க்கடலை நீங்கள் சாப்பிட்ட பின்பு வெல்லம் அல்லது கருப்பட்டி தூளையும் சேர்த்து சாப்பிடுவது மிக நல்லது.

பொதுவாக கோவில்பட்டி போன்ற இடங்களில் கடலைமிட்டாய் மிகவும் சிறந்த பரிசு பெற்ற ஒரு தின்பண்டம் ஆக தமிழகத்திலும் இந்தியாவிலும் விளங்குகிறது. 

பாசிப்பயறு:

பாசிப்பயறில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கிய பயறு வகைகளில் ஒன்றாகும்.

அதை நீங்கள் உங்கள் தோல் பளபளக்கும் வெளிப்புறமாக தேய்ச்சி குளிக்கலாம். முகத்திற்கு ஃபேஸ் பேக் வரை அதை பயன் படுத்தலாம்.

உங்களுடைய உடல் கட்டுவதற்கு தேவையான உடலுக்கு புரதம் வைட்டமின் சத்துக்கள் உடம்பில் தேவையான அளவு கிடைப்பதற்கு தினம் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் பாசிப்பயறை சாப்பிட வேண்டும்.

வேக வைத்து அல்லது முளைகட்டிய பாசிப்பயறு அல்லது ஒரு சாலட் ஆகவோ செய்து நீங்கள் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

பாசிப்பயறில் இருக்கும் புரதச்சத்து உங்கள் உடம்புக்குத் தேவையான பைபர் சத்துக்கள் கொடுக்கிறது. ஆகையால் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உங்கள் உடலை தூய்மையாக வைக்க உதவுகிறது.

வாழைத்தண்டு :

வாழைத்தண்டு நரம்பு மண்டலம் பலப்படுத்தும் ஓர் அற்புத உணவு. இதை நீங்கள் சாறாகவோ சமைத்த பருகலாம். 

வாழைத்தண்டில் இருக்கும் வைட்டமின்கள் மினரல்ஸ் உள்ள நரம்பு மண்டலத்தை புத்துணர்வு பெறச் செய்து உங்களுடைய நரம்பு செல்களை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

Narambu thalarchi exercise – நரம்பு தளர்ச்சி குணமாக உடற்பயிற்சி

உங்கள் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு உணவுடன் கூடவே உடற்பயிற்சியும் மிக முக்கியமான பங்காற்றுகிறது.

உங்கள் இரத்த ஓட்டம் எந்தளவு ஆரோக்கியமாக செல்கிறதோ அந்த அளவுக்கு மூளை நரம்பு மண்டலம் மிக புத்துணர்ச்சியாக இருக்கும்.

அதற்கு நடைப்பயிற்சி ஒரு சிறந்த பயிற்சியாகும். காலை 5 மணிக்கு எழுந்து நீங்கள் செல்லும் நடை பயிற்சி உங்களுடைய நரம்புமண்டலம் எந்த வகையிலும் பாதிக்காதவாறு உங்களுக்கு தேவையான ஆக்சிஜன் உங்கள் உடம்பில் பெற்று உங்கள் நரம்பு மண்டலம் புத்துணர்ச்சியாக செயல்பட அந்த நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

மிதமான ஓட்டப்பயிற்சி உங்களுடைய இருதய செயல்பாட்டை அதிகப்படுத்தி உங்கள் இரத்தத்தில் மிக வேகமாக உங்கள் உடம்பில் பாய்வதால் உங்கள் உடம்புக்கு புத்துணர்வு பெற்று உங்க மனதில் இருக்கும் ஸ்ட்ரெஸ் நீங்கி உங்களுடைய ஹார்மோன் மிக ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது.

உங்களுடைய மொத்த உறுப்புகள் செயற்பாட்டை அது உபயோகப்படுத்துவதால் உங்கள் நரம்பு மண்டலமும் சேர்த்து வலுப்பெறுகிறது.

நரம்பு தளர்ச்சி நீங்க யோகா, Narambu Thalarchi yoga

Narambu Thalarchi

நரம்பு தளர்ச்சிக்கு யோகா பயிற்சியில் தீர்வு உள்ளதா என்று பல பேர் என்னிடம் கேட்டதுண்டு. ஆம் 100% தீர்வு உள்ளது.

கீழ்க்கண்ட யோகப் பயிற்சியை தினமும் காலை 6 மணிக்கு மற்றும் இரவு மாலை 6 மணிக்கும் தவறாது ஒரு மாதம் செய்து வந்தால் அற்புத பலனை அடையலாம்.

திரிகோணாசனம்:

யோகா மேட் அல்லது பாய் மீது கால்களை ஒன்னரை அடி தூரம் விலக்கி வைத்து நிமிர்ந்து நிற்கவும். 

கைகளை பக்கவாட்டில் இணையாக நீட்டி நிறுத்தவும்.

 • வலது புறமாக பக்கவட்டை வளைத்து வலது கால் முட்டியை வலது கையால் இறுக பற்றவும்.
 •  கால் முட்டியை வளைத்து தலையை திருப்பி இடது கையை உயர்த்தி 90 டிகிரிக்கு நேராக வைத்து கை கட்டை விரலை பார்க்கவும்.
 • அப்படியே இருக்க வேண்டும் இப்போது நிமிர்ந்து எழுந்து நிற்கவும். 
 • கைகளை பக்கவாட்டில் நேராக வைத்து இருக்க வேண்டும் மாற்று ஆசனமாக இடதுபுறம் வளைந்து மேலே சொன்ன மேலே சொன்னவற்றை 30 எண்ணிக்கை செய்ய வேண்டும். 
 • அல்லது இரண்டு என இரண்டு பக்கம் சேர்த்து ஒரு செட்டு என்று வைத்துக் கொண்டால் இரண்டு முறை செய்தால் போதுமானது அதாவது இரண்டு செட்கள் செய்ய வேண்டும்.

விபரீதகரணி:

விபரீதகரணி ஒரு அற்புதமான ஆசனம் ஆகும். இது எளிமையாக செய்யக்கூடிய ஆசனம் எந்த வயதினரும் செய்யலாம் ஆனால் குழந்தைகள் செய்யக்கூடாது 10 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் செய்யலாம். 

இது உங்களுடைய ஹார்மோனை சீராக்குகிறது உங்களுடைய நரம்புகளை பலப்படுத்துகின்றது. 

ஐம்புலன்களை ஆரோக்கியமாக வைக்கிறது. இது சர்வங்காசனம் ஈடான ஒரு ஆசனம் ஆகும்.

அவற்றின் பலனை இந்த எளிய ஆசனம் செய்து அடையலாம்.

 • விரிப்பின் மீது 3 அல்லது நான்கு இலவம் பஞ்சு தலையணைகள் அடுக்கி வைக்கவும் 3 போதுமானது.
 • தலையணையின் மீது முன்பகுதி நுழைக்கும் மையப் பகுதிக்கும் இடையில் அமரவும். 
 • மெதுவாக பின்னால் வளைந்து கைகளை தரையில் வைத்து ஒன்றில் படுத்து உச்சந்தலையை விரிப்பின்மீது வைக்கவும்.
 • கால்களை ஒன்று சேர்த்து மேலே உயர்த்தவும் அதே சமயத்தில் தலையை நகர்த்தி தோள் பட்டைகளை விரிப்பின் மீது படும்படி வைக்கவும்.
 • கால்களை 90 டிகிரிக்கு நீட்டிக் கொண்டு வரவும் உடல் கணம் முழுவதும் உங்கள் தோள்பட்டை கழுத்தில் இருக்கும்படி வைக்கவும். 
 • கைகளை சாதாரணமாக தலையணைக்கு பக்கவாட்டில் வைத்தால் போதுமானது.
 • இப்பொழுது உங்களுடைய மூச்சை கவனிக்கவும் சாதாரண மூச்சில் 100 எண்ணிக்கை இருந்து முடிந்ததும் கால்களை கீழே கொண்டு வந்து தரையில் வைத்து சிறிது ஓய்வு எடுக்கவும். 
 • பின்னர் திரும்பவும் கால்களை உயர்த்தி 100 எண்ணிக்கை செய்யவும் இது போல 10 முதல் 15 தடவை அதாவது 1000 முதல் 1500 எண்ணிக்கை செய்தால் போதும். 

சராசரியாக 15 நிமிடங்கள் ஆகும் இதை செய்து முடிக்கவும்.

விபரீதகரணி சிலிர்க்க வைக்கும் நன்மைகள் ஆங்கிலத்தில் படிக்கவும்

நவ்காசனம்:

இந்த நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் செய்து எளிமையாக அவற்றிலிருந்து குணமடைய உதவும்.

மேலும் உங்களுடைய ஆண்குறி தளர்ச்சி நீங்க இவ்வாசனம் சிறப்பாக உதவும் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

 • விருப்பங்களுக்கு கால்களை ஒன்று சேர்த்து மல்லாந்து படுக்கவும். 
 • இரண்டு கால்களையும் 90 டிகிரிக்கு உயர்த்தவும் பின்னர் கால் மூட்டு பகுதி அறை பகுதிகளை இரண்டு கைகளால் இறுகப் பிடித்தபடி வேகமாக பூமியை நோக்கி கொண்டு வரவும். 
 • அதே நேரத்தில் உடம்பை பூமியிலிருந்து உயர்த்தி இடுப்புப் பகுதி மட்டும் தரையில் மீது இருக்கும் படி வைத்து சமநிலையில் வந்ததும் கைகளை பிடித்து உள்ளங்கையில் சற்று உயர்த்தி நிறுத்தவும். 
 • இது ஒரு படகு நீரில் மிதக்கும் அமைப்பு போன்று இருக்கும். அதனால் இவரை நவ்காசனம் என்று அழைப்பர். 
 • 15 எண்ணிக்கை அப்படியே சாதாரண மூச்சில் இருந்து விட்டு முதலில் தலையை தரையின் மீது கொண்டு வந்து படுப்போம். 
 • பின்னர் கால்களை தரை மீது வைத்து சிறிது ஓய்வு எடுக்கவும். 
 • இதுபோல இவ்வாசனத்தில் 3 முறை செய்தால் போதுமானது. 

உடம்பை தளர்த்தி சவாசனம் என்று அழைக்கப்படுகிற ஓய்வு நிலைக்கு திரும்பவும்.

யோகமுத்ரா:

யோகமுத்ரா உங்களுடைய விந்து நீர்த்துப்போதல் நரம்பு தளர்ச்சி ஆகியவற்றை போக்குகிறது.

சிலருக்கு படபடப்பு கோபம் உணர்ச்சியை ஆகியவற்றையும் கட்டுப்படுத்தி சமநிலைப்படுத்துகிறது.

மிக எளிமையாக எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். 

 • விரிப்பின் மீது பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனம் செய்து அமரவேண்டும். அல்லது நீங்கள் சாதாரணமாக சம்மணம் போட்டும் அமரலாம். 
 • கைகளை பின்னால் கொண்டு வந்து வலது கை மணிக்கட்டை இடது கையால் பற்றி பிடித்து மெதுவாக முன்னால் குனிந்து நெற்றியை தரையில் படும்படி முயற்சிக்கவும். 
 • உங்கள் பிட்டப் பகுதியினை உயர்த்தக் கூடாது. எவ்வளவு உங்களால் வளைக்க முடியுமோ முயற்சிக்கவும் சாதாரண  மூச்சில் கண்களை மூடியபடி 50 எண்ணிக்கை அப்படியே இருக்கும். 
 • மெதுவாக எழுந்து நிமிர்ந்து அமரவும். திரும்ப முன்னால் வளைந்து செய்யவும் 3 முதல் 3 முறை செய்தால் போதுமானது. 

பின்னர் பத்மாசனத்தில் கண்களை மூடி சிறிது நேரம் இருந்து விட்டு கால்களை விரித்து நீட்டவும்.

https://www.youtube.com/watch?v=WPb6cwFjkio

ஆண் உறுப்பு தளர்ச்சி நீங்க

Narambu Thalarchi

நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு அதற்கு ஒரு அறிகுறியாக உங்களுடைய ஆண் உறுப்பு தளர்ச்சியாக இருக்கும்.

அதற்கு மேற்கண்ட உணவு முறைகளை நீங்கள் எடுத்துக் கொள்வதோடு நடைப்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

நடக்கும் போது குறிப்பாக கால்களை அகலமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீளமாக வைத்து நடப்பதன் மூலம் தேவையான ரத்த ஓட்டம் உங்களுடைய ஆணுறுப்புக்கு செல்லும்.

அப்படி செல்வதால் உங்களுடைய ஆண் உறுப்பு தளர்ச்சி நீங்கி மேலும் புத்துணர்வு பெறுகிறது.

அதுமட்டுமின்றி சில யோகப் பயிற்சிகள் அதற்கு மிக அருமையான பலன்களைக் கொடுக்கிறது.

அதில் குறிப்பாக ஜானு சிரசாசனம் என்ற ஒரு பயிற்சி உள்ளது, அந்த பயிற்சியை தினமும் நீங்கள் செய்யும் செய்வதன் மூலம் ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்குள் நீங்கள் அற்புதமான பலனை அடையலாம்.

மற்றொரு பயிற்சியாக விபரீதகரணி யும் சேர்த்து செய்யலாம் இவ்விரண்டு பயிற்சியும் உங்களுக்கு போதுமான அளவு உங்களுடைய ஆண்மை பிரச்சனைகளை சரி செய்கிறது .

இதையும் படியுங்கள்:-

Keto diet என்றால் என்ன? | நன்மைகள் | செய்யும் முறைகள்

.தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்

3.5 2 votes
Article Rating

Santhosh

நான் ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ப்ளாகர் / டிஜிட்டல் மார்கெட்டராக பணியாற்றி வருகிறேன். fitness பைத்தியம், ஊர் சுற்றும் வாலிபன், பாடகர், குழந்தை பிரியர். மேலும் நிறைய இருக்கிறது ஆனால் சொன்னால் நம்ப மாடீங்க:)))

Related Post

Mustard Oil Benefits in Tamil | கடுகு எண்ணெயின் பயன்கள்

பொதுவாகவே நாம் பல்வேறு வகையான எண்ணெய் வகைகளை பயன்படுத்திய போதிலும்  ஒருசில எண்ணெய் வகைகளை  அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்த மறந்து விடுகிறோம். (kadugu ennai benefits in tamil) அவ்வாறான எண்ணெய் வகைகளில் கடுகு என்று சொல்லப்படக்கூடிய ...

Fenugreek Seed Benefits in Tamil | வெந்தயத்தின் நன்மைகள்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் வெந்தயம் (Fenugreek seed benefits in Tamil) இன்றியமையாத பொருளாக எமது வாழ்வில் காணப்படுகிறது. அதாவது நாம் உணவு சமைக்கும்போது  பெரும்பாலும்  வெந்தயத்தை பயன்படுத்துவது காணக்கூடியதாக இருக்கிறது.அவ்வகையில் இந்த பதிவில் வெந்தயத்தின் ...

Asparagus Benefits in Tamil / தண்ணீர்விட்டான் கிழங்கின் பயன்கள்

Asparagus benefits in Tamil :- பொதுவாகவே கிழங்கு வகைகளும் கீரை வகைகளும் மனிதனுக்கு அளவில்லாத பயன்களை தருகின்ற இயற்கையில் அமைந்த அருட்கொடையாகும. அவ்வகையில்  தண்ணீர்விட்டான் கிழங்கு ( Thanneervittaan kilangu benefits in Tamil) அவ்வாறு நன்மைகளை ...

Fennel Seeds Benefits in Tamil / பெருஞ்சீரகத்தின் பயன்கள்

Fennel seeds benefits in Tamil / சோம்பு பயன்கள் :- இன்று நாம் எமக்குத் தேவையான உணவுகளை சமைக்கும் பொழுது உணவில் பல்வேறு வகையான பொருட்களை சேர்த்து சமைக்கின்றோம். அவற்றில் பெருஞ்சீரகம் (Sombu benefits in Tamil) ...

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments